ரெங்காவேண்டாம்-11
சொன்ன படியே பௌர்ணமிக்கு முதல் நாள், கிளி ஜோதிடன், ரெங்கசாமியின் வீட்டிற்கு காலை 11.30 மணி அளவில் வந்து , தாயீ நாளைக்கு நாம ஆசிரமம போவணும் , அதுக்கு ஒரு சில பூஜை பொருட்கள் வாங்கிகிட்டு போனா முதல் 2 வரிசைக்குள்ள இடம் தருவாங்க நல்ல பூஜையை பாக்கலாம்.
பெரியவரை பார்க்க முடியாதா என்றாள் கோமதி.. பாக்கலாம் அதுக்கு தான் 7 மணிக்கு முன்ன போய்ட்டா பின்னால குடில் ல பெரியவரை பாக்கலாம். கண்டிப்பா தரிசனம் தருவார் அதுவும் சந்தானம் வந்தா நல்ல பக்கத்துலே போய் மரியாதை செலுத்தலாம்; ஆனா ஒண்ணு குடும்ப விசயம் பேசவேண்டாம் , அவரே எல்லாத்துக்கும் பரிகாரம் சொல்லுவாரு.
வர
பிரியப்படாதவங்களை
கூட்டிகிட்டு
வரவேண்டாம்
என்று
நைசாக
ரெங்கசாமி
எங்கே
என
நோட்டம்
விட்டான்
கிளி..
ஆனா, தம்பியை மறக்காம கூட்டிகிட்டு வாங்க ,பெரியவர் ரொம்ப சந்தோசப்படுவாரு என்று மைதிலி முகத்தை உன்னிப்பாக கவனித்தான் கிளி ரெங்கராஜு..
"அவன்
வரேன்
னு
தான்
சொல்லிருக்கான்
வந்துடுவான்" என்றாள் மைதிலி . ராத்திரி
திரும்பி
வந்துடலாம்
இல்லையா
என்றனர்
கோமதியும்
மைதிலி
யும்..
நிச்சயம்
வந்துரலாம்
ஏன்னா,
நாம
கார்
ல போயிட்டு அதே
வண்டில
திரும்பிடுவோம்
என்றான்
ரெங்கராஜு.
காரா? என்று
ஒரே
மாதிரி
வியந்தனர்
மாமியாரும்
மருமகளும்.
ஆமாம் மா
இது
மடத்து
ஏற்பாடு.
பெரிய
பண்ணை
ரெட்டியார்
நம்ப
பெரியவருக்கு
பெரிய
பக்தன்
அவருதான்
காரு
அனுப்பறாரு
, மேலும்
ரெட்டியாரே
எங்கிட்ட
சொல்லிட்டாரு
நாளைக்கு
2 மணி
க்கு
ட்ரைவர்
இங்க
வந்துருவார்
நாம
போயிட்டு
வந்தபிறகு
வண்டி
திரும்ப
அனுப்புனா
போதும்னு சொல்லிட்டாரு. இந்தாங்க இந்த
லிஸ்ட்
படி
, வெத்தலை
பாக்கு
குங்குமம்
,பூ
சந்தனம்
,உதிரிப்பூ
ஊதுபத்தி
வாங்கி
வையுங்க என்றான்
ரெங்கராஜு..
மாலை? என்றாள் மைதிலி,.
"இல்லீங்க பெரியவருக்கோ
சாமிக்கோ
மாலை
கிடையாது
வெறும்
பூ
மட்டும்
தான்"
என்றான்
கிளி
ரெங்கராஜு..
வீட்டின் உள்ளே
நான் வரமாட்டேன் என்றான் ரெங்கசாமி---
"வேண்டாம் , நீ வராத , எங்கியாவது வந்துடப்போறயோனு பயமா இருந்துது., நீ வந்தாலும் ஆசிர்வாதம் கிடைக்குமா , ஆசி எங்களுக்கு வாதம் உனக்குன்னு பெரியவர் சபிச்சுடப்போறார்”. என்றாள் கோமதி ஆத்திரம் பீறிட.
மறுநாள் மாலை
5.30 அளவில் திண்டுக்கல் தாடிக்கொம்பு
பகுதியில்
ஒரு
சிற்றூரி
ல் ஆசிரமம் இவர்கள்
வந்ததும்
கிளி
ரெங்கனைப்பார்த்து,
காரியஸ்தர்
நாராயணன்
ஓடி
வந்து
-அவாளை
இப்படி
கூட்டிண்டு
வாரும்
என்றார்.
