Sunday, February 1, 2026

KERALA INSTRUMENTS

 KERALA INSTRUMENTS                                                                                            

கேரள கருவிகள்

கேரளாவின் முக்கிய ஆலயங்கள், நிகழ்வுகள்  என பல சூழல்களில் செண்டை மேளத்தின் ஒலி நாற்புறமும் தெறித்து ஓங்கி ஒலிக்க கேட்கும்.. ஒரே குழுவில் வெவ்வேறு வகையான தாள ஒலிகள் இணைந்து கேட்பது ஒரு பரவசம்.  செண்டைக்குழுவிலும்  நாயனம் போன்ற ஒரு காற்று வாத்தியம் இசைக்கப்படுகிறது. ஆனால் அந்த நாயனங்களின்  ஒலி  திருவிழா கூட்டத்தில் சிக்கிய பூனைக்குட்டி போல முனகும்.

செண்டையில் சில வினாடிகள் இடைவெளி கிடைத்தால் இந்தப்பூனை ஒலி லேசாக வெளிப்படும்.. எனவே செண்டை இசை என்றாலே இடி முழக்கம் தான் என்று நம்பப்படும் சூழல் தோன்றிவிட்டது.போகட்டும் செண்டை மேளம் என்பது குழு இசை. பலரும் சேர்ந்து சரியான காலப்ரமாணத்தில் இசைப்பது ஒருபுறம் இருக்க அவர்கள் அசுரவேகத்தில்  தாளம் இசைப்பது விளக்கவொண்ணாத ஆச்சரியம். அப்படி ஓர் நிகழ்வின் தொகுப்பு இதோ

[EXTENDED VERSION] Extreme speed Chendamelam! Hefty beats –rapid rhythm play in unison.

பாண்டி இசை /பாண்டி மேளம்

பாண்டி மேளம் என்பதும் கேரளத்தில்   இசைக்கப்படும் ஒரு வகை வாத்திய இசை. இதிலும் தாள க்கருவி என்னவோ செண்டை தான். ஆனால் இந்த இசையில் நாயனம் போன்ற காற்றுக்கருவி முக்கியத்துவம் பெறுகிறது. இந்தப்பாண்டி மேளம் -குழல் இசையை தொடர்ந்து வரும் தாள இசை. எனவே பாண்டி மேளத்தில்  அனைத்துக்கருவிகளையும் கேட்டு ரசிக்க வாய்ப்பு தருவது. அவ்வகை நிகழ்வின் வீடியோ இணைப்பு இதோ. கேட்டு ரசியுங்கள்.

Rhythms of Kerala: Pandi Melam | Kerala Tourism priority to wind instruments  PANDI MELAM OF KERALA

நன்றி

அன்பன் ராமன்

2 comments:

  1. தமிழ்நாட்டிலும் சில கோவில்களிலும் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் செண்டை மேளம் இசைக்கப்படுகிறது.அதே நேரம் "தமிழ்நாட்டில் இல்லாத மேளங்களா " என்ற முணுமுணுப்பும் ஆங்காங்கே உண்டு. பாண்டிமேளம் பற்றிய ஞானம் அடியேனுக்கு இல்லை.

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete

LET US PERCEIVE THE SONG -59

 LET US PERCEIVE THE SONG -59 பாடலை உணர்வோம் -59 தங்க ரதம் வந்தது [ கலைக்கோயில் 1964] கண்ணதாசன்       வி- ரா , சுசீலா பாலமுரளிகி...