Monday, February 2, 2026

COMMANDOS

 COMMANDOS                                       

அதிரடி வீரர்கள்

நாம் அவ்வப்போது கமாண்டோக்கள் என்று கேள்விப்படுகிறோம். தற்கால உலகளாவிய தீவிரவாதம், தேசவிரோத கும்பல்களின் அச்சுறுத்தல்கள் மற்றும் முக்கிய விஞ்ஞானிகள், அறிவுசார் துறைகளின் தலைமை போன்ற இடங்களில் தாக்கி தொழில்நுட்ப அமைப்புகளை சீர்குலைப்பது, எல்லை தாண்டிய பயங்கரவாதம் மூலம் அப்பாவி பொதுமக்களை கொல்வது சிறை பிடிப்பது/ வெட்டிக் கொல்லுவது என அழிவு நடவடிக்கைகளில் பல தீவிரவாதிகள்   ஈடுபடுகின்றதை அறிவோம். இவர்களை எதிர்கொள்ள நல்ல திறன், உடற்கட்டு உறுதியான மனம் மற்றும் மின்னல் வேக துரிதம் போன்ற திறமைகொண்டவர்களை, எண்ணற்ற தீவிர நுணுக்கமான பயிற்சிகளுக்குப்பின்னர்  கமாண்டோ எனும் அதிரடிப்ப்படையில் பணி அமர்த்துவார்கள்.  கமாண்டோக்கள் தனித்தும் குழுவாகவும் செயல்படும் உத்திகளை அறிந்தவர்கள். மிகச்சிறிய துப்பாக்கி முதல் இயந்திரத்துப்பாக்கி வரை பயன்படுத்தவும் பராமரிக்கவும், பழுது நீக்கவும் அறிந்தவர்கள். மேலும் எந்த எதிர் தாக்குதலிலும் தயங்காமல் பாய்ந்து எதிரியை முடக்கி ஆயுதங்களை பறிக்கவும் அவர்களை கொல்லவும் தயங்காமல் விரைந்து செயல் படுவர். இவ்வகை கமாண்டோக்கள் ஆகச்சிறந்த போர் வீரர்களில் இருந்து தேர்வு செய்யப்பட்டு எப்போதும் தயார் நிலையில் இருப்பவர்கள். இவ்வகை வீரர்கள் விமானப்படை, கப்பற்படை தரைப்படை இவற்றிற்கென பிரத்தியேகமாக உள்ளனர். இவை தவிர உள்நாட்டு தேவைக்கு முக்கிய அதிபர்கள் பாதுகாப்பிற்கு என வெவ்வேறு பிரிவுகள் செயல்படுகின்றன. இவை குறித்து விரிவாக விளக்குகிறார் திரு. ஆசிர்  சாமுவேல் அவர்கள். 

அவர் தரும் நுண் தகவல்களை அறிய இணைப்பு இதோ     

No comments:

Post a Comment

Andaal –Sridharan

  Andaal –Sridharan ஆண்டாள் - ஸ்ரீதரன் ஸ்ரீதரன் ஸ்ரீரங்கம் ஆண்டாள் யானையின் அன்பு பாகன் . அவரது அறிவும் கூர்மையும் இறை பக்தி...