அப்படியே
சென்றனர்
ஒரு ஹால்
போல
இருந்த
பகுதியில்
மொத்தம்
5 பேர்
ட்ரைவரையும்
சேர்த்து.
10 நிமிடத்தில்
பெரியவர்
இந்த
அறைக்குள்
வந்தார்
, சாமீ
என்று
ஓங்கி
ஒலித்து
நீண்ட
நமஸ்காரம்
செய்தான்
கிளி
. காரியஸ்தர்
சேவிங்கோ
/நமஸ்காரம்
பண்ணுங்கோ
என்றார்..
கொண்டுவந்த
பொருட்களைபெரியவர்முன் வைத்து
சேவித்து கை
கூப்பி
நின்றனர்.
கோமதியின் கண் மறையும் அளவு கண்ணீர் , மைதிலி விக்கித்து நிற்க பெரியவர் சந்தானத்தை இங்கு வா என்று ஜாடையால் அழைத்தார், அவன் தாயாரை பார்த்தான் , தாய் போ என்று சமிக்ஞை செய்தாள். சிறுவனை வைத்தகண் வாங்காமல் பார்த்த பெரியவர் "என்ன படிக்கற ?
சந்தானம் ‘டென்த் [பத்தாம்
க்ளா
ஸ்]’
முழு கவனமா
படி
என்று
தலையில்
கைவைத்து
வாழ்த்தினார் பெரியவர்.
சந்தானம் மின்சாரம்
பாய்வது
போல்
உணர்ந்தான். .3 எலுமிச்சை
பழங்களை
அவன்
கையில்
தந்தார்
. இரு பெண்மணிகளும்
கை கூப்பி
நிற்க,
அவர்
வலது
கரத்தை
சற்று
உயர்த்தி
பெண்களுக்கும்
/ கிளி
ரெங்கனுக்கும் நீண்ட ஆசீர்வாதம்
வழங்கினார். கோமதி தனது
வெறுமையை
நொந்தபடி
நிற்க
,மைதிலி
தன
கணவன்
இப்படி
ஏடாகூடமாக
இருப்பதை
எண்ணி
உள்ளூர
வருந்த,
பெரியவர்
"பையன்
[சந்தானத்தைக்காட்டி]
அமோகமா
வருவான்
ஒரு
குறையுமிருக்காது.
திருத்த
முடியாத
விஷயங்களை
பகவான்
கிட்ட
விட்டுட்டு
அவரவர்
கடமை
மறக்காமல்
இருங்கோ என்று 2 கை
உயர்த்தி
ஆசி
வழங்கி
பகவதி
பூஜை
பாத்துட்டு
போங்கோ
என்று
சொல்லி
வந்த
வழியே
சென்றார்
குரு.ஜி.
கிளி ஜோதிடன்
மா
பெரும்
தேவதூதன்
என்று
கோமதி,
மைதிலி
, சந்தானம்
அனைவரும்
உணர்ந்தனர்.
. திடீரென்று
சந்தானம்
“பாட்டி
அன்னிக்கு, திண்ணைல
ஜோதில
இந்த
ஸ்வாமிஜி
தான்
வந்தார்"
என்று
அன்று
கோமதி
தவற
விட்டதை
நினைவூட்டியதும், அவன் [சந்தானம்]
இப்போது
பெரும்
ஆளுமையாக
உருவாகிறான்
என்பதை
பிறர்
புரிந்து
கொண்டனர்.
பகவதி பூஜை
வெகு
சிறப்பாக
நடந்தது
பூஜை
முழுவதும்
ஓங்கி
ஒலித்த
தெய்வீக
த்வனி
கிளி
ரெங்கனின்
குரல்
என்பது
சொல்லப்பட
வேண்டும்.
இறை
அருள்
எவர்க்கும்
சித்திக்கும்
என்பதற்கு
கிளி
ஜோதிடன்
பெரும்
உதாரணம்.
ரெட்டியாரின்
தயாள
சிந்தையால்
இவர்கள்
நீண்ட
நாட்களுக்குப்பின்
பெரியவரை
இறைவனின்
அருளால்
சந்தித்து
மனம்
மகிழ்ந்தது
வீடு
திரும்பினர்.
அப்பாடா, நீண்ட நாட்களாக ரெங்கா வேண்டாம் என்பது முடங்கியே இருந்தது இப்போது முடிவினை எட்டிவிட்டது.இனி கதை என்பது பழங்கதை தான். வேறு கதை இல்லை . எனவே அனைவருக்கும் நிம்மதி
சுபம்
No comments:
Post a Comment