Thursday, March 19, 2026

The fruit of labour

The fruit of labour

உழைப்பின் கனி

நெஞ்சம் மறப்பதில்லை [1963] கண்ணதாசன் விஸ்வநாதன் -ராமமூர்த்தி ,           பி சுசீலா 

பாடலும் அதுவே படமும் அதுவே ஆனால் இரண்டும் ஒன்றை ஒன்று இன்று வரை நின்று கேட்டு ரசிக்க வைக்கும் விந்தையை என்ன சொல்ல?

இது அசுரர்களின்  ஆக்கம் . இது நிகர்த்த இன்னோர் ஆக்கம் இப்போதைக்கு இல்லை -அடித்துச்சொல்ல முடியும். ஆங்கிலத்தில் 'HAUNTING ' என்றொரு சொல்லாடல் உண்டு. அதுதான் இது இப்பாடல் நம்மை உள்ளூர வாட்டிக்கொண்டே இருக்கும். ஆட்டிப்படைக்கும்.  ஏன் ?

சொல் தொகுப்பு அப்படி . இல்லையா பின்னே ? எதை நெஞ்சம் மறந்திருக்கிறது ? மனம் லயித்த எதையும் அது மறக்காது. அதுவே காதலின் அஸ்திவாரம். அதுவே இன்ப-துன்பங்களுக்கெல்லாம் தாய். [ஆம் மனம் தான் தாய்] 

அதை கவியரசர் எவ்வளவு தெளிவாக ஆணித்தரமாக பாடியுள்ளார்.

சரி      மறப்பதில்லை  என்று சொல்லும் போதே ஒரு நீண்ட கால பரிமாணத்தை சொல்லாமல்   சொல்லும் நேர்த்தி.

கவி சொல்லிவிட்டார் .. பாடலில் எப்படி சொல்வது நீண்ட நினைவில் இருந்து காற்றில் தவழ்ந்து வரும் ஹம்மிங் அதைத்தான் காட்டுகிறது. அதனால் ட்யூன் நிதானமாக பயணிப்பதோடு நிறைவாக கண்களும் மூட வில்லை  என்

கண்களும் மூடவில்லை என்றுஏங்கி காத்து இருந்த . துயரை சொல்ல முயல்கிறது. ஒவ்வொரு சரணத்திலும் இதே தகவல் தான்

தாமரை இதழில் மனதினை எடுத்து தனியே வைத்திருந்தேன்

உன் தோற்றமில்லை ஒரு தூதுமில்லை கண்ணில் தூக்கமும் பிடிக்கவில்லை என்று பேசும் நாயகி இதை செய்த வித்தகம் திரு எம் எஸ் வி வழங்கிய ட்யூன் அதிலும் ஒவ்வொரு சொல்லுக்கும் விசேஷ அழுத்தம் ஒவ்வொரு இல்லை  சொல்லும் போதும் ஏக்கம் தவிர வேறொன்றும் இல்லை என்ற உணச்சிக்கொப்பளிப்பில் சுசீலாவின் குரல் காற்றில் மிதக்கிறது.

அதை செய்வதென்ன எளிதா? இல்லை இசை மங்கி மென் குரலில் தொடர அவ்வப்போது சரோட்  எழுப்பும் மென் அழுகுரல் , குரலின் நிழலாய் துரத்தி வரும் தபலா [அனுமந்தப்பா வின் விரல் வித்தை]

அனைத்தும் சேர்ந்து நம்மையும் பின்னோக்கி இழுத்துச்சென்று நெஞ்சம் மறப்பதில்லை என்று ஆமோதிக்கச்சொல்லும் கந்தர்வ இசை . நான் இப்போது          II B S c  சிறுவனாக மனதளவில் உலவுகிறேன் ]

இதில் பல அசுரர்கள், கவிஞர், விஸ்வநாதன் -ராமமூர்த்தி ,சுசீலா , வின்சென்ட் சுந்தரம் [ஒளிப்பதிவு ] அனைத்தையும் ஒருங்கிணைத்த ஸ்ரீதர்

ஜமீன்தார் காலத்திய கதை சைக்கிள் மோட்டார் சைக்கிள் , ஆட்டோ , பஸ் ரயில் எதுவும்  கண்ணில் படாதபடி காடு  மலை வயல்வெளியில் படமாக்கி உள்ள அசுரர் கூட்டம்  

பாடலை ஆழ்ந்து கேட்டு மனதைப்பறிகொடுங்கள். பாடலுக்கு இணைப்பு இதோ 

SONG NENJAM MARAPPADHILLAI  [1963\ KD VR PS  https://www.youtube.com/watch?v=ZYLUUHCMijs

இப்பாடலை சுபஸ்ரீ அவர்களின் விளக்கத்தோ டு கேட்டு மகிழ இணைப்பு இதோ

https://www.youtube.com/watch?v=I3kkuAaS6GM QFR 197

2 comments:

  1. Excellent write up, Prof. I just csnnot say how many times I would have seen/am seeing this movie !! Every times it looks fresh with its lifting factors, Sridhar, MSVTKR, KD Vincent and actors.

    ReplyDelete
  2. எனது இளமையில் இத்தகைய பாடல்களை கேட்டு ரசித்திருந்தாலும் நமது பேராசிரியர் மற்றும் சுபஸ்ரீ அவர்களின் வர்ணனைகளை கேட்டபின் இது நெஞ்சம் மறக்கமுடியாத பாடல் என்பதை உணர்கிறேன். காலத்தால் அழியாத இப்பாடலை நமக்களித்த அந்த நால்வருக்கும் வர்ணனையாளர்களுக்கும் நன்றி.

    ReplyDelete

AUTOBIOGRAPHY [Equus asinus] - 2

  AUTOBIOGRAPHY   [ Equus asinus ] - 2 என்   சுயசரிதை -2 ஹலோ நான் கழுதை பேசுகிறேன் .. Blog   எழுதும் திரு ம வ சொன்னது சரிதான்...