LET US SEE -3
எங்கே பார்ப்போம்-3
ஹலோ மை டியர் ராங் நம்பர் [மன்மத லீலை -1976] கண்ணதாசன் , எம் எஸ் வி, கே ஜெ ஜேசுதாஸ் , எல்ஆர். ஈஸ்வரி
சென்ற பதிவின் தொடர்ச்சி
சரி இவன் என்ன பித்தனா என்று கேட்டால் பின்
வரும் பாடலை கேளுங்கள் இவன் தேர்ந்த வித்தகன் என்று புரியும்.. எல்ஆர் ஈஸ்வரி சும்மா ஜமாய்த்துள்ளார்.
பிற விவரங்கள் பின்னர் என்ற
பீடிகையுடன் 'ஹலோ மை டியர் ராங் நம்பர் ‘பாடலை கேட்க சொல்லி இருந்தேன்.
அதன் தொடர்ச்சியாக சிலர் பேசியதில் இருந்து புரிந்தது --எழுதியதைக்கூட
படிப்பதற்கு ஆர்வமோ முயற்சியோ சிறிதும் இல்லாமல்
ஒவ்வொரு பதிவையும் 'படித்துவிட்டதாக' உதட்டளவில் பேசுவது நன்கு
புரிந்தது .
இதற்கு பரிகாரம் ஒன்றே ஒன்று தான் -இது போன்ற பதிவுகளை அடியோடு நிறுத்துவது
தான். அப்போதுதான் கால விரயமும் , வேட்டை
ஆடி வீடியோக்கள் தொடர்பான இணைப்புகளை தொகுப்பது
போன்ற பலனற்ற வேலைகளை தவிர்த்து விட்டு
மருத்துவ தாவரங்கள், தேச பாதுகாப்பு, கல்வி
பற்றிய சில தலைப்புகளோடு வாரத்தில் 3 OR 4 நாட்கள்
மட்டும் பதிவுகள் செய்தால் போதும் என்கிற நிலைக்கு வந்துள்ளேன்.
திரை தகவல்/ பாடல் இல்லை என்றால் நாங்கள் பதிவுகளை
பார்க்க மாட்டோம் என்று சொல்லுபவர்கள் உண்டு.
அப்படி எவரேனும் விரும்பினால், ரொம்ப நல்லது, நீங்கள் பார்க்க
விரும்பவில்லை எனில்
நல்லது போய் வாருங்கள் , நன்றி என்பதே எனது நிலை.
இதுவே இந்த 'எங்கே பார்ப்போம் ' தொகுப்பில் இறுதியானது என்பதால்
இதன் விவரங்களை காண்போம்.
வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு
என்ற முதுமொழி நாம் நன்கு அறிந்த ஒன்று தான். ஆனால் வல்லவனுக்கு வல்லவி [வல்லவள்
] வையகத்தில் என்ன பக்கத்திலேயே உண்டு என்பதே இப்பாடல். இதிலும் லோ
லோ என்று அலையும் நாயகன் [அதே
பித்தன் தான்] அவனை அலைக்கழித்து மகிழும் பெண்
ஒருத்தி -இதுவே களம் .
அவள், அவனை அலைக்கழித்து மகிழ்வது என்பது
படம் பார்த்தவர்களுக்கு
தெரியும்.
நாயகன் பித்தன் எனவே அவன் பஸ், ரயில், வீடு, பூங்கா என நோட்டமிடுவதையும்
தாண்டி-- வேறு வேலை இல்லாத தருணங்களில் போன் பேச முயன்று , பெண் குரல் சிக்கி விட்டால் உடனே வலை வீசுவதை குலத்தொழிலாக மேற்கொள்வான்.
அப்படி ஒருத்தி போனில் சிக்கி விட, அவளை என்ன சொல்லி அழைப்பது? வலை
வீசுபவன் எண்ணற்ற உத்திகளை மேற்கொள்வான் அப்படி
ஒன்று தான் “ஹலோ மை டியர் ராங் நம்பர்' என்று முகம் தெரியாத பெண்ணுக்கு 'நாமகரணம்
' சூட்டி விரைவாக வலை விரிக்கிறான்.
இங்கிருந்து வலை வீசும் கலை- கவியரசரின் சொல்லாடலில் மிளிர அதன் வலிமையை வெளிப்படுத்த குரல்
பாவம். வெகு சாமர்த்தியமாக -எல் ஆர் ஈஸ்வரியின்மோகம் ததும்பும் குரலில். –
அதுவும் ஹலோ என்று குழைவது வலைவீசியவனையே வேறொரு வலையில் சிக்க வைக்க வலை யும் எதிர் வலை யும் மாறி மாறி அரங்கேறி வல்லவன்
-வல்லவள் ஆட்டம் பாடல் நெடுகிலும். இப்பாடலுக்கு
பெண் குரலே மூலதனம் என்பது எம் எஸ் விக்கு தெரியாதா என்ன ?
