LET US PERCEIVE THE SONG 63
பாடலை உணர்வோம்
–63
பேசுவது கிளியா
[பணத்தோட்டம்-1963]
கண்ணதாசன்,விஸ்வநாதன்
-ராமமூர்த்தி
, குரல்கள்
டி
எம்
எஸ்,
சுசீலா
இது ஒரு
அதிசயமான
பாடல்.
சமூக
கதைக்களத்தில்
அமைந்த
அரச
வகை
டூயட்.
அது
என்ன
அரச
வகை
? என்கிறீர்களா
. ஆம்
கவிதை
வடித்தவர்
கவியரசர்
, இசை
அமைத்தோர்
மெல்லிசை
மன்னர்கள்
, காட்சியில்
நாடோடிமன்னன்
பட
ஜோடிகள்.
எப்படி
பார்த்தாலும்
ராஜீய
உறவுகள்
தோன்று
வதனால் இது அரச
வகை
டூயட்
எனில்
தவறாகாது
என்றெண்ணுகிறேன்.
அது
மட்டுமல்ல
பாடலில்
ஆங்காங்காங்கே
சேரனுக்கு
உறவா
, செந்தமிழன்
நிலவா
என்ற
வினாக்கள்
வேறு.
மேலும்
எதுகை
மோனை
விளையாடல்களில்
ராஜ
கம்பீரம்
சொல்லிலும்
இசையிலும் . ஆக ஒரே
ROYAL PLAY இந்த
பாடல்
முழுவதிலும்
பேசுவது கிளியா இல்லை பெண்ணரசி மொழியா
பேசுவது கிளியா இல்லை பெண்ணரசி மொழியா
கோயில் கொண்ட சிலையா கொத்து மலர் கொடியா ஹோய்
[பெண்ணரசி என்று அரசபீடம் பெண்ணுக்கு]
பல்லவி
பாடுவது கவியா இல்லை பாரி வள்ளல் மகனா
சேரனுக்கு உறவா செந்தமிழர் நிலவா
ஹோய் ஹோய் ஹோய் ஹோய்
கல்யாணப் பந்தலில் ஆடும் தோரணமா இல்லை
கச்சேரி ரசிகர்கள் கேட்கும் மோகனமா
கல்யாணப் பந்தலில் ஆடும் தோரணமா இல்லை
கச்சேரி ரசிகர்கள் கேட்கும் மோகனமா
பல்லவி
வில்லேந்தும் காவலன்தானா வேல்விழியாள் காதலன்தானா
வில்லேந்தும் காவலன்தானா வேல்விழியாள் காதலன்தானா
சொல்லாமல் சொல்லும் மொழியில் கோட்டை கட்டும் பாவலன்தானா
பல்லவி
மன்னாதி மன்னர்கள் கூடும் மாளிகையா உள்ளம்
வண்டாட்டம் மாதர்கள் கூடும் மண்டபமா ஹோய்
செண்டாடும் சேயிழைதானா தெய்வீகக் காதலிதானா
செந்தூரம் கொஞ்சும் முகத்தில் செவ்வாய் மின்னும் தேன் மொழிதானா
பாடுவது கவியா இல்லை பாரி வள்ளல் மகனா
சேரனுக்கு உறவா செந்தமிழர் நிலவா ஹோய் ஹோய் ஹோய் ஹோய்
பேசுவது கிளியா இல்லை பெண்ணரசி மொழியா
கோயில் கொண்ட சிலையா கொத்து மலர் கொடியா ஹோய்
ஹோய் ஹோய் ஹோய்
பாடலின் உள்ளார்ந்த குதூகலம் சொல்லில் தவவழ்வது தெரிகிறது எனினும் அதை வெகுவாக உயர்த்திய உத்திகள் ஏராளம் இப்பாடலில் .
இந்த மன ஓட்டத்தை இசை பேசுகிறது
பாடலின் துவக்கத்தில் வரும் "ஹோய்" அசல் எம் எஸ் வி முத்திரை .
