Tuesday, January 20, 2026

PIANO GALORE - 4

 PIANO  GALORE - 4

பியானோ வியாபகஇசை -4                                                                                  

பியானோ பாடல்கள் வரிசையில் இது 4 ம் பதிவு.

முதலில்        தனி ஒருத்தியின் குதூகல பாடல்

அத்தானின் முத்தங்கள் [உயர்ந்த மனிதன் ] வாலி எம் எஸ் வி, பி சுசீலா

அருமையான மெலடி , ஏற்ற இறக்கங்கள், ஆங்காங்கே மென் உணர்வு வசன நடை என வெகு நளினமாக பயணித்த பாடல். எண்ணற்ற கற்பனைகளை வெளிப்படுத்திய பாடல். அந்நாளைய வசீகரம்

கேட்டு மகிழ இணைப்பு இதோ

https://www.youtube.com/watch?v=3KYi-Srq4_o athanin Muthangal uyarndha manidhan 1968  vali   msv ps

தனி ஒருவனின் சோகம்

 எல்லோரும் நலம் வாழ [எங்க மாமா ] கண்ணதாசன் ,எம் எஸ் வி, டி எம் எஸ்

 துவக்கம் முதல் சோகம் பீறிடும் உணர்வுக்கோவை. பியான தரும் சோக அதிர்வுகளும் சேர்ந்து மனதை துயரில் ஆழ்த்தும் இசை. பியானோ மட்டுமா கோரஸ் குரல்களில் வழிந்தோடும் ஏக்க அலைகள் , அனைத்தையும் மீறி ஒலித்த குரலில் இழையோடும் ஏமாற்ற பரிதாபம். எவ்வளவு உணர்வு கொப்பளிக்கும் இசை

கேட்டு உணர இணைப்பு இதோ 

https://www.youtube.com/watch?v=vo00ogHbydI ELLORUM NALAM VAAZHA ENGA MAAMA 1970 KD MSV TMS [NOTE DRUM BEATS]

இருவர் பகிரும் உள்ள ஓட்டம்

எனக்கொரு காதலி [ முத்தான முத்தல்லவோ ] வாலி, எம் எஸ் வி , குரல்கள் எம் எஸ் வி மற்றும் எஸ் பி பாலு

வாலி சரியான தருணம் பார்த்து மெல்லிசை மன்னருக்கு அணிவித்த புகழ்மாலை இப்பாடல். ஒவ்வொரு வரியிலும் மெல்லிசை மன்னர் காட்டும் இசையின் பண்புகளைக்கொண்டே அமைக்கப்பட்டுள்ள சொற்கோவை. பாலு அப்படியே மன்னரை தொடர்ந்து பாடும் கீதம்

மன்னர் காட்டியுள்ள விஸ்வரூபம் -குரலில், இசையில், உணர்வில் மற்றும் இசைமீது கொண்ட எல்லையற்ற ஈடுபாடு அனைத்தும் இங்கே.

குரு [MSV] சிஷ்ய [S P B ]  பாவம் மற்றும் சொற்களை எவ்வளவு இழுத்துப்பாட இயலும் என்பனவற்றை உணர்த்திய கணம் /கானம் இது.

பாடலுக்கு இணைப்பு இதோ

https://www.youtube.com/watch?v=SrP7hrcHUDo ENAKKORU KAADHALI –MUTHANA MUTHALLAVO 1976 VALI MSV , MSV SPB

நன்றி

அன்பன் ராமன்

No comments:

Post a Comment

PIANO GALORE - 4

  PIANO   GALORE - 4 பியானோ வியாபகஇசை -4                                                                                     பியானோ பா...