Monday, November 3, 2025

LET US PERCEIVE THE SONG -45

 LET US PERCEIVE THE SONG -45

பாடலை உணர்வோம் -45

அத்தான் என் அத்தான் பாவ மன்னிப்பு [1961] கண்ணதாசன், விஸ்வநாதன்-ராமமூர்த்தி , பி சுசீலா

https://www.youtube.com/watch?v=c_kW2o7LVCM&list=RDc_kW2o7LVCM&start_radio=1 athan en athaan QFR

அத்தான் என் அத்தான் பாடல் குறித்த சுபஸ்ரீ அவர்களி ன் விளக்கம்  வேறு விதமாக  அமைந்துள்ளது .

ஆனால் நமது தகவல் சற்று மாறுபட்டது

அதாவது திரு கண்ணதாசன், திரு.கருணாநிதி இருவரும் வாங்கிய பொரிகடலை காகிதத்தில் இருந்த பாடல்  "கல்லைத்தான் மண்ணைத்தான் காய்ச்சித்தான்

குடிக்கத்தான் கற்பித்தானா "

இது போல் உம்மால் எழுத முடியுமா? என்று                     திரு கருணாநிதி வினவ, கவிஞர் எழுதிய பாடல் தான்

"அத்தான் என் அத்தான்" என்ற தனிப்பாடல். ,

 சில ஆண்டுகள் கடந்த பின், திரையில் வந்து சரித்திரம் படைத்த அற்புதம் அது.

இதன் பின்னணி வெகு சுவாரசியமானது. இக்கவிதைமீது கவிஞருக்கு அளவில்லாத லயிப்பு.

இந்தக்கவிதை பாடலாக உருவெடுக்க வேண்டுமே -கவிஞர் மனதில் இது நிச்சயம் திரையில் ஒலிக்கும் என்று ஆழ்ந்த நம்பிக்கை கொண்டிருந்தார். அன்றைய முன்னணி இசை அமைப்பாளர்கள்  ஜி ஆர் , கே வி எம், சுப்பையா நாயுடு , என இப்பாடலுக்கு இசை அமைத்துத்தர வேண்டுகோள் வைத்தார் கண்ணதாசன். சொல்லி வைத்தார் போல் ஒவ்வொருவராக அவர்கள் கவிதை நல்ல வடிவில் இருக்கிறது ஆனால் எந்த தாளத்திலும் அடங்கவில்லை எனவே இசை அமைக்க சரிப்பட்டு வராது என்று சொல்லிவிட்டனர். கவிஞர் சரி, காலம்    கனியட்டும் என்றது அமைதி கொண்டார். [கவிதையை ராக /தாள கட்டுக்குள் பொருத்தி இசை அமைப்பது அந்நாளைய வழக்கம்].    

பாவ மன்னிப்பு பாடல்கள் உருவாகிக்கொண்டிருந்த நேரம் இந்த உரையாடல் அந்நாளில் பிரபலம்.

கவிஞர் : விசு ஒரு பாட்டு வெச்சிருக்கேன்  . அதுக்கு ட்யூன் போட சொன்னா எல்லா பெரிய [எம் டி] மியூசிக் டைரக்டர் களும் தாளத்துல உக்கார மாட்டேங்குது னு சொல்றா ங்க. நீயாவது போட்டு தாடா டேய் .

விசு: என்னது நான் போட்டு தரவா? ஏங்க- பெரியவங்களே சரியா வராதுனு சொல்லியாச்சு அப்புறம் நான் எப்பிடி --?

கவிஞர்: டேய் நீ என்ன மாவது பண்ணிடுவ, கொஞ்சம் ட்ரை பண்றா. இது பாட்டாயிடுச்சுன்னா சக்கைபோடு போடும் அதுனால, கொஞ்சம் முயற்சி பண்ணு.

விசு: வேல தலைக்குமேலே இருக்கு இதை வேற முயற்சி பண்ணனுமா என்று இழுக்க

கவிஞர்: ஆமா 2 நிமிஷத்துல போட்டுட்டேன் 3 நிமிஷத்துல முடிச்சுட்டேன் னு சொல்வியே, இதை கொஞ்சம் பாருன்னா - ரொம்ப அலட்டிக்கிற என்றுஉசுப்பேத்தினார்.

