Monday, November 17, 2025

LET US PERCEIVE THE SONG -47

 LET US PERCEIVE THE SONG -47

பாடலை உணர்வோம் -47

பொட்டு வைத்த முகமோ [சுமதி என் சுந்தரி 1970] கண்ணதாசன்  எம் எஸ் வி, எஸ் பி பாலசுப்ரமணியம்,          பி வசந்தா

யாருக்கு எது எப்போது நடக்கவேண்டுமோ அது அப்போது தானே நடக்கும். என்ன வேதாந்தம் பேசுகிறாய் என்கிறீர்களா ? இல்லை இல்லை இந்தப்பாடலைப்பற்றித்தான் குறிப்பிடுகிறேன். ஆம் இது இயக்குனர் ஸ்ரீதர் , வேண்டாம் என ஒதுக்கிய பாடல். ஆனால் திரு கோபுவும் திரு சி வி ராஜேந்திரனும் [இது நல்லாயிருக்கு நம்ம எடுத்து யூஸ் பண்ணிக்குவோம் என்று ஸ்ரீதர் /எம் எஸ் வி இருவரிடமும் சொல்லிவிட்டு [எம் எஸ் வியிடம் இந்தப்பாட்டை வேறெங்கேயும்  குடுத்துடாதீங்க என்ற வேண்டுகோளுடன் கைப்பற்றி வைத்துக்கொண்டு 1 1/2 -2 ஆண்டுக்குள் "சுமதி என் சுந்தரி" ல் பயன்படுத்தி இமாலய வெற்றி கண்ட பாடல். அது மட்டுமா எஸ் பி பி சிவாஜி கணேசனுக்கு பாடிய முதல் பாடல். எஸ்பி பி காட்டிய .  அதீத திறமையும் உச்சஸ்தாயி முழக்கமும்

தரையோடு வானம் ,மலைத்தோட்ட பூவில்,  மறுவீடு தேடி , ஒளியாகத்தோன்றி  மற்றும்

கொஞ்சி குழையும்

 புன்னகை புரிந்தாள , கைவீசி வந்தாள் , நிழல் போல் மறைந்தாள் போன்ற சொற்களை எப்படி காதல் மணம் கமழ பாடியிருக்கிறார் பாருங்கள், பாடலுக்கு உயிரூட்டிய பின்னாளைய வசீகரன் எஸ் பி பாலசுப்ரமணியம் என்பதை எம் எஸ் வி உருகிஉருகிப்பேசும்போது வியப்பாக இருக்கும். இப்பாடல் நெய்க்கு தொன்னை ஆதாரமா தொன்னைக்கு நெய் ஆதாரமா என்ற வகை பாடல் இதில் 2 நெய் ஒரு தொன்னை என்பது எனது பார்வை.

இதில் தொன்னை கவிதையும், இசையும்கலந்த 2 அடுக்கு , நெய் எஸ்பிபி மற்றும் வசந்தா வின் ஹம்மிங். இப்பாடலில் பாலு ஒரு நளினம் என்றால் வசந்தா ஒரு மறுக்க வொண்ணாத சௌந்தர்யம் யாரைச்சொல்வது ?

வார்த்தைக்கு வார்த்தை உணர்வு மேலிட ட்யூன் அமைத்துள்ளார் எம் எஸ் வி, அதிலும் திடீரென்று உச்சஸ்தாயியில் சரணத்தை துவக்கி [டி எம் எஸ் இல்லாத குறையை உணர இயலாத] கம்பீரத்தை பாலுவின் குரலில் வடித்து   எஸ் பி பையை ஒரு மெகா பாடகனாக வடிவமைத்தவர் மெல்லிசை மன்னர். எத்துணை வெற்றிப்பாடல்கள்   எஸ் பிபி க்கு? அதிலும் இப்பாடல் ஒரு தனி ரகம் காதல் பொங்கும் பாவம் ஈடுகொடுத்து ஹம்மிங்கில் ஒரு பாடலையே சுமந்த பி வசந்தா -விசேஷ லால் .   லால் என்று விரைந்து வெகு துல்லியமாக எதிரொலி போல் வந்து விழுந்த நளினமான பெண் குரல்.

இசை அமைப்பை சொல்லவே வேண்டாம் அவ்வளவு மென்மையும் விரைவும் குழைவும், சித்தார் குழல் மற்றும் என்று வசந்தா குரல்கொடுக்க, சித்தார் குழல் பின்னி ஒலிக்க  ,வயலின்களின் தழுவும் ஒலி என எப்படிப்பார்த்தாலும் ஒரு தனித்துவமான பாடல். ஆனால் நம் மக்கள் சிவாஜி பாடல் என்று 2 சொல்லில் பேசி மகிழ்வர். டூயட்டில் ஒருவர் பாட ஒருவர் ஹம்மிங் செய்து சமநிலை எட்டி, வியப்பை படர விட்ட 1970ம் ஆண்டின் மகோன்னதம். பல முறை கேளுங்கள் பலரின் உழைப்பு சற்றேனும் புலப்படும்

பல தரப்பட்ட பார்வைகளை உணர கீழே இணைப்புகள் தரப்பட்டுள்ளன. ஆழ்ந்து அமைதியாகக்கேளுங்கள்

https://www.youtube.com/watch?v=kTtjgzFEvbg movie song

https://www.youtube.com/watch?v=5XYG9MpFkSE&list=RDHSk9AtOQiWo&index=2 pottu vaitha spb stage

QFR SONG https://www.youtube.com/watch?v=udGN35AK4Ug

நன்றி   அன்பன் ராமன் 

 

No comments:

Post a Comment

LET US PERCEIVE THE SONG -47

  LET US PERCEIVE THE SONG -47 பாடலை உணர்வோம் -47 பொட்டு வைத்த முகமோ [ சுமதி என் சுந்தரி 1970] கண்ணதாசன்   எம் எஸ் வி , எஸ் பி...