Wednesday, April 15, 2026

Mrs. DEVASENA SRIDHAR

 Mrs. DEVASENA SRIDHAR 


I WISH TO SAY  

நான் சொல்ல விழைவது

அன்பர்களே

புத்தாண்டின் முதல் பதிவு நேற்று வெளியானது. இன்று இவ்வாண்டின் இரண்டாம் பதிவு.. வாரம் 7 நாட்களும் இயங்கிக்கொண்டிருந்த நிலை மாறி,  5 நாட்கள் [வாரத்தில் -செவ்வாய் சனி கிழமைகள் நீங்கலாக] இனி பதிவுகள் வர இருக்கின்றன. புத்தாண்டில் எனக்கு செவ்வாய் தோஷமும் 7 1/2 யு ம் பிடித்ததாக ஒரு ஆருடம் வந்தது.

 சிலர் ஏன் குறைத்துவிட்டீர்கள் என்று கேட்டனர். எழுதி எழுதி பலன் இல்லை படிப்பவர் எண்ணிக்கை குறைந்து சுருங்கி விட்டது என்று விளக்கினேன்.

இல்லை நான் படிக்கிறேனேன்று    பேசிய அனைவரும் சொல்கின்றனர். இப்படித்தான் சொல்வார்கள் ஆனால் என்ன படித்தார்கள் என்பது இறைவனுக்கே வெளிச்சம். எத்துணையோ முறை எண்ணற்ற கேள்விகள் கேட்டுள்ளேன். மன்மத லீலை படப் பாடல்கள் பற்றி கேட்டிருந்தேன் என்ன பதில் வந்தது?

ஒரே கேள்வியை பலமுறை கூட கேட்டு ப்பார்த்துள்ளேன். உதாரணம்   "INTELLIGIBLE"  எத்துணை பேர்  பதில் சொன்னீர்கள்?

ஏதாவது வினா எழுந்தால் இமயமலை நோக்கி அமர்ந்து "ஓம் நமஸ்ச்சிவாயா " என்று நிஷ்டையில் ஆழ்ந்து அமிழ்ந்து முனிபுங்கவர்கள் கூட நம்மை எட்டிப்பிடிக்க இயலாத ஒரு பெரும் வேள்வியில் மூழ்கிய ஞானசொரூபிகள் நாம்.

இதனை  அணுஅணுவாக பார்த்தபின்னும் எழுத முயல்வது நியாயமில்லை. இதை நான் பல தடவை விளக்கியுள்ளேன்.

இருந்தும் ஒரு வாசகர் புத்தாண்டு தினத்தில் சொன்னார் உன்னிடம்,    " STOCK " தீர்ந்துவிட்டது அதனால் எழுத முடியாமல் போய் இந்த நிலை வந்துள்ளது என்று தெரிவித்தார். உண்மை தான் எப்போதும் நான் ஸ்டாக் வைத்துக்கொண்டு வியாபாரம் செய்யும் வியாபாரி அல்ல. என் மனதில்  தோன்றும் . தலைப்புகளுக்கு வடிவம் கொடுத்து எழுதுபவன் அதை ஒரு அட்டவணை கொண்டு கிழமைக்கொன்றாக வழங்கி  வந்தேன். இப்போது அன்பரின் கூற்றுப்படி என்னிடம் "சேர்த்துவைத்திருந்த" சரக்கு தீர்ந்து விட்டது. அன்பர் வசம்   ஏதேனும் புதுச்சரக்கு வைத்திருந்தால் ஒரு BLOG துவங்கி எழுதிக்காட்டினால்  நல்ல அறிய தகவல்களை நானும் தெரிந்து கொள்வேன் .

இவ்வளவு நல்ல அறிவுக்களஞ்சியங்களை பயன்படுத்தாமல் விடலாமா.? அன்பர் என்ன செய்ய இருக்கிறார் என்று ஆவலுடன் காத்திருக்கிறேன். ஆம், என்போன்ற கற்பனை வறண்டவன் "காத்திருப்போர் பட்டியலில்" நல்ல நாளை நோக்கி காத்திருப்பது காலத்தின் கட்டாயம்.  பார்ப்போம் அறிவுச்சுடர் என்ன வழி காட்டுகிறது என்று..

