Wednesday, December 10, 2025

GOOD- BUT A LITTLE OFF MEMORY [-18]

 GOOD- BUT   A LITTLE OFF MEMORY [-18]

நல்லவை ஆனால் அறிந்தும் சற்றே மறந்தவை[-18]  

வணங்காமுடி 1957

எவ்வ்வளவு நேர்த்தியான தொகுப்பு -சொல்லில் கௌரவம் இசையில் நளினம் , மென்மை மற்றும் காட்சியில் அப்படி ஒரு யதார்த்தம் இவ்வளவு 1957 ம் ஆண்டின் வணங்காமுடி படத்தில் வந்த "மோஹனப்புன்னகை செய்திடும் நிலவே " என்ற தஞ்சை ராமையா தாஸ் எழுதிய கவிதை. அதாற்கு இசை ஜாம்பவான் திரு ஜி ராமநாதன் வழங்கியுள்ள இயல்பான இசை. அன்றைய ஒலி பதிவு கருவிகளின் திறன் குறைவு என்பதைத்தவிர சொல்வதற்கு குற்றம் எதுவும் தென்படவில்லை. காட்சியில் சாவித்திரியும் சிவாஜி கணேசனும் எவ்வளவு இயல்பாக உலவியுள்ளனர்  . இணைப்பு கீழே

https://www.youtube.com/watch?v=qh2rU3ap8Zg mohana punnagai vanangamudi 1957 thanjai GR TMS PS

 காத்திருந்த கண்கள் 1964

ஓடம் நதியினிலே -கண்ணதாசன் விஸ்வநாதன் -ராமமூர்த்தி , சீர்காழி கோவிந்தராஜன் .

ஹிந்தி திரையில் புகழ் பெற்ற இசை அமைப்பாளர் திரு நௌஷத் பெரிதும் ரசித்த பாடல் விஸ்வநாதன்-ராமமூர்த்தியின் ஆக்கம். பாடலில் குரலே பிரதானம் இரண்டே கருவிகள் , ஏற்ற இறக்கங்கங்கள் நிகழ்த்திய இசை சாம்ராஜ்யம் . கேட்டு மகிழ இணைப்பு இதோ 

https://www.youtube.com/watch?v=Az3ftle3ODU ODAM NADHIYINILE KAATHTHI KANGAL

KD VR SG

வாழ்க்கை படகு

கண்களே கண்களே [1965] கண்ணதாசன் , வி-ரா , பி பி ஸ்ரீனிவாஸ் 

காதலில் தோல்விகண்டதாக எண்ணி புலம்பும் ஆண் , பஞ்சமில்லாமல் வசை பாடும் கவிதை, நெஞ்சம் நிறைந்த துயரை வடித்துக்கொட்டும் இசை, குரலில் சோகம், மனதில் குமுறல் என்று முழக்க மிட்ட அந்நாளைய கீதம் இணைப்பு இதோ 

https://www.youtube.com/watch?v=w0CvSTAxQ6Y KANGALE VAAZH PADAGU 1965 KD VR PBS

வாழ்க்கை படகு [1965]

காதலில் குதூகலிக்க பெண்ணுடன் நெருங்கி ப்பாடும் ஆண் . பாடலில் பெண் பேசாமடந்தை [தேவிகா]  அனால் முக பாவத்தில் உணர்வைக்கொட்டி நடித்த பங்கு சிறப்பு. இதற்கான பாடலின் மையடக்கருத்து திருக்குறளில் இருந்து கையாளப்பட்டது பட்டவர்த்தனம்

"உன்னை நான் பார்க்கும் போது மண்ணை நீ பார்க்கின்றாயே

விண்ணை நான் பார்க்கும் போது ன்னை நீ பார்க்கின்றாயே

நேரிலே பார்த்தால் என்ன நிலவென்ன தேய்ந்தாபோகும் ,

புன்னகை புரிந்தாலென்ன பூ முகம் சிவந்தா போகும் ? [கவியரசு ] இதில் ஓவ்வொரு சொல்லுக்கும் தேவிகா     கா ட்டிய உடல் /மன /முக /விழி மொழிகள் வெகு சிறப்பு.

வள்ளுவனின் குறள் இதோ 

யான்நோக்கும் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால் தான்நோக்கி மெல்ல நகும். (திருக்குறள் - காமத்துப்பால்-குறிப்பறிதல்-1094 )

https://www.youtube.com/watch?v=hJVHq886BOE NETRU VARAI -- VAZH PADAGU KD VR PBS

இசை அமைப்பில் எண்ணற்ற பரிமாணங்கள் இன்றைய பதிவில் . அவற்றை ஆழ்ந்து கவனியுங்கள். மேலோட்டமாகப்பார்த்துவிட்டு கடந்து செல்லாதீர்கள். 60 ஆண்டுகளுக்கு முன்னரே இசை எட்டிய உயரம் எத்தகையது -யோசியுங்கள்

நன்றி அன்பன் ராமன்  

*****************************************************************************

No comments:

Post a Comment

BEATS BEAT RETREAT

  BEATS BEAT RETREAT [MILD OR NO BEATS] ஒதுங்கிய / ஒடுங்கிய தாளம் தாளம் திரைப்பாடல்களில் முக்கிய அங்கம் ; அது பல அவதாரங்களை ம...