LET US PERCEIVE THE SONG -64
பாடலை உணர்வோம்
–64
துள்ளி ஓடும்கால்கள்
எங்கே
[பணக்கார
குடும்பம்]
கண்ணதாசன்
, விஸ்வநாதன்
-ராமமூர்த்தி
டி
எம்
எஸ்
, சுசீலா
எண்ணற்ற தமிழ்
பாடல்கள்
கேட்பதற்கு
ரம்மியமானவை.
சில
கவிதை
சிறப்பு,
ராக
அமைப்பு,
இசை
தொகுப்பு
, தாள சிறப்பு என்ற பிரத்யேக பெருமைகளால்
புகழும்
வெற்றியும்
அடைந்தவை.
அது
போல்
குறிப்பிடத்தக்க
எந்த
வலிமையுமில்லாமல்
அபார
வெற்றிகண்ட
எம்
எஸ்
வி
/ [வி
ரா
] பாடல்கள்
அநேகம்
.எளிமையே
வலிமை
என
வெற்றி
ஈட்டிய
பாடல்களுள்
ஒன்று
தான்
இன்றைய 'துள்ளி ஓடும்கால்கள்
எங்கே'
பாடல்
. இப்பாடல்
முன்பே
ஓரிருமுறை
பேசப்பட்டது
தான்
எனினும்
இன்றைய முயற்சி வேறு
வகையானது.
எந்த சொல்லும் இலக்கிய அமைப்பு கொண்டதல்ல ஆனால் பாடல் நம்மை எளிதில் ஆட்கொள்கிறது. ஏன் என கேட்டால் அன்பர்கள் மேற்காசிய போர் கட்டுரை வரைய ஆயத்தம் செய்வார்கள்.
ஆம், அறிவுஜீவிகள் சினிமா பாடலையா ஆய்வு செய்வார்கள். நேதன்யாஹு , எலான் மாஸ்க், ட்ரூடு, புதின் வகையினருக்கும் ஆலோசனை வழங்கும் சர்வதேச ஆளுமைகள் -தப்பி ஓடும் போர் வீரன் பற்றி யோசிப்பார்களா ? துள்ளி ஓடும் [பெண்] கால்கள் குறித்து பார்வை கொள்வார்களா?
போய்யா , எனக்கு எவ்வளவு வேலை இருக்கிறது என்று மௌனம் கொள்வர் . அதனால் எந்த கேள்வியு ம் இல்லாமல் நம் கருத்தை சொல்லி விட்டு கடந்து செல்வதே மேல்.
இப்பாடலின் சிறப்பு எளிமை தான். சொல்லில் எளிமை, ராக அமைப்பில், இசை அமைப்பில் என எல்லாமே எளிமை ஆயின் வலிமையான வசீகரம் பாடலின் சிறப்பு.
பாட லின் துவக்கத்தில் தனித்தனியே ஒலிக்கும் மண்டோலின் , வயலின் போங்கோ வெகு நேர்த்தியாக துவங்க மெல்ல தென்றலாய் நுழையும் டி எம் எஸ்ஸின் குரல்
பல்லவியை lதுள்ளி ஓடும் கால்கள் எங்கே, தூண்டில் போடும் கண்கள் எங்கே கள்ளப்பார்வை போனதெங்கே கன்னி தெய்வமே ஓ ஓ ஓ என்று கழிவிரக்கம் காட்டும் நுணுக்கம் அந்த ஓ ஓ என்பது அனுதாப ஒலி [அதாவது துள்ளும் கால்தூண்டில் வீசும் பார்வைகூரிய பார்வை ஏன் மறைந்தன என்ற வினவல்..
தனக்கு திருமணம் பேசியாகி விட்டது இன்னும் தூண்டில் துள்ளல் எல்லாம் கிடையாது என்று விவரம் கூறுகிறாள் "மாலையிட தேதி சொன்னார் , மஞ்சளுக்கு தூது சொன்னார் பாலருந்த நாள்
குறித்தார்
பஞ்சணையை விரித்து வைத்தார் .ஓ ஓ ஓ காலிருந்தும் ஓட்டம் இல்லை கண் இருந்தும் பார்வை
இல்லை ........ இனிமேல் துள்ளித்திரிவதேது என்று ஏக்கம் காட்டி அடங்கும் அந்நாளையப்பெண்
ஏதேதோ அங்கங்களின் வனப்பு கொண்டு கண்களுக்கு விருந்து வைத்தாய் இப்போது அடங்கி ஒடுங்கி விட்டாய் என ஆண் வருத்தம்
கொண்டு பாட நாயகி
உன்னுடைமை ஆன பின்னே எனதென்று ஏதுமில்லை , மன்னன் உந்தன் மலரடியில் கண்ணிரண்டை சாட்சி வைத்தேன் என்று சொல்லி வாழ்வில் இணைந்ததை நேர்த்தியாக கண்ணதாசன் சொல்லியுள்ளார்.
சாதாரண சொற்கள் ‘மாலையிட , தாமரையின்’’ இவற்றை அவ்வப்போது சிறு அசைவுடன் பாட வைத்து பாடலின் காந்த கவர்ச்சியை புடம் போட்டு மிளிரவைத்த எம் எஸ்வி சத்தியமாக மெல்லிசை மன்னரே தான். அது மட்டுமல்ல போங்கொ வும் தபாலாவும் பாடலில் மாறி மாறி பங்கேற்க வைத்து அப்போதே இது போன்ற புது முயற்சிகளை நிறைவாக செய்து எளிய பாடலை வலி ய வெற்றி யாக மாற்றி பெரும் ஆளுமையை வெளிப்படுத்தியுள்ளார் மன்னர். பாடலை வெகு நுணுக்கமாக ஆழ்ந்து கேளுங்கள், சொற்களின் நளினம் எவ்வளவு மெருகு ஏறி இருக்கிறது என்றுணர இயலும் . பாடலுக்கு இணைப்பு இதோ
https://www.youtube.com/watch?v=BEP5alKJnbo thulli odum KD VR TMS PS periya
idaththuppen
நான் அதிகம் கேட்டிராத பாடல்
ReplyDeleteநான் கேட்டிராத பாடல். இப்போது தூண்டில் வீசி சி(சொ)க்க வைக்கிறது.
ReplyDeleteA song which did not get its prominence in the movie because of the other super hit numbers. Unfortunate !! What a fine composition, soft melody !! A mesmerising song which has so much intregacies to discuss and enjoy !!! After the PS humming o..o..o..o, don't miss to listen to the guitar piece. Hear with head phone on. Each line of charanams has a different தாள நடை ! Melody glides, bhaavams are wonders which only.MSV can conceive and compose !!
ReplyDelete