LET US PERCEIVE THE SONG -57
பாடலை உணர்வோம் -57
மாதவிப்பொன்
மயிலாள்
[இருமலர்கள்
-1967] வாலி, எம்
எஸ்
விஸ்வநாதன்,
குரல் டி
எம்
எஸ் .
எண்ணற்ற புருவங்களை
உயரச்செய்த
பாடல்
1967 ம்
ஆண்டின்
வரவு.
இப்பாடல்
வந்த
புதிதில்
வாதங்கள்
-கண்ணதாசன்
பாடல்,
கே
வி
எம்
இசை
என்று
படம்
வெளிவராமல்
ஆளாளுக்கு
இசைத்தட்டுப்பாடலை
மட்டுமே
கேட்டு
கருத்து
சொல்லிவந்த
பாடல்.
அப்படி என்ன
குழப்பம்?
இல்லையா
பின்னே?
‘சொல்லழகு
சொல்கிறதே
கண்ணதாசன்
என்று.
சுத்த
புடம்
போட்ட
ராக
ஓட்டம்
சொல்கிறதே
இது
கே
வி
எம்மி
ன்
இசை
அமைப்பு
என்று’.
“கிடையவே
கிடையாது
இது
விஸ்வாநாதன்
தான்
, இசையில்
உள்ள
சங்கிலித்தொடரும்
தாள
ஒருங்கிணைப்பும்
வெளிச்சம்
போடுகின்றனவே
எம்
எஸ்
வி
என்று”
என்று
ஒரு
கோஷ்டி.
அதிர்ஷ்ட வசமாக
ரூமுக்கு
எதிர்
உள்ள
சிவசக்தி
ரேடியோஸ்
[ஒலி
பெருக்கி]
கடையில்
இதே
பாடல்
ஒலிக்க
ஒரு
கோஷ்டி
கீழே
போய்
இசைத்தட்டை
வாங்கி
பார்க்க
.வாலி
, எம்
எஸ்
வி
படம்
இருமலர்கள்
என்று
தெரிந்து
கொண்டு
வந்து
நான்
அப்பவே
சொன்னேன்
ல்
ல
என
சிலர்
கொக்கரிக்க,
ஏன்? ரெகார்ட்
ல
தப்பா
கூட
போட்
டுறு
வான்
என்று எதிரணி
தற்காப்பு
தேட.
அடுத்த
சில
நாட்களில்
படம்
வந்துவிட
சினிமா
பார்க்க
20 பேர்
கொண்ட
படை
போக
, டிக்கட்
கிடைக்கவில்லை.
அதில்
ஒருவர்
கூட்டத்தினுள்
முண்டியடுத்து
உள்ளே
போய்
பாட்டு
ப்புத்தகம்
வாங்கி
வர,
கொட்டை
எழுத்தில்
, வாலி,
விஸ்வநாதன்
பெயர்கள்.
எதிரணி
முடங்கி
ஒளிந்தது.
சரி பாடலை
பார்ப்போம்.
வேறொன்றுமில்லை இலக்கிய
நயமான
சொற்களும்,
இலக்கணம்
விலகாத
கர்நாடக
இசை
அமைப்பும்
கண்ணதாசனையும்,
கே
வி
மஹாதேவனையும்
சர்ச்சைக்குள்
இழுத்து
வந்தது
வாலியின் தீவிர
சொல்லாடல்
முதல் சொல்லே
'மாதவி
பொன்
மயிலாள்"
;வண்ண
மையிட்டகண்
மலர்ந்து தூது விடுத்தாள்
கூனல் பிறை
நெற்றியில்
குழலாட
கொஞ்சும்
குளிர்
முகத்தில்
நிலவின்
நிழலாட
கலை மானின்
இனம்
கொடுத்த
விழியாட
, அந்த
விழி
வழி
ஆசைகள் வழிந்தோட
அது மட்டுமா?
வானில் விழும்
வில்
போல்
புருவம்
கொண்டாள்
இனிய
பருவம்
கண்டாள்
என்று அற்புதசொல்
கவிதையை
தொடுத்து
இலக்கிய
தரம்
கொண்ட
கவிதையை
படைத்துள்ளார்
திரு
வாலி
அவர்கள்.