மனிதர் பெண் குரலையும், இசையின்
வடிவங்களையும் பல
அமைப்புகளில் அலங்கரித்து வெகுவாக போதை ஏற்றி பாடலே கிறங்கி மயங்கி
மன்மத போர்க்களமாக விஸ்வரூபம் எடுத்துள்ளது . எப்படி?
பல்லவியிலேயே மன்மத ஆதிக்கம் தொனிக்கிறது
, நேரடியாக மன்மத பாணம் ஹலோ
மை டியர் என்று அறிமுகமில்லாதவளை
அழைத்து பெயர் தெரியாத 'அவளை' ராங் நம்பர் என்று பெயர்சூட்டி வலையை விரிக்கிறான்.
அவள் இவனை கிற்ங்கடிப்பதென்று முடிவெடுத்து 'போதைக்குரலில் 'ஹலோ' என்று கொஞ்ச நாயகன் நிலைகுலைந்து அவள் விரித்த வலையில் மாட்டிவிட , பெண்ணின் ஆதிக்கம் தொடர்கிறது.
நாயகன் காரியத்தில் கண்ணாய் இருப்பவன் எனவே
'கேட்கவே உந்தன் குரல் சொர்கம் , நேரிலே பார்த்தால் என்ன வெட்கம்.? என்று
வலைவிரிப்பை விரிவாக்கம் செய்ய, அவள் என்ன சாதாரண மானவளா? சரியான மன்னி [மன்னனுக்கு இணையான
வள் 'மன்னி' தானே? ஏதோ உறவுமுறை என்றெண்ணாதீர்கள்].
அவள் இவனை இடது கை சுண்டுவிரலால் சாய்க்கிறாள்
பாருங்கள்
"கேட்ப தில் தீரும் உங்கள் தா கம் ' 'நேரிலே பார்த்தால் என்ன
லாபம் ?
-ஹலோ என்று அவன் காலடியில் 1 டம்ப்ளர் விளக்கெண்ணையை ஊற்றி அவன் மொத்தமாக அவுட் அநேகமாக
மல்லாக்க சாய்ந்துவிட்டான்
அவர்களின் சொல்லாடல் தான் பாடலின் ஜீவன் வலைக்கு வலை விலைக்கு விலை
, கலைக்கு கலை என்று எதிர் தாக்குதல் நீள்கிறது. எல் ஆர் ஈஸ்வரி குரலில் தோன்றும்
கரகர வசீகரக்குழைவின்
முன் எவன் என்ன செய்ய முடியும் அம்மணி பின்னி எடுத்துள்ளார் அதுவும் ஒவ்வொரு 'ஹலோ'
வும் நாயகனை ஹாலோ [HOLLOW] ஆக்கி கிறங்கடிக்கிறது. .
முதல் வரியை பாடியதும் தாளம்
ஒலிக்க வலை விரித்தல் கைங்கரியம் ஆண் துவக்கி ‘நேரிலே பார்த்தால் என்ன’ என்று
வலை வீச அவளோ என் குரலிலேயே உன் தாகம் தீர்ந்துவிட்டதே இன்னும் பார்த்து ஆவதென்ன என்று
மறுப்பது போல் அவனை ஏங்க வைக்க அவன் இவளை வர்ணித்து மடக்க பார்க்கிறான் காவிரியில்
மீனோ , பூவிரியும் தேனோ என அவன் இவளை பாடியதும் அவள் ஒரே சொல்லில் நோ , நோ நோ என்று
சொல்லி விட்டு ‘அற்புதம் ஏதுமில்லை’ ‘அதிசய பெண்மை இல்லை’ என்று அவனை தடுக்க முயல்வது பாடலின் ஹைலைட்.
காற்றுக்கு இடம் இருந்தால்
குடி புகுந்து விடுவான் இவன். ஒருவன் சபலம்
கொள்வது தெரிந்தால் அவனை அலையவிட்டு ஏங்க வைத்து தூங்க விடாமல் கழுத்தறுக்கும் 'உத்தமிகள்'
பலர் உலகில் உண்டு. படம் பார்த்தவர் களுக்கு தெரியும் அவள் இவனை தப்பவிடாமல் மோகம்
ஊட்டி, லோ லோ என அலையவிட்டு பின் டாடா காட்டுபவள் என்பது.
இவனை அடக்குவதை விட ஏங்க வைத்து தவிக்க விடும் உத்தி பல பெண்களின் ஆயுதம்; அதைத்தான்
அவள் சொல்கிறாள்
“பாவை என்னைப்பார்த்தால் காதல் வரக்கூடும்” என்று
அவள் சொல்ல ரியலி என்று ஏக்கப்பெறும் உணர்வில் ஜேசுதாஸ் பாட அடுத்து பூஜை அறையைக்காண
ஆசை வரக்கூடும் என்று எச்சரிக்கிறாள் [அது பல்பொருள் விளக்கம்]
இவன் கூச்சமே இல்லாமல் ஐ
டோண்ட் மைண்ட் என்று விரைந்து பாடி உள்ளக்கிடக்கையை கொட்ட , சரி நீ யாரையெல்லாம் காதலிக்கிறாய்
என்று ஆய்வு செய்ய இவன் பத்தினன் வேடம் [பத்தினிக்கு ஆண்பால் எனக்கொள்க] எடுத்து
"என்னவென்று சொல்வேன் -உன்னையன்றி யாரோ என்று அவளை மட்டுமே காதலிப்பதாக நடிக்க
அவள் ‘நான் வேலி யுள்ள முல்லை என சொல்ல, இவனோ வேலி எனக்கில்லை என்று சுதந்திரம் கோருகிறான்.
