Thursday, January 22, 2026

GOOD- BUT A LITTLE OFF MEMORY [-24

 GOOD- BUT A LITTLE OFF MEMORY [-24]  RICHLY MELODIOUS -4

போக போக தெரியும் [சர்வர் சுந்தரம் 1964] கண்ணதாசன் , வி ரா, பி பி எஸ் , பி எஸ்

இந்தப்பாடலை ஏதோ சாதாரண டூயட் என்று நான் கணித்திருந்தேன். ஒரு முறை எம் எஸ் வி இடம் இந்தப்பாடலை குறித்து பேச துவங்கியதும் அவர் சொன்னார் "படத்தின் மையப்புள்ளியே இந்த பல்லவி தான்" என்று.

எனது  குழம்பிய பார்வை  கண்டு "என்ன யோசிக்கிறீங்க ? " பல்லவியை கவனியுங்க போக போக தெரியும்னு சொல்றது  யார் கே ஆர்  விஜயாவை  கல்யாணம் பண்ணிப்பாங்க [நாகேஷா ,முத்துராமனா ங்கற முடிச்சுதான் இந்தபல்லவி என்றார் எம் எஸ் வி..

ஆனா முத்துராமன் தானே டூயட் பாடறார்  ? -நான்

சினிமான்னாலே அப்படித்தானே  டூயட் பாடுவார் ஆனா வேற ஒருத்தர் மணம் முடிப்பார் -எம் எஸ் வி

இசை அமைப்பு ஓடிப்பிடித்து விளையாடும் பாங்கினை பேசுவதை உணரலாம். வெகு நேர்த்தியான டூயட் குன்றாத இளமை துடிப்பான இசை கேட்டு மகிழ இணைப்பு இதோ

https://www.youtube.com/watch?v=LY2TAyJAEO4  Poga poga [Server sundaram 1964] KD VR , PS PBS

CHASING FLOW TUNE/ ORCHESTRATION

"ரோஜா மலரே ராஜ குமாரி"   [வீரத் திருமகன்-1962 ] கண்ணதாசன் , வி ரா ,               பிபி எஸ் , பி எஸ்

இடை இசையின் துடிப்பிற்கு இலக்கணம் சொன்ன எம் எஸ் வி யின் கம்பீரம் இப்பாடலில் தனிச்சிறப்பு

காதல் பொங்கி மேகமென மிதக்கும் பாடல் இது. ஆடு மாடு மேய்ப்பவன் குழல் இசைக்க , காற்றில் மிதந்து வந்து காதலர்களை பீடிக்க , அவர்கள் பாடத்துவங்க அற்புதமான ஹம்மிங் , பின்னர் ஒலிக்கும் ஆண்  குரல்

"ரோஜா மலரே ராஜ குமாரி" 

வரிக்கு வரி ஆண்  இது பொருந்தாக்காதல் என்று வாதிட , பெண்ணோ காதல் என்று வந்துவிட்டால் , வேறெதுவும் பொருட்டே அல்ல என்று ஆணித்தரமாக மறுதலிக்க , என்ன கற்பனை.

மெலடி என்றால் இதுவன்றோ மெலடி என்று சொல்ல வைக்கும். பாடல்    பண்டிட் [சித்ரா] விஸ்வேஸ்வரன்   இந்தப்பாடலை "சிரஞ்சீவி" என்று சிலாகிப்பார். உண்மைதான் , ராக நளினம் குரல் லயிப்பு, இசையின் துடிப்பு ஹம்மிங் என அனைத்திலும் இது அரச பீடம் அமைத்து மங்காமல் மின்னும் 1962 ம் ஆண்டில் துவங்கி இன்றும் [63 வயது] தளராமல் துள்ளும் மிடுக்கு வேறென்ன சொல்ல?  கேட்டு மகிழ இணைப்பு இதோ

https://www.youtube.com/watch?v=pqgAS7mzZjA ROJA MALARE RAAJAKUMAARI VEERATHIRUMAGAN   KD V R PBS PS

காத்திருந்த கண்களே [மோட்டார் சுந்தரம் பிள்ளை-1966] வாலி, எம் எஸ் வி, பி பி ஸ்ரீனிவாஸ் ,சுசீலா

எம் எஸ் வி தனித்து இசை அமைத்த பல அற்புத டூயட்களில் இதற்கு ஒரு இடம் நிச்சயம் உண்டு. பாடலில் துள்ளும் இளமை ராகம் குரல் மற்றும் கருவிகளின் கூட்டு இயக்கம்.. சுசீலாவின் குரல் ஜெயலலிதாவுக்கு எப்படி  பொருந்தியுள்ளது -அவ்வளவு நுணுக்கம் பாடும் முறையில்.

 மன்னரின் இசையும் அந்த நாளிலேயே எத்துணை உயர் அணுகுமுறைகள். நடனமும் வெகு இயல்பு. அனைத்தையும் சிறைபிடித்த திரு எல்லப்பாவின் ஒளிப்பதிவு , கருப்பு வெள்ளையில் காட்சி மிளிர்வது அவ்வளவு எளிதா என்ன? DEPTH என்ற புகைப்படக்கலையின் சொல்லுக்கு செயல் விளக்கம் இப்பாடல். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை FOCUS மாறாத பதிவு. கண்டு ரசிக்க இணைப்பு இதோ  https://www.youtube.com/watch?v=oRS_BNiuWcA kathirundha kangale M S PILLAI 1966 VAALI MSV  PBS PS

இதே பாடலை சுபஸ்ரீ அவர்கள் விளக்க மேலும் தகவல்கள் மற்றும் நுணுக்கங்கள், இசையின் பிற பரிமாணங்கள் நன்கு ரசிக்க இணைப்பு இதோ

https://www.youtube.com/watch?v=G5MTPHB4QPY QFR 560

 

No comments:

Post a Comment

GOOD- BUT A LITTLE OFF MEMORY [-24

  GOOD- BUT A LITTLE OFF MEMORY [-24]   RICHLY MELODIOUS -4 போக போக தெரியும் [ சர்வர் சுந்தரம் 1964] கண்ணதாசன் , வி ரா , பி பி எஸ...