TONIC PERCUSSION -3
தாளத்தில் நிற
மற்றம்-3
Song starts on brisk
beats
அதிரடி துவக்கம்
செய்த பாடல்கள்
பொதுவாக தாளம்
ஒரு
ராகத்தையோ
அல்லது
ஒரு
இசையின்
அமைப்பையோ
பின்பற்றி
தொடரும்
ஒரு
இசை
மரபு.
மாறாக தவில்
என்னும்
தாளக்கருவி இடி முழக்கம்
போல்
துவங்க
அதன்
பின்னரே
சுதாரித்துக்கொண்டது
போல
பீ
பீ
என்று
நாதஸ்வரத்துக்கு
சுய
நினைவே
வரும்.
அவ்வகையில்
தவில்
தான்
முன்னெடுப்பு
செய்யும்
தலைவன்
போன்றது
.
திரை இசையிலும் இதுபோன்றே தாளத்தில் பாடலைத்துவக்கும் உத்தி உண்டு. அதற்கென திரு எம் எஸ் வி கையாண்ட முத்திரைகள் பலவாறானவை. இசை அமைப்பாளர்களே கூட .எம் எஸ் வி பற்றி சொல்லும் போது 'அவர் என் ன வேண்டுமானாலும் செய்வார் 'என்று சொல்வர். ஏனெனில், அவர் பலதருணங்களிலும் பாடலை மெருகேற்றுவதுதான் முக்கிய பணி என்றே செயல் பட்டவர்.
அதனால் தான்
அவர்
களப்படுத்திய
பல
உத்திகளை
இன்றும்
கூட
அதே
அளவு
நேர்த்தி
/துல்லியம்
இரண்டையும்
பல
இசை
அமைப்பாளர்கள்
கையிலெடுக்க
தயங்கி
நிற்பதை
உணரலாம்.
மேலும்
எம்
எஸ்
வியின்
தனித்துவம்
ஏன்
மிளிர்கிறது
என்றால்
ஒரே
உத்தியை
அவர்
இரண்டாம்
முறை
செய்ததை
பார்த்ததில்லை.
எப்போதும்
புதிய
உருவம்
கொடுப்பதில்
தலை
சிறந்தவர்
திரு. எம் எஸ்
வி
அவர்கள்.
அவரது ஆக்கங்களில் சில
இன்றைய
பதிவினை
அலங்கரிக்கின்றனர்.
இவற்றைக் கேளுங்கள்
என்று
இணைப்பு
கொடுத்தால்
நான்
பாடலைப்பார்த்தேன்
[எனது
பேவரிட்
பாடல்
, அந்த
நடிகர்
கிழித்திருக்கிறார்
இந்த
நடிகை
அட்டகாசம்
என்று
'பழைய
குருடி
, கதவைத்திறடி'
வகை
சிலாகிப்புகள்
ஏராளம்.
நான் சொல்வது
ஒன்று,
அன்பர்கள்
செய்வது
வேறொன்று.
உங்களுக்கு
பாடல்
தெரியாது
என்றெண்ணி
இணைப்பு
தருவதல்ல
நான்
செய்வது.
குறிப்பிட்ட
விசேஷ
அம்சங்களை
ஊன்றி
கவனியுங்கள்
என நான்
பல
முறை
சொன்னாலும்
மீண்டும் அந்த நடிகர்
கிழித்திருக்கிறார்
இந்த
நடிகை
அட்டகாசம்
என்று
'பழைய
பல்லவி'
ஒலிக்கும்
போது
4 அறை
அறைந்தால்
என்ன
என்று
தோன்றும்.
எனவே,
ஒரு
பாடல்
எதற்காக
இடம்
பெற்றுள்ளது
என்ற
நுண்
தகவலுக்கு
முக்கியத்துவம்
அளித்து
பாடலை
செவிமடுத்துக்கேளுங்கள்
[வீடியோ
வை
பாடலின்
நுணுக்கத்தை
புரிந்து
கொண்ட
பின்
பாருங்கள்.
பாடல்
மேலும்
பரிமளிக்கும்.]
அன்று
முதல்
இன்று
வரை
பாடலை
பலர்
உள்வாங்கி
சரியாக
புரிந்துகொள்ளவில்லை
என்பதையே
நாம்
இன்னும்
புரிந்துகொள்ளவில்லை.
இப்படி
இருந்தது
தான்
இன்றைய
தக்கடி
புக்கடி
பாடல்களுக்கு
வித்திட்டது.
இவர்கள்
என்ன
பாடலை
ஆழ்ந்து
கேட்கிறார்களா
? எதையாவது
கத்திவிட்டுப்போனால்
ஆயிற்று
என்று
தமிழ்
சினிமாப்பாடல்
எப்போதோ
சாக்கடையில்
அமிழ்ந்து
விட்டது.