இவை அனைத்தும் என் மன நிலை என்ன என்பதை சொல்லும் முயற்சியே அன்றி வேறில்லை. மேலும் கருத்துகள் இருப்பின் அறிய சித்தமாக இருக்கிறேன்.  நன்றி அன்பன் ராமன் .

 

Mrs. DEVASENA SRIDHAR

திருமதி தேவசேனா ஸ்ரீதர்

பெயரிலிருந்தே புரிந்திருக்குமே இவர் இயக்குனர் ஸ்ரீதர் அவர்களின் மனைவி என்பது.. பாரம்பரியமிக்க ஆந்திர பூர்விகம் [நெல்லூர்] . 

ஸ்ரீதரின் திருமணம் நிச்சயிக்கப்பட்ட ஒன்று எனில் நம்பாமல் அந்நாளிலே  கூட இது காதல் திருமணம் என்று வதந்திகள் சென்னையில் உதவியதை நான் அறிவேன். அப்போது  நான்     பி.எஸ்.சி இரண்டாம்ஆண்டு மைசூரில் படித்துக்கொண்டிருந்தேன்.. 

ஸ்ரீதரின் திருமணம் குறித்து செய்திகள் -illustrated வீக்லி, film fare , pictur post போன்ற சஞ்சிகைகளில் வந்தவண்ணம் இருந்தன. அதையும் விட அந்நாளில் பெரிதும் பேசப்பட்ட திருமண நிகழ்வு. இந்திய திரைப்படத்துறையினர் [தமிழ் தெலுங்கு கன்னட, ஹிந்தி உள்ளிட்ட]பலர் பங்கேற்ற நிகழ்வு. அதிலும் அப்போது ஸ்ரீதர் ஹிந்தியிலும் கொடிகட்டிப்பறந்த பெரும் ஆளுமை. இந்த திருமணத்திற்கு முன் தேவசேனா சென்னையில் கல்லூரி மாணவி -போதுமே வதந்தி கிளப்ப. திருமணத்திற்குப்பின் தான் சென்னையில் காதலிக்க நேரமில்லை பட ஷூட்டிங்.  மாணவியர் பலர் ஆய் ஓய் ஊவ்ய் என்று தேவசேனாவை கிண்டல் செய்து பேசுவார்கள் என்று அந்நாளில் படித்திருக்கிறேன்.

இதில் நான் இழந்த ஒன்றுஉண்டென்றால் அது திரு ஸ்ரீதரை நேரில் சந்தித்து விவாதிக்க 50 கேள்விகள் வைத்திருந்தேன். என் துரதிர்ஷ்டம் இறுதிவரை ஸ்ரீதரை சந்திக்க எனக்கு வாய்ப்பே வரவில்லை 2008 [ஸ்ரீதர் மறைவு oct 20, 2008 ] க்குப்பின் நான் எம் எஸ் வி, சி வி ராஜேந்திரன் சித்ராலயா கோபு இவர்களை தலா 4 முறையாவது சந்தித்திருக்கிறேன்.ஸ்ரீதரை சந்திக்க வாய்ப்பே வரவில்லை. 

நான் அறிந்த தகவல்கள், அறியாத தகவல்கள் என பலவற்றை திருமதி தேவசேனா அவர்கள் பகிர்கிறார் . கேட்டு அறிய  அரிய வாய்ப்பு இணைப்பு இதோ

https://www.youtube.com/watch?v=CV3tSvgWrXY                  Mrs Devasena Sridhar

No comments:

Post a Comment

Mrs. DEVASENA SRIDHAR

  Mrs. DEVASENA SRIDHAR  I WISH TO SAY   நான் சொல்ல விழைவது அன்பர்களே புத்தாண்டின் முதல் பதிவு நேற்று வெளியானது . இன்று இவ்வாண்ட...