ஆம் காதல் பாடல்களில்
"ஹோய் '
என்ற ஒலி யை குதூகலத்தை குறிக்கும் மன ஒலியாக செதுக்கியவர் எம் எஸ் வி ஒருவரே. வேறெந்த இசை அமைப்பிலும் இந்த உத்தியை காண இயலாது. இந்த 'ஹோய்' சரியாக செதுக்கப்படாவிட்டால் பாடலை சிதைத்துவிடும். அது போன்ற உணர்வின் ஓசைகளை எம் எஸ் வி போல் கையாண்டவர் அநேகமாக வேறெவரும் இல்லை என்றே சொல்லலாம்
சேரனுக்கு உறவா செந்தமிழர் நிலவா ஹோய் ஹோய் ஹோய் ஹோய் என்று எவ்வளவு குதூகலம் ?
கல்யாணப் பந்தலில் ஆடும் தோரணமா இல்லை
கச்சேரி ரசிகர்கள் கேட்கும் மோகனமா
சொல்லாமல் சொல்லும் மொழியில்
கோட்டை கட்டும் பாவலன்தானா
செந்தூரம் கொஞ்சும் முகத்தில்
செவ்வாய் மின்னும் தேன் மொழிதானா
இந்த சாய்வெழுத்து பகுதிகளில் வரும் சொற்கள் பிரித்துப்பாடப்பட்டு பாடலில் ஒரு உணர்வு மேலோங்கும் குதூகலகம் தோன்றக்காணலாம் அதே போல ஒவ்வொரு ஹோய் ஹோய் பகுதியும் வெவ்வேறு விதமாக பாடப்பெற்று சொல் இல்லாமலே சுவை கூட்டும் நளினம் அரங்கேறி உள்ளது இப்பாடலில் மேற்கத்திய வடிவமைப்பின் அடையாளங்கள் அக்கார்டியன், ஸ்ட்ரிங்ஸ் எனப்படும் கிட்டார் மாண்டொலின் மற்றும் காங்கோ , பாங்கோ மற்றும் டபிள் பேஸ் எல்லாம் வெகு நேர்த்தியாக இணைந்த ஒரு மெல் இசை இப்பாடலின் அடையாளம் ஆரம்பத்தில் ஒலித்த போங்கோ பின்னர் அடங்கி ஒலிக்க பாடலை சுமந்தது குரல்களின் திறனும் காட்சியில் கலைஞர்களின் முக பாவமும் மற்றும் ஹோய் என்ற ஈர்ப்பு ஒலி யும் தான் . . அந்நாட்களில் திரை இசை வேறோர் பரிமாணம் காட்டத்துவங்கிய நிலையில் விஸ்வநாதன் -ராமமூர்த்தி பாடல்களில் ஒரு விசேஷ கவனம் செலுத்தி ,
தமிழ் சொற்கள் சிதையாமல் பாடவைப்பது, கருவிகள் புதிய ஓசை தர ஒவ்வொரு பாடலும் ஒரு வசீகரம்என்ற பெயர் பெற வைத்தனர். இதைத்தான் எம் எஸ் வி பழமை மாறாத புதுமை , mortal men
,immortal songs [இறக்கும் மனிதர்கள் இறவா ப்பாடல்கள்] என்று சொல்வார். இப்பாடலுக்கு இன்றைய வயது சுமார் 64 -பாடலின் இனிமை துடிப்பு குதூகலம் எதுவும் பொலிவிழக்காமல் ஊஞ்சலாடுவதை என்ன சொல்ல?
பாடலுக்கு இணைப்பு இதோ
63 https://www.youtube.com/watch?v=2bnsOiS57zI
pesuvadhu kiliya kdvr tms ps PANATHOTTAM 1963]
https://www.youtube.com/watch?v=bq7nsNE3okg
இப்பாடலின் எண்ணற்ற சிறப்புகளை சுபஸ்ரீ விளக்க அவர்களின் குழுவினர் வழங்கியுள்ள பாடல் இதோ
No comments:
Post a Comment