GOOD- BUT A LITTLE OFF MEMORY [-16]
நல்லவை ஆனால் அறிந்தும் சற்றே மறந்தவை[-16]
இன்றைய பதிவின் 3 பாடல்களுமே
வெவ்வேறு வகையில் சிறப்பு கொண்டவை. ஒவ்வொன்றும் ஒவ்வொரு வேகம் எனும் டெம்போ கொண்டிருப்பினும், கேட்க ரம்மியமானவை . அவற்றின் பண்புகளை பார்ப்போம்
முத்துப்பல் சிரிப்பென்னவோ
[பூக்காரி 1972] வாலி எம் எஸ் வி டி எம் எஸ் சுசீலா
தாளத்தின்அதிரடி வேகமும்
சிறப்பான ட்யூன் அமைப்பும் ஒருபுறம் வசீகரிக்க மறுபுறம் விரைந்து போட்டிபோட்டுப்பயணித்த
இசைக்கருவிகள்,அதில் இடையில் ஆங்காங்கே கோரஸ் என தனி இசை சாம்ராஜ்யம் படைத்த பாடல்.
அது காட்டியுள்ள வேகம் அலாதி சுவை கூட்டும் அமைப்பு
பாடலுக்கு இணைப்பு இதோ
https://www.youtube.com/watch?v=epnn7YFOBhE muthuppal
pookkaari vaali MSV tms ps
simple
magic jj sings
ஓ மேரி தில் ரூபா [சூர்ய காந்தி 1973] வாலி எம் எஸ் வி, டி எம் எஸ், ஜெயலலிதா
அருமையான டூயட் அதிலும் ஜே காட்டியுள்ள ஆதிக்கம் சிறப்பானது. பாடலில் திடீரென நுழையும் இசைக்கருவிகளின் லயம் பாடலின் சுவையை மேம்படுத்த , தாளம் வேறுவகையான ஈர்ப்பை வெளிப்படுத்த நல்ல அனுபவம் இப்பாடல். காட்சியிலும் நளினம் .கேட்டு உணர இணைப்பு இதோ
https://www.youtube.com/watch?v=UWnc5-xeaT0 o meri dilroopa vali msv tms jj
அம்பிகை நேரில் வந்தாள் [இதோ எந்தன் தெய்வம் -1973] வாலி ,எம் எஸ் வி , எஸ்பி பாலசுப்பிரமணியன்
, சுசீலா
மற்றுமோர் டூயட் நல்ல ஸ்தாயியில் எஸ்பிபியால் பாடப்பட்ட பாடல். பாடலின் தாளம் சிறப்பு அதுவும் தவில் போங்கோ கூட்டணி. ட்யூனின் அசைவுகள் நம்மை ஆட்கொள்ளும் . ரசிக்க இணைப்பு இதோ
https://www.youtube.com/watch?v=EAE5Ha1DKLA
Ambigai neril vandhaal idho endhan deivam vali msv spb ps [thavil, bongo
]
*****************************************************************************
No comments:
Post a Comment