Sunday, April 12, 2026

MADURAI -8

 MADURAI -8

மதுரை-8

இதோ மதுரை மீண்டும் வந்துவிட்டது . எதுவாயினும் வெவ்வேறு தலைப்புகளில் விடியோக்கள் மதுரையின் தெருவோர உணவுக்கடைகளின் பெருமைகளை பறைசாற்றி ,  இது என்ன மதுரை என்றாலே 'தின்னிப்பயல்கள்' நிறைந்த ஊர் போல இருக்கிறதே என்றெண்ணம்ந தோன்றிவிடும் போல்  இருக்கிறதே.

ஆனால் தின்னிப்பயல்களில் சரி பாதியினர் வெளியூர் மக்கள்.. பாய்ந்து பாய்ந்து சிற்றுண்டி வாங்கி தின்று 20 ரூபாய்தான் ஆயிருக்கு என்று ஏக்க பெருமூச்சுடன் ஜிகர்தண்டா எங்கே கிடைக்கும் என்று வினவ உள்ளூர் ஆசாமி அது எங்கையும் கிடைக்குங்க என்று அலட்சியமாக சொல்லிவிட்டு , அதைக்காட்டிலியும்  பருத்திப்பாலை சாப்பிடுங்க உடம்புக்கும் நல்லது கபம் ஆஸ்துமா அண்டவே அண்டாது.

நான் நாப்பத்தெளு வருசமா டெய்லி பருத்திப்பால்தென் [பருத்திப்பால் தான் என்பதன் மதுர மொழி ]. வந்தவன் காக்கையை விழுங்கியவன் போல் மலங்க மலங்க விழிக்க உள்ளூர் வாசி " தெக்கு வாசல் பக்கம் போங்க அண்டா அண்டா வா பருத்திப்பால் யாவாரம் நடக்குதில்ல" 

வெளியூர் ஆசாமி அண்டாவெல்லாம் வேண்டாம் ஒரு கிளாஸ் இருந்தா போதும். நீங்க எந்தூரு?  அவன் கோயத்தூரு [கோயம்புத்தூர்] அம்புட்டு ஊருலருந்து வந்துட்டு 1 க்ளாஸ் தான் குடிப்பீகளாக்கும் ?   காலை மதியம் நைட்டு மூணு நேரமும் வாங்கி அடிங்க சும்மா 45 -50 ரூவாய்க்குள்ள முடிஞ்சிரும் வகுரு சும்மா கிச்சுனு நிறைஞ்சு இருக்கும். என்று ஆலோசனை இலவசமாக வழங்கும் நபர்கள் மதுரையில் அநேகம்.. இதனாலேயே சிறு குறு  உணவுக்கடைகளின் தெருவோர சொர்கம் மதுரை என்ற வீடியோ  இணைப்பு

MADURAI –A STREET FOOD PARADISE

https://www.youtube.com/watch?v=moJjfR1VLYA&t=670s

திருவிளையாடல் படத்தில் தருமி 'சேர்ந்தே இருப்பது  ?'   சிவன் 'வறுமையும்' புலமையும்

இன்று இதே கேள்விக்கு சிவன் சொல்வார் "மதுரையும் வடையும்'  நாள் ஒன்றுக்கு காலைமுதல் முற்பகலில் விற்பனை ஆகும் வடை சுமார் மூன்று டன் . மதுரையும் வடையும் என்றோர் வீடியோ இதோ  

https://www.youtube.com/watch?v=y2rlf-bdUrY&t=222s  Madurai and vadai

மேலும்

மதுரை வாசி என்றோர் வீடியோ இதோ

https://www.youtube.com/watch?v=BbIkcNJVdwQ Madura vasi

                                                                          அறிவிப்பு

     நான் சமீபத்தில் தெரிவித்தது போல் வரும் புத்தாண்டு முதல் செவ்வாய் , சனி இரு தினங்களில் BLOG பதிவுகள் இடம் பெறாது.                     ஏனைய தினங்களில் பின் வரும் அட்டவணை பின் பற்றப்படும்  .

                                   திங்கள்                     கல்வி /பொது விவரங்கள்

                                     புதன்                         பாதுகாப்பு தகவல்கள்

                            வியாழன்            திரை தொடர்பான பாடல்/ தகவல்/ பேட்டி ஏதேனும் ஒன்று

                                  வெள்ளி               மருத்துவ தாவரங்கள் [MEDICINAL PLANTS ]                                         

                                ஞாயி று                     ஆங்கில மொழி தொடர்பாக 

 அன்பர்கள் அளித்த பங்களிப்பும் ஈடுபாடும் கண்டபின்  வாரம் 7 நாட்களும் எழுதிக்கொண்டிருக்க முனிவன் /மூடன் இருவருக்கே சாத்தியம், நான் நிச்சயம் முன்னவன் அல்லன்.. எனவே பதிவிடும் நாட்களை  குறைப்பதை தவிர்க்க இயலாது. தொடர் கதை மறைந்ததைப்போல ஏனைய மறைவதும் தொடர்கதை  ஆகாமல் இருந்தால் பல பொருட்களை பார்க்கலாம்.

 அன்பர்கள் தான் இது போன்ற முடிவுகளுக்கு உதவுகிறார்கள். உதவிய அனைவருக்கும் நன்றி .                    அன்பன் ராமன்

--------------------------------------------------------------------------------------------------------------------

2 comments:

  1. உமக்கு ஏழரை நாட்டுசனியும் செவ்வாய் தோஷமும் பிடித்துவிட்டதா?

    ReplyDelete
  2. அன்புடையீர்
    பொழுது விடிந்ததும் நல்லாசி வழங்கிய நல் இதயர்களுக்கு உளமார நன்றி. எனக்கு என்ன பீ / பிடித்தது என்று சொன்னமைக்கு நன்றி. இப்படி blog எழுதிக்கொண்டிருந்தால் 7 1/2, 8 1/2 என்ன உடம்பு முழுதும் அறை விழுந்தாலும் ஆச்சரிய ப்பட ஒன்றுமில்லை. இதில் செவ்வாய் தோஷம் வேறு . சென்னை மொழியில் சொன்னால் 'சான்ஸே இல்லை' உருப்பட. வேறு சொல்லிக்கொள்ளும்படி என்ன இருக்கிறது? .

    ReplyDelete

LET US PERCEIVE THE SONG - 68

  LET US PERCEIVE THE SONG  - 68              பாடலை உணர்வோம் –68 நான் ஒரு குழந்தை [ படகோட்டி [1964] வாலி , விஸ்வநாதன் ராமமூர்த்தி...