விசு : எங்க குடுங்க என்று பேப்பரை வாங்கி பார்த்து சற்று மிரண்டுதான் போனார் [அத்தான் , பொத்தான் , செத்தான் , என்னய்யா இது - கொஞ்சம் டைம் குடுங்க என்றார்.]

விசுவின் இசை ஆர்வம் உலுக்கியெடுக்க, தாளத்துல உக்காராட்டி என்ன, தாளமே இல்லாம போட்டா? என்று யோசித்தார்.

கவிதையின் போக்கிலேயே மெல்ல ஊர்ந்து நெளியும் ராக அமைப்பை பிடித்துவிட்டார். அவ்வளவு வரிகளையும் பாவத்தைக்கொண்டே பாட வைத்து -அந்தப்பாடல் இமாலய வெற்றி கண்டது.

பாடலைக்கேட்ட ஏவிஎம் செட்டியார் இந்தப்பாட்டு மெல்ல ஊறுது டிபன் சாப்பிட்டுவிட்டு  வரவரைக்கும் டைம்  இருக்கும்போல இருக்கே என்றார்.

காதல்மனப்பாடல், பெண் குரலிலிவ்இவ்வளவு மென்மையும் பாவமும் மிளிர்ந்த வேறு பாடல்- தெரிந்தால் சொல்லுங்கள்.

இப்பாடலின் நயத்தையும் மேன்மையையும் மென்மையையும், ரசித்த, இந்திப்பாடகி லதா மங்கேஷ்கர் தன்னையும் மறந்து சுசீலாவைப்பாராட்டினார் என்றால் பாருங்களேன்.

மிகமிக சம்பிரதாயமாக இடை இசையில் தபலா லேசாக ஒலிக்க , பாடலை மிதக்க வைத்தவை-- பாவம் மிகுந்த நிறுத்தி நிதானமாக  சொற்களுக்கு இடை வெளி கொடுத்து நாணம் மேலிட பாடிய பாங்கு .அந்தப் பாங்கை என்ன சொல்ல? அப்படிப் பாட வைத்த வித்தகன் -விஸ்வநாதனை என்ன சொல்லி பாராட்டுவது? 

  அதிர்வே இல்லாமல் கேட்பவர் மனங்களை அதிர வைத்த இடை இசை. அதுவும், அக்கார்டியன், க்ளாரினெட் இரண்டும் உடலும் நிழலும் என பற்றித் தொடர்ந்த இசைத்தழுவல் மனதை மயில் இறகால் வருட, குயில் குரல் நம்மைதாலாட்ட , சும்மா போனவனுக்கும் காதல் வந்துவிடும். 

அதுவும் சாவித்திரியும் தேவிகாவும் காட்டியுள்ள முக, கண், உதடு மென் அசைவுகள் தமிழ்சினிமா பல நல்லவற்றை முற்றாகத்தொலைத்துவிட்டு, தள்ளாடுவது ஏன் என சொல்லாமல்சொல்வதை கவனியுங்கள்.

பாடலின் பல்வேறு சிறப்புகளை, சுபஸ்ரீ அவர்கள் விளக்கியுள்ளார். வேண்டுமென்றே தான், முதலில் QFR கொடுத்துவிட்டு பின்னர் திரைக்காட்சியின் இணைப்பைக்கொடுத்துள்ளேன்.

கண்ணதாசனும் -விஸ்வநாதனும் -"MADE FOR EACH OTHER" என்பது சத்திய வாக்கு.

https://www.youtube.com/watch?v=J6a8_HC7gz4 ATHAN EN ATHAAN

PAAVAMANNIPPU 1961 KD V R PS

https://www.youtube.com/watch?v=FKJMX1jXGrM&list=RDFKJMX1jXGrM&start_radio=1 இந்த பாடல் பற்றி எம் எஸ் வி சொல்வதில் இருந்து இது எப்போதோ எழுதி வைத்திருந்த பாடல் என்பது தெளிவாகும்

வேறொரு பாடலுடன், பின்னர் பேசுவோம்.

நன்றி

அன்பன் ராமன்

No comments:

Post a Comment

LET US PERCEIVE THE SONG -45

  LET US PERCEIVE THE SONG -45 பாடலை உணர்வோம் -45 அத்தான் என் அத்தான் பாவ மன்னிப்பு [1961] கண்ணதாசன், விஸ்வநாதன்-ராமமூர்த்தி , பி சுச...