Wednesday, January 7, 2026

PIANO GALORE -3

 PIANO GALORE -3          

பியானோ வியாபகஇசை                                                                                   

பியானோ பாடல்களில் தனி முத்திரையும் இடமும் கொண்டது

'உன்னை ஒன்று கேட்பேன்' [புதிய பறவை -1964] கண்ணதாசன் , விஸ்வநாதன் ராமமூர்த்தி , பி சுசீலா

அன்றைய நிலையில் இது ஒரு புதுமை ஆம் சொல் வரிசையில், இசை க்கோர்வையில், கருவிகளின் ஒருங்கிணைப்பில் என்று எப்படி பார்த்தாலும் இப்பாடலின் பரிமாணம் வேறு. ஒவ்வொரு சொல்லுக்கும் ட்யூன் அமைந்திருந்த   வெகு சில பாடல்களில் இது தலையாயது. மட்டுமல்ல கழிவிரக்கம் என்னும் self sympathy தான் பாடலின் அடிநாதம். சில இடங்களை கவனியுங்கள் 'என்னைப்பாட ச்சொன்னால் என்று இழுத்து தயங்கி பின்னர் ;என்ன பாடத்தோன்றும் , என் .. பாட ...தோன்றும் என்று தயக்கம்  காதல் பாட்டுப்பாட காலம் இன்னும் இல்லை

தா  ... லாட்டு ப்பாட தா .. யாக வில்லை

நிலவில்லா வா ....னம்  நீரிலா மேகம் , தனிமையில் கானம் சபையிலே மௌனம் என்று ஒவ்வொரு சொல்லுக்கும் உணர்ச்சி வெளிப்படும் கட்டமைப்பு. கம்பீர பியானோ போங்கோ ட்ரம் சாக்ஸ் , ட்ரம்பெட் , அனைத்தும் நடன அமைப்பில் எனினும் பியானோ தன தலைமைப்பீடத்தில் இப்பாடலில்.

கேட்டு மகிழ இணைப்பு

https://www.youtube.com/watch?v=ONHG8_zF9K0 UNNAI oNRU PUDHIYA PARAVAI 1964 KD , V R P S

பாடல் 'அவன் நினைத்தானா ' படம் செல்வ மகள் 1967 ,வாலி, எம் எஸ் விஸ்வநாதன் , குரல் டி எம் எஸ்.

திடீரென்று கள ம் மாறி சோகத்தில் அமிழ்ந்தவனின் துயரை ஒலிக்கும் கோபமான பியானோ . எம் எஸ் வி எதற்கு வேண்டுமானாலும் பியானோ வை கையில் எடுப்பார் .இப்போது சோகத்துக்கு பியானோ

கேட்டு உணர

https://www.youtube.com/watch?v=wBD9aKaUj0s avan ninaithaanaa selva magal 1967 vaali msv tms

 

சோகம் என்ன துள்ளிவிளையாடி குதூகலம் கொள்ள உதவிட பியானோ வை எடுத்த எம் எஸ் வி இரவு இசை அமைத்து 30 நிமிடங்களில் பதிவிட்ட

தேடினேன் வந்தது [ஊட்டி வரை உறவு 967] கண்ணதாசன் எம் எஸ் வி, குரல் பி சுசீலா

காட்டுக்கு அடங்காத உவகையில் துள்ளும் நாயகி , அவளின் குதூகலத்தை கட்டிய ஹம்மிம்ஜி /பியானோ மற்றும் ட்ரம் வழங்கிய நாத சுகம் பாடலை தூக்கி நிறுத்தியது ஒவ்வொரு வரியிலும் இசையின் வீச்சு அலாதி. கேட்டு மகிழ இணைப்பு இதோ

https://www.youtube.com/watch?v=8vMah4LtZW0 THEDINEN VANDHADHU OOTY VARAI URAVU 1967 KD MSV PS

இதே பாடல் மேடை நிகழ்ச்சியில்

No comments:

Post a Comment

Oh Language –14

  Oh Language –14                          Needless to recall the purpose of these Sunday blog postings-I beliecve. Proceed   Spring, Sw...