Tuesday, April 21, 2026

INDIA AND WOMEN

 INDIA AND WOMEN

இந்தியாவும் பெண்களும்

நான்  எண்ணை  செக்கு பற்றி எழுத முனைய  பலர் வீறு கொண்டு எழுத முனைந்த சம்பவம் நம்மை சிந்திக்க வைக்கும். 

சிபி ஐ விசாரணை மாதிரி எது கேட்டாலும் இயற்கைக்காட்சியை ஜன்னல் வழியே பார்க்கும் வாசக அன்பர்கள் இப்போது விமரிசனப்பார்வை வைப்பதை பார்க்கலாம்

ஆஹா என்னே வாழ்த்துரைகள் ?

தமிழ் புத்தாண்டு தினத்தில் ஒருவர் வழங்கிய பல்கலை நிகர்த்த பட்டம்

கற்பனை வறண்டவன் [மண்டை காய்ந்த நபர்]

அடுத்து வந்த ஒரு பதிவில்

செக்கு மாடு   [ போக வேறு பாதை தேடாமல் சுற்றிசுற்றிவருபவன் அல்லது அரைத்தமாவையே அரைக்கும் சிப்பந்தி ]  இது ஒரு டிப்ளமோ

பின்னர் ஒரு புதிய பட்டம்

கழுதை [எனது  ஒரே ஒரு வருத்தம் -பாவம் கழுதை வருத்தம் கொள்ளுமே என்பது. தான்]. இது [கழுதை]  PG DIPLOMA .

'செக்கு மாடு' , 'கழுதை' இரண்டும் ஆசிரியருக்கு பொருந்தும் என்று வேறு சொல்லியிருக்கிறார்.

சரி வாசகர்கள் என் எழுத்து குறித்து கொள்ளும் ஆய்வு மூலம் உணர்வது என்ன என்று மிகத்தெளிவாக உணர்த்தப்பட்டுள்ளது.  இந்த அடை மொழிகள் எனக்கு புதிதல்ல 37 ஆண்டுகள் கல்லூரிப்பணியில் கேட்காத புதிய பட்டங்கள் செக்கு மாடு மற்றும் கழுதை. . அவையும் இப்போது சூட்டப்பட்டு விட்டன.

 கற்பனை வறண்ட செக்கு மாடு அனைய உள்ளூர் கழுதை  குட்டிச்சுவர் அருகே நின்று கொண்டு வேலை செய்யாமல் ஏய்க்கும் என்றொரு கருத்து முன் வைக்கப்பட்டிருக்கிறது.

அந்த கருத்து கற்பனை மட்டும் அல்ல உண்மையின் நிழல் கூட படியாத அசல் அக்மார்க் பொய். அந்த கருத்தை நாம் சுமந்தால்   அது கழுதையின் பிழை அல்ல. நாம் விமரிசிக்கும் எந்த உயிரினம் குறித்த்தும் உண்மை அறியாமல்  வசை மொழியாக மட்டுமே அவற்றின் பெயர்களை பயன்படுத்த அறிவோம், விழைவோம் அவசரம் கொள்வோம். .

கழுதை குறித்து கிஞ்சித்தும் அறிய வேண்டுவோர் , எழுத்தாளர் திரு. ஆர்  கே நாராயணன்  எழுத்துகளை  படிப்பது  அவசியம் .

என்னது படிப்பதா ? அது எமது வேலை அல்ல . படிக்க சொல்லி விட்டு அதில் கேள்வி கேட்டால் யாரால் இருக்கு இப்போது பதில் சொல்லிக்கொண்டிருக்க என்று இமய மலை நோக்கி அமர்ந்து "ஓம் நமஸ் சிவாய ,ஓம் நமஸ் சிவாய" என்ற ஓங்கார ஒலி ஒலிக்கத்தொடங்கிவிடுமே.'   என்னே நமது "பாடாண்டிணை" ?

அப்படியே  "பாடாண்டிணை"   என்பது என்ன என்று விளக்கி விட்டு கையோடு ஒரு 10 வரியில் 'கழுதை குறித்து யாராவது ஒரு குறிப்பு வரையுங்கள் பார்ப்போம் அப்போது தெரியும் கழுதை ஒரு 'COMPLICATED SUBJECT ' என்பது.  சரி ஆங்கிலத்தில் ASS மற்றும் DONKEY என்று இரு சொற்கள் உண்டு. அவை  உணர்த்துவது என்ன?.    சரி அப்படியெனில்

கழுதை என்ற   பட்டியலில் என்னை வைக்க எது பொருத்தமான பெயர் ASS என்பதா அல்லது DONKEY என்பதா என விளக்கினால் சில கழுதைகளேனும் அமைதி கொள்ளும்.

செக்கு மாடோ , கழுதையோ , மண்டை வறண்ட [SCLEROCEPHALY ] நபரோ எதுவாயினும்

யாராவது ஒருர்

 "பாடாண்டிணை"   என்பது என்ன என்று விளக்கி விட்டு கையோடு ஒரு 10 வரியில் 'கழுதை  குறித்து   ஒரு குறிப்பு வரையுங்கள் பார்ப்போம்' .

