BEATS BEAT RETREAT
[MILD OR NO BEATS]
ஒதுங்கிய /ஒடுங்கிய தாளம்
தாளம் திரைப்பாடல்களில் முக்கிய அங்கம்;அது பல அவதாரங்களை மேற்கொள்ளும். அது தெரிந்தது தான் எனினும் 'அடக்கி வாசித்தல் 'என்றொரு சொல்லாடல் உண்டு. அப்படி அடக்கி வாசித்தலில் வெவ்வேறு வகைகள் உண்டு. அதாவது அடங்கி, அமர்ந்து, தாழ்ந்து
மடங்கி , முடங்கி , ஒடுங்கி ஒதுங்கி என மாறுபட்ட அமைப்புகளில் தாளங்கள் உலவி வந்துள்ளன . அவற்றில் கருவிகளின் ஒலி எழுப்பும் பண்பும் மிக முக்கியமானது. சாப்ட் டச் எனப்படும் மென் வாசிப்புகளுக்கென்றே கருவிகளும் உத்திகளும் உள்ளன.
இவ்வளவு இருந்தாலும் அனைத்தையும் மீறி தாளமே வேண்டாம் அல்லது தாளம் ஒலிப்பது கூட ரகசியம் பேசுவது போல் ஒலித்த அல்லது தாளமே இல்லாமல் அமைந்த பாடல்களும் உண்டு
அன்பு மலர் ஆசை மலர் [பாச மலர் 1961]
பாடல் எம் எஸ் வியின் குரலில் . மனிதர் எவ்வளவு உணர்ச்சி கொப்பளிக்க பாடியுள்ளார் . ஏன் பாடகர்கள் அவரிடம் அச்சம் கொள்கிறார்கள் என்பது இப்பாடலில் விளங்கும். அதிலும் "தாய்ப்பறவைவாடுமே என்று வானுயர ஓங்கி
ஒலிக்கிறாரே அந்த இடத்தில் குரல் உயர துயரம் பீறிட பாடுகிறார். பாடல் முடிந்ததும் எதையோ இழந்த உணரவே நம்மை வாட்டுகிறது. இப்பாடலில் தாளமே இல்லை . இதோ இணைப்பு
https://www.youtube.com/watch?v=P_eTy-vY13w
Anbu malar [pasa malar 1961] kd VR msv sings title song
எங்கிருந்தோ ஆசைகள்
சந்திரோதயம் டி எம் எஸ் சுசீலா
வெகு நேர்த்தியான மென்மையான டூயட் .பாடலின் போக்கே ரம்யாம் தாளம் மிக மிக ஒடுங்கிய அமைப்பில் அதுவும் ஆண் குரலைத்தான் பிரஷ் ட்ரம் லேசாக தொட்டு ஒலிக்கிறது [நோயல் க்ராண்ட் ட்ரம்மில் கொசு அமர்வது போன்ற வாசிப்பு
-அசகாய சூரன் அவர் .
இணைப்பு
https://www.youtube.com/watch?v=pw9dLWvrL0w engirundho aasaigal no percussion only rhythm
strings
அத்தான் என்
அத்தான்
இப்பாடலில் சிறப்பே
தாளத்துக்கு
அடங்காது
என்ற
அறியப்பட்ட
கவிதையை
தாளமில்லாவிட்டால்
என்ன
என்று
உருவாக்கிய
சிறப்பு
தானே.
இடை
இசையில்
மட்டும்
லேசாக
தபலா
பேச
ஏனைய
தருணங்களில்
நம்மை
அடக்கி
கட்டிப்போடும்
இசைக்கோர்வை
இப்பாடல்
[பாவ
மன்னிப்பு
-1961] இணைப்பு
இதோ
https://www.youtube.com/watch?v=J6a8_HC7gz4
aththaan en aththaan no beats until yenaththan ennai paaraththaan
கண்ணன் எந்தன் காதலன் [ஒரு தாய் மக்கள் ]
அருமையான மென்மையான தொய்வில்லாத தாலாட்டும் வகை டூயட். சீராக பயணிக்கும் பாடல் பல்லவியில் தாள மே இல்லை . சரணத்தின் நுழைவில் மெல்ல தலை காட்டும் தபலா . பலமுறை கேட்டாலும் சலிப்பே தோன்றாத உயர் ரக இசை -வேறு யார் எம் எஸ் வி தான் .
இணைப்பு இதோ
https://www.youtube.com/watch?v=A4g68-N4G6Q KANNAN ENDHANKAADHALAM ORU THAAI
MAKKALMSV VALI TMS PS PARTIAL BEATS
No comments:
Post a Comment