அவள் லேசுப்பட்டவள் அல்லள் அதனால் ‘பொறுமையுடன் இருங்கள்’ என அறிவுறுத்த
ஏமாற்றம் விஞ்ச 'முதுமை வரும் வரையோ என்று
ஏக்கம் காட்டுகிறான். விடாக்கண்டன் கொடாக்கண்டி பாடல் இது..
இசையை நன்கு கவனித்தால்
ஒருவரை ஒருவர் விழுங்கி விடும் தீவிரம் காட்டுவதை வெகு நேர்த்தியாக ஒலி பிணைப்புகள்
வெளிப்படுத்த அவசர மனம் தாளத்தில் வெளிப்பட வேறெந்த பாடலிலும் இல்லாத அற்புத அமைப்பில்
தொகுத்துள்ள மெல்லிசை மன்னரை என்ன சொல்லி பாராட்ட? தருணத்திற்கேற்ற ஒலி , இசை பாவம்
, வேகம் நிதானம் என இசைவேள்வி நடத்தும் ஞான பண்டிதர் அல்லவா எம் எஸ் வி அவர்கள்.
ஜேசுதாஸ் அவர்களுக்கு ஏக்கம்
தொனித்தால் போதும், ஈஸ்வரிக்கோ எதிராளிக்கு ஆர்வம் தோன்ற குரலையும் உணர்வையும் அள்ளித்தெளிக்க
வேண்டும். ஈஸ்வரி வெகு சிறப்பாகப்பாடி [ஒரு பெண் ஒரு சபலிஸ்ட் ஆண் சிக்கினால் எப்படி
வதைக்கலாம் என்று ஒரு குரல் டெமோ. இப்பாடல்].
மெல்லிசை மன்னர் இப்பாடலுக்கு
ஆணுக்கு ஒருவகை அமைப்பையும் பெண்ணுக்கு கிளர்ச்சிதரும் பாடும் முறையையும் பின் பற்றியுள்ளார். அதனால் ஆண்
மெல்ல பாட, பெண் விரைந்து பாட அதுவும் மெல்லிய அடிக்குரலில் ஹலோ என்று தேவகன்னிகை போல
கவர்ந்திழுக்க இவன் வெந்து சுண்ணாம்பாகி தவிக்கிறான்.
சரி அவளை ஏன் நீ லேசுப்பட்டவள்
இல்லை—இவனை அவள் ஏங்க வைப்பதாக சொல்கிறாய் என சிலர் கேட்கக்கூடும்.
நம்மவர்கள் எப்போதும் எனோ
தானோ ரகம் தானே. வீடியோவை ஒழுங்காக பார்த்திருந்தால் தெரியும், பாதி பாடலில் அவள் கணவன்
கொத்து பைல் களுடன் வந்ததும் இவள் போன் ரிசீவரை படுக்கையில் மறைத்துவிட்டு இயல்பாக
சோம்பல் முறிக்கிறாளே -அடேங்கப்பா பலே கில்லாடி தான். இவ்வனைத்தையும் எம் எஸ் வி, சிறு சிறு ஒலிகள் கொண்டு பாடலில் உணர்வு பொங்க இசை
அமைத்துள்ளார். .
மாறி வரும் கலாச்சார ஒழுங்கீனங்களில்
பெண்களும் [சிலர்] சளைத்தவர்கள் அல்லர் என்பதை சொல்லி 'மன்மத லீலை' யில் man மத லீலை மட்டும் அல்ல woman மத லீலையும்
உண்டு என்பதை வெகு நேர்த்தியாக உணர்த்திய 1976 ம் வருடத்திய பாடல். எவ்வளவு உழைப்பு
கொட்டிக்கிடக்கிறது இப்பாடலில்?
அன்பர்களே
இனிமேலும் தொடர்ந்து பாடல்களை
தொகுத்து எழுத வேண்டுமா? என்ற பெரும் கேள்வி
என் முன்னே விஸ்வரூபம் காட்டி நிற்கிறது. எவரும்
கவனம் கொண்டு எதையும் உள்வாங்குவதில்லை எனவே சலிப்பு தான் மேலிடுகிறது. நானும் மனிதன்
தானே, போதுமடா சாமி என்பதே எனது நிலை. நன்றி அன்பன் ராமன்
ஹலோ மை டியர் ராங் நம்பர் https://www.youtube.com/watch?v=C9aQGlObyl4
https://www.youtube.com/watch?v=Wg_17nqWPVQ&t=383s QFR 89
**************************************************************************
No comments:
Post a Comment