 நன்றி

மண்டை வறண்டோன்

INDIA AND WOMEN

இந்தியாவும் பெண்களும்

கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் பெண்களுக்கான முக்கியத்துவம் அதிகரித்து வருகிறது. கிட்டத்தட்ட பெண்கள் இல்லாத துறைகளே இல்லை எனலாம். இந்தியாவின் வான் படையில் போர் பைலட்கள் இயங்குவதை பார்த்தோம். இந்திய ரயில்வே துறையில் பெண் பைலட்கள் சில ஆண்டுகளாகவே அதிகரித்து வருகின்றனர். சுமார் 1990 களில் இருந்தே எஞ்சின் டிரைவர்களை பைலட் என்றே ரயில்வே துறை பெயரிட்டுள்ளது. இத்துறையில் பெண்கள் செயல் படுவது பெருமைக்கும் வரவேற்புக்கும் உரியது . சமீபத்தில் பெண்கள் தின நிகழ்வாக பெங்களூரு- மைசூரு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்   பெண்களே இயக்கி பெரும் பேசு பொருள் ஆனது. அவர்கள் இளம் பெண்கள். ஆயினும் உரிய திறனுடனும் நம்பிக்கையுடனும் ஒரு ரயிலை இயக்கியதை பாராட்டாமல் இருக்க இயலாது. அதிலும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்  ஒரு சிறப்பான முக்கியத்துவம் கொண்டது.

இவ்வகை ரயில்கள் எஞ்சினை இயக்குவது மட்டும் அல்ல, உரிய நேரத்தில் முறையான பகுதியில் ரயில் பெட்டிகளை திறப்பதும் , உரிய எச்சரிக்கைக்குப்பின் மூடுவதும் பைலட்களின் மேற்பார்வையில் மட்டுமே நடை பெறும். அவ்வப்போது வரும் தகவல் அறிவிப்புகள் வெளியிடுதல்,இருப்புப்பாதை சிக்னல் நிலை தன்னை கவனித்து  எஞ்சினை இயக்கவேண்டும்.மேலும் காஷன் என்னும் எச்சரிக்கை தகவல்கள் வண்டி புறப்படும் முன் பைலட்கள் வசம் தரப்படும் அதில் எந்த இடத்தில் வேகம் குறைந்து எவ்வளவு தூரம் கடந்த பின் வேகம் இயல்பு நிலைக்குவரலாம் என்பன குறிக்கப்பட்டிருக்கும். அதில் எதையும் தவற விடாமல் கவனமாக செயல் படாவிடில் பெரும் விபத்து நிகழும் வாய்ப்பு உண்டு. எனவே விமான ஓட்டியை விட ரயில் பைலட் மிகுந்த எச்சரிக்கையுடன் இயங்க வேண்டும். இவ்வனைத்தையும் நிர்வகிக்க உரிய பயிற்சி பெற்ற  பெண்கள் லோகோ பைலட் பணியில் செயல் பட்ட வீடியோ இன்றைய பதிவில்.

அது ஒரு பெருமைக்கான நிகழ்வு என்பதால் குதூகலமாக சில குடும்ப உறுப்பினர்களுக்கும் இடம் கொடுத்து பதிவிடப்பட்ட காட்சிகள் இவை.  மொத்தத்தில் நமது நாடு முறையான திசைகளில் வளர்ச்சி கொள்வது மகிழ்வு தரும் நிகழ்வே. நன்றி

அன்பன்

   

இணைப்பு இதோ  .

 https://www.youtube.com/watch?v=Zc8tCnPkuyY women VandeBharath pilots women’s day

 

3 comments:

  1. டிக்கெட் பரிசோதகராக பல பெண்கள் வருவதை நான் கண்டதுண்டு
    இவர்களுக்கு 50 சதவிகித இட ஒதுக்கீடு கொடுக்கலாம்.

    ReplyDelete
  2. அன்றைய கவி
    "பட்டங்கள் ஆள்வதும்
    சட்டங்கள் செய்வதும்
    பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்"
    இன்றைய சேர்க்கை:
    வந்தே பாரத் ஓட்டுவதும்
    விண்கலங்கள் செலுத்துவதும்
    பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்.
    A mind voice
    வாத்தியார் ரொம்ப ஹோம் ஒர்க் குடுக்கறார். பண்ணித்தான் ஆகணும்.ஹும்...முயற்சிப்போம்.
    இல்லேன்னா
    வெயில்ல நிக்கணும்:
    கத்திரி வெய்யில்
    ஹீட் ஸ்ட்ரோக் பயம்
    பெஞ்சு மேல நிக்கணும்:
    கால் வீங்கிடும்
    ஏற்கெனவே வேரிகோஸ் வெயின்
    தோப்புக்கரணம் போடணும்:
    ஏற்கனவே ஆர்த்ரைட்டிஸ்
    நீ ரீப்ளேஸ்மெண்டுக்கு போயிடும்
    ஹ்ம்ம்...
    ஈஸ்வரோ ரக்ஷதுக்ஷ

    ReplyDelete
  3. அதெல்லாம் சரி
    இப்படி அழுது புலம்பி அந்த தண்டனை , இந்த தண்டனை ,வெய்யிலில் நிற்கவேண்டிவரும் கால் வலிக்கும் என்று இருபத்துமூன்று வரிகள் எழுதி அங்கலாய்த்து ஏதேதோ சொல்லிக்கொண்டிருப்பதை விட கொடுத்த வினாவுக்கு நான்கு வரிகளில் விடை எழுதலாமே. ஹுக்கும் அதுதானே ஆகாது அதுக்கு படிக்கணுமே அதுவும் ஆழ்ந்து படிக்கணும் சிக்கல் அங்கல்லவா துவங்குகிறது. .

    ReplyDelete

WILLIAM SHAKESPEARE -3

  WILLIAM  SHAKESPEARE -3 Perhaps not being seized of the intricacies of Shakespeare –the playwright, some of our blog-viewer friends read...