Tuesday, February 3, 2026

LET US PERCEIVE THE SONG -54

 LET US PERCEIVE THE SONG -54

பாடலை உணர்வோம் -54

உள்ளத்தில் நல்ல உள்ளம் [கர்ணன் 1964] கண்ணதாசன்,  விஸ்வநாதன் ராமமூர்த்தி , குரல் சீர்காழி கோவிந்தராஜன்

என்னது அடுத்த பாடலும் 'கர்ணன்' படத்திலிருந்தா? என்று சிலர் நினைக்கலாம். உண்மையில் இப்பாடல் குறித்த திரு அமுதபாரதி அவர்களின் சிறப்பான விளக்கம் விளைவித்த “-இதை உடனே பயன் படுத்திக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தினால் அமைந்தது.” அன்பர்கள் பொறுத்தருள வேண்டும்.

கணீரென்ற குரலில் ஒலித்த, ஆழமான சோகம். வாழ்வியலின் நுணுக்கங்களை, மானுடன் கர்ணனுக்கு பகவான் கிருஷ்ணன் வழங்கிய விளக்கம் / தெளிவுரை/ அல்லது பெரும் ஆசி என்றும் கூட சொல்லலாம்.. எதுவாயினும், கவிஞர் அதியற்புதமாக மஹாபாரத கதையின்வாழ்வியல் பொருளை எளிய தமிழில் பாடியுள்ளார். எதையும் மறைத்துப்பேசாமல் செஞ்சோற்று க்கடன், நன்றி செலுத்தும் குணம், வஞ்சனைக்கு துணை போகவைத்த அனைத்தையும் நினைவு படுத்தி வஞ்சகன் கண்ணனடா என்று தன்னையும் அடையாளப்படுத்திய கதாபாத்திரம். ஒருவன் நல்லதே செய்தாலும், அவ்வப்போது அறிந்தோ அறியாமலோ செய்த குற்றங்களுக்கு தண்டனை உண்டு என்பதையம் ஆயினும் இறைவன் துணை நிற்பதையும் வெளிப்படுத்திய பாடல். இப்பாடலின் இசை வெளிப்படுத்திய சோகம் ஆழமானது. அதற்கென ஒலிக்க வைத்த ஷெனாய், சாரங்கி கருவிகளின் உணர்வைப்பிழியும்முயற்சி/ மீட்டல்   இவற்றை நன்கு விளக்குகிறார் திரு அமுதபாரதி அவர்கள். அவரது விளக்கம் முற்றிலும் வேறு கோணத்தில் அமைந்துள்ளது. மேலும் இசையின் நுணுக்கங்களை திறம்பட எடுத்துரைக்கிறார்.. அன்றைய 'கர்ணன் ' பாடல்களுக்கு சாரங்கி சந்தூர் ஷெனாய் இவற்றை கையாள பம்பாய் திரையுலகின் முக்கிய கலைஞர்கள் தென்னகத்து க்கலைஞர்களுடன் இணைந்து பங்களிப்பு வழங்கினர் என்பது அந்நாளில் பேசப்பட்டது.. எனவே முதலில் அவரது விளக்கம் தாங்கி வரும் வீடியோ இணைப்பு இதோ  .  

https://www.youtube.com/watch?v=ZOuKekNXZno ullaththil Amudhabaarathi

ஆழமான புரிதல் தரும் விளக்கத்தை கேட்ட பின்னர் பாடலின் வீடியோ வை பார்த்தால் எவ்வளவு நுணுக்கங்களை 1963-64 கால கட்டத்தில் தமிழ் சினிமா பாடல்கள் வடிவமைப்பில் அமைந்திருந்தனர் என்பது புரியும். இசைக்கருவிகளின் நேரடி பதிவு [live recording] எவ்வளவு உயிர்ப்புடன் இருக்கிறது என்று ரசிக்க திரைப்பாடலின் வீடியோ இணைப்பு இதோ . கண்டு கேட்டு மகிழ்வீர்

https://www.youtube.com/watch?v=Ga8_Sx-nUlY

நன்றி                              அன்பன் ராமன்

1 comment:

  1. உணர்ச்சி ததும்பும் மற்றும் எதார்தத்தை அறிவுறுத்தும் உன்னதமான பாடலும் விளக்கமும். நன்றி.

    ReplyDelete

WILLIAM SHAKESPEARE -5

  WILLIAM SHAKESPEARE -5 The present episode of quotes from Shakespeare relates to human attitude and general disposition to time. As I ha...