உபயம்
ரசிகர்கள்,
உபாயம்
சினிமா மற்றும் பாடல் தயாரிப்போர் .
சரி நாம்
தேர்வு
செய்துள்ள
இன்றைய
பாடல்கள்,
அதிரடி
துவக்கம்
செய்து
இன்றுவரை
கோலோச்சுபவை.
தெய்வத்தாய் படத்தில்
வந்த
'ஒரு
பெண்ணைப்பார்த்து
' பாடல்
வாலியின்
யாப்பு
வி-ரா
வழங்கிய
அதிரடி
போங்கோ
/ ட்ரம் ஜமாய்ப்பு எப்போதோ
64 ஆண்டுகளுக்கு
முன்னர்.
தாள
நடையின்
வேகம்
மற்றும்
கருவிகளின்
ஒருங்கிணைப்பு
, மற்றும்
இறுதியில்
அமைந்துள்ள
தாள
விறுவிறுப்பு
இவை
தனித்துவமானவை
https://www.youtube.com/watch?v=RfhgYO1GrKA ORU
PENNAIPPARTHU DEIVATHAI 1963 VALI VR TMS HEAVY BEAT START
இப்படி மழை பொழிவது போல் போங்கோ வாசிக்க முடியுமா?
1964 லி லேயே புதிய பறவையில் , கண்ணதாசனின்
'பாத்த ஞாபகம்' பாடலில் விஸ்வநாதன் ராமமூர்த்தி கொடுத்த சிலிர்க்கவைத்த தாள துவக்கம் பெரிதும் பேசப்பட்டது. போங்கோ தமிழ் சினிமாவில்
எடுத்த பெரும் அவதாரங்களுக்கு, பிதாமகர் எம் எஸ் வி
தான் என திரையுலகம் நன்கு அறியும்
https://www.youtube.com/watch?v=JQJs1hs99Wk PARTHTHA
GYABAGAM PUTHIYA PARAVAI 1964 KD VR PS
சொல்லவே வேண்டாம் இந்தப்பாடலுக்காக சினிமா பார்த்தவர்கள் பலர். பாடலுக்காகவா ? பாடலுக்கு மட்டும் அல்ல எம் எஸ் வி என்ற மனிதரை பேசும் படம் பத்திரிகையில் ஸ்டாம்ப் சைஸ் போட்டோவில் பார்த்து அகமகிழ்ந்தோருக்கு, மனிதர் full suit அணிந்து சுறுசுறுப்பாக தனது ஆர்கெஸ்டராவை ஆட்டிப்படைக்கும் அழகை உயிரோட்டமாக திரை முழுவதும் பார்ப்பதென்றால் விஸ்வரூபம் தான் அது அந்நாளைய ரசிகர்களுக்கு.. பல இசைக்கலைஞர்களை /வாலி யை காணவே படம் பார்த்தோர் ஏராளம்.
பாடலின் துவக்கத்தில் நோயல் க்ராண்ட் , [சங்கர்] கணேஷ் முன்னவர் ட்ரம் பின்னவர் போங்கோ, பட்டையைக்கிளப்பிய தாளக்கட்டு சர்வர் சுந்தரம், வாலி, வி-ரா டி எம் எஸ்
https://www.youtube.com/watch?v=-u2OHSu3Tno AVALUKKENNA
SERVER SUNDARAM 1965 VALI VR TMS LRE
போங்கோவா குழலா என்று குழப்பும்
கூட்டிசையில்
துவங்கி
கொள்ளை
கொண்ட
“குயிலாக
நான்
இருந்தென்ன” -செல்வமகள் படத்தில்
வாலியின்
யாப்பு,
இசை
எம்
எஸ்
வி,
சுசீலா
டி
எம்
எஸ்
வழங்கிய
டூயட்.
https://www.youtube.com/watch?v=rjBZxEcyZUA KUYILAAGA
NAN IRUNDHENNA SELVAMAGAL 1967 VALI , MSV , PS TMS
மென்மையாக துவங்கி விரைந்து பயணித்து தீப்பிடித்தார்
போல வேகம் கொண்ட தாளக்கட்டு "சொர்க்கம் பக்கத்தில் " எங்கமாமா படத்தில் எம்
எஸ் வி காட்டிய அற்புத இசை க்கோர்வையும் தாள ஜாலமும்
https://www.youtube.com/watch?v=7KqCOT4Qito SORGAM
PAKKATHTHIL ENGA MAMNA1970 KD MSV TMS LRE
இவற்றை போல இன்னும்
ஏராளம்
இவை
ஒரு
சிறு
சாம்பிள்
தான்.
பாடல்
களை
க்கேளுங்கள்
நன்றி அன்பன்
ராமன்
**************************************************
No comments:
Post a Comment