LET US
CONSIDER -2 [ Kadhalikka Neramillai-
1964 ]-2
இதை யோசிப்போம்
[காதலிக்க நேரமில்லை -1964] -2
எந்த உரையாடலும் திணிக்கப்பட்டதாகவே இல்லாமல் வெகு இயல்பாக திடீரென்று அரங்கேறும் அதனாலேயே நகைச்சுவை பெரிதும் உயிரோட்டமாக அமைந்தது . அதுகூட படம் ஏற்படுத்திய தாக்கத்தின் அளவை மேம்படுத்தியது எனலாம்
அசோக் [ரவிச்சந்திரன்]பெரும் தனவந்தரின் மகன் என்று அறிந்ததும் பாலையா வைக்கும் ஐஸ் வெகு உச்சம் "அசோகர் உங்க மகரா ?"
உன்னை பெத்தேன் பாரு என் புத்தியை ஜோட்டாலே அடிக்கணும் [பாலையா]
தெரியாம தான் கேக்கறேன் "உங்களுக்கு மகனா பொறந்தேனே என் புத்தியை எதால அடிக்கிறதாம்? [நாகேஷ் ]
நான் அடிச்சுக்கிட்டு செருப்பை கீழே போடறேன் அதை எடுத்து நீ அடிச்சுக்கோ [பாலையா]
செருப்படி பட்ட குடும்பம் னு ஊரே பேசும் ப்பா [நாகேஷ் ]
கல்யாண தரகர் லோகு [ கரிக்கோல் ராஜு ] பெரியகுளம் பண்ணையாருக்கு ஒரே மகன் , படிப்பு இல்லேன்னாலும் 100 ஏக்கரா பூமிக்கு மேல தேறுமே
உடனே நாகேஷ் "பையன் தினமும் ஏர் பிடிக்கிறானா?"
இவை மட்டுமல்ல இதை கவனித்தவர்கள் மிகக்குறைவே.
சச்சுவின் தந்தை , பெண்ணை நாகேஷுக்கு மண ம் முடிக்க திட்டம் போட்டு பெண்ணிடம்
'என்னம்மா எல்லாம் சரிதானே ' என்பார்
உடனே சச்சு "நான் என்ன சொல்லப்போறேன்' என்பார்
நாகேஷ் பதறி அடித்துக்கொண்டு "எதையாவது சொல்லிடப்போற' என்று குறுக்கே பாய்வார். அவ்வளவு[ம்]. இ யல்பான நகைச்சுவை
சரி டெக்கனிகல் விஷயங்களும் அன்றைய புதுமை அல்லவா? அவற்றையும் பார்ப்போம்
வண்ண படங்களின் சரித்திரம் மிகவும் குழப்பங்கள் நிறைந்தது. ஆரம்ப காலத்தில் கேவா [Gevaert ] கலர் என்ற தொழில் நுட்பம் பயன்பட்டது . அதன் பின்னர் டெக்னீகலர் [TECHNICOLOR ] ஹாலிவுட் படங்களில். இந்தியாவிலோ அந்நியச்செலாவணி கட்டுப்பாடுகள் அதிகம்.
அதனால் உரிய வரியை செலுத்தி காத்திருந்து பின்னர் கோட்டா என்ற ஒதுக்கீடு பெற்று படப்பிடிப்பு செய்வர். அந்த நிலையில் தான் கோடாக் நிறுவனம் உருவாக்கிய வண்ண பிலிம் ஈஸ்ட்மன் கலர் என்றழைக்கப்பட்டது. அந்நாளில் ஈஸ்ட்மன் படங்கள் பெரும்பாலும் பம்பாய் பிலிம்சென்டர் வண்ணக்கூடத்தில் அச்சிடப்பட்டவையே. .[உதாரணங்கள் : படகோட்டி , கர்ணன் ]
இப்படி முன்னணி நிறுவனங்கள் மும்பைக்கு பிலிம் அனுப்பி அவற்றை process செய்து, அச்சிட்டு வந்த அன்றைய சூழலில் சென்னையின் ஜெமினி நிறுவனத்தின் வண்ண பிலிம் அரங்கினை பயன்படுத்த துணிந்த முதல்தமிழ் தயாரிப்பாளர்/ இயக்குனர் திரு ஸ்ரீதர் அவர்கள் தான்.
மேலும் ஜெமினி நிறுவனம் தனது ஊழியர்களை லண்டன் கோடாக் நிறுவனத்தில் பயிற்சி தந்து பணியமர்த்தியிருந்தது. ஆயினும் 1964 காதலிக்க நேரமில்லை படத்தின் வண்ண தரம் பார்த்தபின்னரே எண்ணற்ற படங்கள் வண்ண பதிவுக்கு வரிசைகட்டி காத்திருந்தன . அதிலும் முன்னோடி திரு ஸ்ரீதர் தான்
ஜெமினி நிறுவன தொழில் நுட்பாளர்களின் திறனை வெளிக்கொணர்ந்த படம் கா நே எனவே, இப்படம் ஜெமினி ஸ்டூடியோவின் வண்ணப்பட கையாளும்
புகழுக்கு
வித்திட்டது எனில் மிகை அல்ல.
தொடரும் அன்பன் ராமன்