Sunday, April 19, 2026

OIL EXTRACTION TRADITIONAL WAY

 OIL EXTRACTION TRADITIONAL WAY

செக்கு மாடு

என்ன சார்

இந்த வாரமும் மீண்டும் மதுரை தானா என்றார் அன்பர்.                                        நான் ஏன் என்றேன்.

அவர் "இல்லை செக்கு மாடு மாதிரி மதுரையை சுற்றிச்சுற்றி வருகிறீர்களே உங்களுக்கு அலுப்பே வராதா? என்றார்.

நான் 'சார் நான் கழுதை மாதிரி  மதுரையை சுற்றுகிறேன் என்றால் சரி அதெப்படி செக்கு மாடு என்கிறீர்கள் ? என்றேன் .

அவர் " அதாவது வந்து என்னன்னா , ம் ம்  வந்து திரும்பி திரும்பி ஒரே டாபிக் [மதுரையை பற்றி] எழுதறீங்களே அதுனால 'செக்கு மாடு மாதிரி னு சொன்னேன்"  என்று சமாளிக்கப்பார்த்தார்.

என்னதான் கற்பனை வறண்ட sclerotic head ஆனாலும் சிக்கியவர்களை சும்மா விடலாமா. மதுரை பாஷைல "விடமாட்டம் ல்ல "

உமக்கு மதுரையும் தெரியாது, மாடும் தெரியாது செக்கும்   தெரியாது இந்த அழகுல செக்குமாடு எப்படி தெரியும். இப்போ தெரிந்துகொள்ளுங்கள்

இதோ செக்கு மாடு அதுவும் சும்மாவா நிஜம் செக்கு, நிஜம் மாடு , நிஜம் எண்ணை உண்மையான புண்ணாக்கு [தூய தமிழில் பிண்ணாக்கு என்பதே சரி] உங்களுக்கு ஒரு புண்ணாக்கும் தெரியாது என்று எனக்கு தெரியும் என்று சொல்லி இன்றைய BLOG பதிவை தொடர்கிறேன்

இந்த செக்கு எண்ணை நிறுவனத்தில் பழைய முறையில் உணவு எண்ணெய்களை செக்கில் பிழிந்து எடுக்கிறார்கள். செக்கு  உரல்= கருங்கல் , குழவி= நெடிய மரம். உரால் நிலையாக நிற்க குழவி சுற்றுகிறது. குழவியை இயக்க மாடுகள் ஒரே வட்டப்பாதையில் சுற்றி  வர, மெல்ல எண்ணை வித்து நசுங்கி கசக்கிப்பிழிந்து எண்ணையும் பிண்ணாக்கும் திரவ மற்றும் திட பொருட்களாக செக்கின் உரலில் சேர்ந்து, எண்ணை பிழியப்படுகிறது

எண்ணைய் பிரியும் நேரத்தில் மாடுகளை வேகமாக இயக்க , பிழிதல்  விரைவாகிறது. முடிவில் செக்கின் அடிப்பகுதியில் உள்ள குழாயில் அடைப்பை நீக்கி எண்ணையை வெளியேற்றி பிடிக்கிறார்கள். இங்கே கடலை , எள் , தேங்காய் [கொப்பரை] மற்றும் பாதாம் [almond ] எண்ணை தனித்தனியே செக்கு முறையில் பிழிந்தெடுத்தல் நடை பெறுகிறது

பின்னர் பிண்ணாக்கை நீக்கி வெயிலில் உலர்த்தி அதையும் விற்பனை செய்கின்றனர். செக்கு மாடுகள் கடமையே கண்ணாக இயங்கக்காணலாம்.

செக்கு மாடு குறித்த ஒரு பதிவு.UNRELATED TO THE VIDEO 

செக்கு முதலாளியின் மகன் பி.காம்.

என்னப்பா எவ்வளவோ மிஷின் வந்திருக்கு இன்னும் மாட்டை கட்டி ஓட்டுறீங்களே.

அப்பா : மிஷின்ல சூடு அதிகமாகி எண்ணை யும் புண்ணாக் கும் வாசனை இல்லாம போகும்.

மகன் நமுட்டு சிரிப்புடன்

மாடு ஒரே இடத்துல ஓடாம நின்னா உங்களுக்கு நஷ்டம் தானே.  

அப்பா

அதான் மாட்டுக்கு கழுத்துல மணிகட்டிருக்கேன்.  ஓடாட்டி மணி சத்தம் நின்னுடும். அப்பா போய் அதட்டினா ஓடும்.

மகன்

சரி மாடு ஓடாம கழுத்தை ஆட்டிக்கிட்டிருந்தா ?

அப்பா

அதுக்குதான் இந்த மாடுகளை நான்  B. Com   சேக்கலை , உன் வேலைய நீ ஒளுங்காப்பாரு .

https://www.youtube.com/watch?v=Aorddt_RD3w Bullock DRAWN ROLLER

Ancient Coconut Oil Extraction… Bulls Still Do This Today!

2 comments:

  1. செல்லத்தம்மன் கோவில் தெரு நல்லெண்ணை மதுரையில் பெயர்பெற்றது.
    ஏனென்றால் அது செக்கிலிருந்து வந்த எண்ணை

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete

1 A RABID ACQUISITION and 2 A GRAND RETREAT

1 A  RABID  ACQUISITION   வெறித்தனமான சேகரிப்பு ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு என்ற முதுமொழி அவ்வப்போது செயல் வடிவம் பெறக்காண்...