Tuesday, April 14, 2026

TECHNOGY -BASED PROBLEMS

 TECHNOGY-BASED PROBLEMS

தொழில் நுட்ப இடர்ப்பாடுகள்

ஒவ்வொரு 10 ஆண்டுக்கால இடைவெளியிலும் விஞ்ஞான மற்றும் தொழில் நுட்ப வளர்ச்சிகள் நாம் எளிதில் புரிந்து கொள்ளும் அளவில் கண் முன்னே விரிவடையைக்காண்கிறோம். ரயில்வே , விமான பயணம், மருத்துவத்துறை எதைப்பார்த்தாலும் 10 ஆண்டுகளுக்கு முன் இருந்த நிலை இன்றில்லை. அது போன்றே தொடர்பு கொள்ளும் சாதனங்களும், பணபரிமாற்றங்களும் விரைந்து நடக்கின்றன. ஆனால் இவற்றில் ஊடுருவி  ஏமாற்றும் நபர்களும் அதிகம். இவை தனிநபர் பெறும்   துயர்கள்.  இவற்றில் மிக முக்கியமானவை சமூக மேடைகள் [SOCIAL PLATFORMS ] எனப்படும் வாட்ஸப் , FACE புக், இன்ஸ்டாகிராம் இன்னும் எண்ணற்ற தொடர்பு புள்ளிகள் [LINKS ] இவற்றின் உதவியால் முன் பின் அறியாத நட்புகள் இனம் காணப்பட்டு, அவர்களின் விறுப்பு  வெறுப்புகள், ஆசைகள் நாட்டங்கள் , பலவீனங்கள் இனம்காணப்பட்டு , ஒரு பெரும் கூட்டம் சேர்த்து பின்னர் அவர்களை குழுக்களாக பிரித்து பணம்பொருள், பிற உணர்வுகளுக்கு தீனி போட்டு அடிமைகள் போல் ஆக்கி தொடர்ந்து மூளைச்சலவை செய்து பெரிய சாதி/நாசகார வேலைகளுக்கு பயிற்சி , ஆயுதம்  கொடுத்து அழிவுப்பாதை க்கு ஆள் சேர்ப்பது நடந்து கொண்டே இருக்கிறது. இவற்றை முறியடிக்க இடைவிடாத கண்காணிப்பும் , தளராத பின்னூட்டமும் [FEEDBACK ] பராமரிக்கப்படுவது மிக முக்கியம் அப்படி மேற்கொள்ளப்பட்ட நடவைக்கைகளால் இந்தியாவில் எட்டு மாநிலங்களில் இருந்து 12 பேர் பிடிக்கப்பட்டு சில துயர நிகழ்வுகள் தடுக்கப்பட்டுள்ளன . அவை குறித்து மேஜர் திரு மதன் குமார் விளக்குகிறார் . கவனமாகக்கேளுங்கள் . இணைப்பு இதோ

https://www.youtube.com/watch?v=wwjGH4nv8vg domestic issue Major  madan kumar

2 comments:

  1. ஆக்கவும் அழிக்கவும் இன்றைய தொழில் நுட்பம் உதவுகிறது

    ReplyDelete
  2. Anything has both sides. Advantage and disadvantage. It is so important that what we choose. 😊🙏

    ReplyDelete

The three ‘D’ operation

  The three ‘D’   operation      3 D செயல் இது என்ன 3 D   என்கிறீர்களா ?   புதிய மேற்கு வங்க அரசின் முதல்வர் திரு சுவேந்து அதி...