அனாயாச முக
பாவம்,
உடல்
மொழி,
கண்
உருட்டல்,
நடை
என
பாடலில சிவாஜி
கணேசன்
அவர்களின்
பங்களிப்பு
வெகு
சிறப்பானது.
இது
போன்ற
காட்சிகளில்
கருப்பு
வெள்ளை
படங்கள்
தரும்
நிறைவு
வண்ணப்படங்களில்
பெரும்பாலும்
வெகு
அபூர்வம்
எனில்
மிகை
இல்லை.
இங்கே பெரிதும்
பேசப்படவேண்டியது
திரு
டி
எம்
எஸ்
அவர்களின்
சுருதி
சுத்தமான
கணீர்
குரலும்
பிசகு
இல்லாத
விரைவான
உச்சரிப்பும்.
மேலும் எவ்வளவு
நேர்த்தியான
ஆலாபனை
மற்றும் ஜதிகள் ஒன்றன்பின்
ஒன்றாகப்பாய்ந்தோடி
வெளிப்படும்
துரிதம்
மற்றும்
முறையான
ராகக்கட்டமைப்பு
. இவ்வனைத்திலும்
நானே
ராஜா
என்று TMS
சொல்லாமல் சொல்லும்
கம்பீரம்
இந்தகம்பீரத்தை வெளிப்படுத்திய
வாமன
கம்பீரம்
திரு
எம்
எஸ்
வி
அவர்கள்.
பலர்
எம்
எஸ்
விக்கு
கர்நாடக
இசை
தெரியாது
என்று
எண்ணுகிறார்கள்.
உண்மை
அதுவல்ல
அவரைப்
பொருத்தவரை சினிமாப்பாடலுக்கு ராகமும்
ஆலாபனையும்
தரும்
சிறப்பை
விட
பாவமே
அதிக
தேவை
என்றெண்ணுபவர்.
தேவை
எனில்
கர்நாடக
ராகத்தை
கையில்
எடுக்க
தயங்காதவர்
தான்
திரு
எம்
எஸ்
வி
அவர்கள்.
அது மட்டுமல்ல
தேர்ந்தெடுத்த
ராகத்தை
முறையாகவும்
நிறைவாகவும்
கையாளும்
நுணுக்கமும்
வித்தகமும்
நன்கு
அறிந்தவர்.
இந்தப்பாடலில்
'கரஹரப்ரியா'
ராகத்தின்
அம்சங்களை
குழைத்து
குழைத்து
பாவம்
சொட்ட
பாடவைத்ததும்
ஜதி
ஸ்வரங்களை
தொகுத்து
இசைபட
வழங்கியது
ஒருபுறம்
தாள
அமைப்பில்
மிருதங்கம்
தபலா
இவை
முழங்கும்
களத்தில்
செண்டை
ஒலியைக்கலந்து ஒரு நாட்டியப்பாடல்
அமைத்து
[கர்ணனுக்கு
பின்
முற்றாக
சாஸ்திரம்
விலகாமல்]
பாரம்பரிய
இசையின்
பரிமாணங்களை
வெளிப்படுத்தி
பலரையும்
கிறங்கடித்த இசைப்பரிமாணம்.
இப்பாடலில்.
கேட்டு
உணர
இணைப்பு
இதோ
https://www.youtube.com/watch?v=UA-d5yEk3kY
maadhavippon iru malargal 1967 vali msv tms
இதே பாடலுக்கு
விளக்கம்
சுபஸ்ரீ
மற்றும்
அவர்
குழுவினரின்
பாடல்
இதோ.
https://www.youtube.com/watch?v=yoHsc2O5dak
QFR 246 FOR THE ABOVE
நன்றி
அன்பன் ராமன்
What a wonderful song by MSV !! Your preamble about the debate on who the MD was, is a fact. But those who had total attraction to MSV music, could say it was by MSV just by listening to the first coupke seconds of rhe song !! Amazing creation and wonderful comments by you on this wonder. Thx
ReplyDelete