Wednesday, December 3, 2025

CHORUS

 CHORUS

கோரஸ் என்னும் குரல் ஒலிகள்

தமிழ் சினிமாவில் கோரஸ் என்பது அவ்வப்போது பாடல்களில் இடம் பெற்று வந்துள்ளது என்பது நாம் அறிந்த ஒன்றே .ஆனாலும் கோரஸும் திரு எம் எஸ் வியும் நன்றி மறவாத நண்பர்கள் எனில் மிகை அல்ல மேலும் அவர் எங்கே எப்போது எப்படி கோரஸ் அமைப்பார் என்பது எந்த சட்டத்திற்கும் அடங்காதது .அது மட்டுமல்ல அவர் கோரஸைக்கையாளும் விதம் மிகுந்த நுணுக்கமான அனுககுமுறை என்பது அடியேனின் புரிதல். ஏன் என்றால் அவர் வடிவமைத்த கோரஸ் ஒவ்வொன்றும் வேறு எந்த பாடலுக்கும் பொருந்தாதுஅப்படி ஒரு தனித்துவம்

சரி நன்றிமறவாத நண்பர்கள் என்று ஏன் குறிப்பிட்டேன்?  அவரது ஆரம்ப சினிமா வாழ்வில் நிலையான வாய்ப்பு இன்றி ஆனால் இசை ஒன்றையே நம்பி அனைத்து இசை அமைப்பாளர்களுக்கும் முகம் சுளிக்காமல் உதவி செய்த பையனாக வலம் வந்தவர்  தான் விஸ்வநாதன். அவர் இனிஷியல் எம் எஸ் என்பதுகூட வெளியே தெரியாத காலம். வறுமையின் பிடியில் சிக்கி உழன்ற நிலையில் சேலம் மாடர்ன் தியேட்டரில் "கோரஸ் பாடல் பாடியாவது  பிழைத்துக்கொள்ள எண்ணி கே வி மஹாதேவனிடம் வாய்ப்பு கேட்டு நின்ற நிலையில் கே வி எம் சொன்னது "விஸ்வநாதா வேண்டாம் இன்று கோரஸ் பாடினால் உன்னை கோரஸ் பாடகனாக்கி விடுவார்கள். உன் திறமைக்கு நீ நல்ல உயரத்துக்கு வருவாய் எனவே சென்னைக்குப்போ அங்கே ஏதாவது இசைக்குழுவில் சேர்ந்துகொள், நான் அங்கு வந்தபின் பார்த்துக்கொள்வோம் என்று  உரிய ஆலோசனை வழங்கினார் மாமா எனும் கே வி எம்

சட்டை மற்றும் சென்னைக்கு டிக்கட் கொஞ்சம் பணம் கொடுத்து அனுப்பிவைக்க பின்னர் நடந்தவை சரித்திர நிகழ்வுகள். கோரஸ் பாடாவிட்டாலும், கோரஸை ஒரே  நடையில் இல்லாமல் பல களங்களில் , காலங்களில் ஒலிக்கசெய்த  பெருமை என்ற நன்றிக்கடன்,     திரு எம் எஸ் வி   கோரஸுக்கு செலுத்திய நன்றி என்றே சொல்ல தோன்றுகிறது.  அவ்வகை கோரஸ்களை விரிவாக பேசுவோம் அதற்கு முன் அப்படி சில கோரஸ்களை திரு பாலஷங்கர் விளக்க , கேட்டு மகிழ இணைப்பு கீழே

https://www.youtube.com/watch?v=yXm5XqEaT0s  songs chorus embellishment  BALASHANKAR 

https://www.youtube.com/watch?v=gy4L5_t6_M0 MSV Traces song link from different periods

------------------------------------------------------------------------------------------------

No comments:

Post a Comment

CHORUS

  CHORUS கோரஸ் என்னும் குரல் ஒலிகள் தமிழ் சினிமாவில் கோரஸ் என்பது அவ்வப்போது பாடல்களில் இடம் பெற்று வந்துள்ளது என்பது நாம்...