A HUGE LEAP
தீவிர பாய்ச்சல்
இன்றைய பதிவில் தேச நலன் சார்ந்த பல தகவல்கள் இடம் பெறுகின்றன சில நமது தற்காப்பு தொடர்பானவை. குறிப்பாக வரும் காலங்களில் எதுவும் நடக்கலாம் என்ற வாய்ப்பு இருக்கும் வரை நமது ஆயத்தங்களும் அவற்றை எதிர்கொண்டு சமாளிப்பது மட்டுமல்ல , முறியடித்து காத்துக்கொள்வதே சாலச்சிறந்தது. அதையும் கடந்து உன்னை உன் இடத்திலேயே முடக்குகிறேன் என்ற ஆயத்தம் மிகவும் துல்லியமும் ஆழ்ந்த புலனாய்வு உத்திகளும் பின்னிப்பிணைந்த ஒரு அசாதாரண சூழல். அதை நோக்கி நமது முன்னேற்பாடுகள் நகர்வதை உணர முடிகிறது அதே நேரத்தில் சற்று கவலை அளிக்கக்கூடிய தகவல் தான் இவை. என்ன செய்ய? கையை கட்டிக்கொண்டிருந்தால் எவனும் அமைதியாக வாழ இயலாதே -எனவே தான் இவை தேவை ஒரு கன்னத்துக்கு அறை விழுந்ததும் மறு கன்னத்தைக்காட்டினால், என்னடா கன்னத்தைக்காட்டுகிறாய் , சட்டையை கழற்றி விட்டுட்டு முதுகைக்காட்டு என்பான் வந்தவன்.அறை விழும்முன் மண்டையை உடைப்பவன் தான் இனி பிழைக்க முடியும். இதை நவீன இந்திய உணர்ந்திருப்பது மட்டும் அல்ல , அதற்கான முறையான முன்னெடுப்புகளில் தீவிர கவனம் செலுத்தி வருவதையும் அறிகிறோம் இப்போதும் சிலர் இந்தியாவுக்கு எதிரான அவதூறுகளை பரப்பி அகமகிழ்கின்றனர். அவர்கள் ஏன் தங்கள் மனம் கவர்ந்த நாடுகளுக்கு சென்று மன நிறைவுடன் வாழக்கூடாது? அங்கு சென்றால் தான் தெரியும் இது போல் பேசிக்கொண்டிருந்தால் கம்பி தான் என்ன வேண்டி வரும் என்பது. சகிப்புத்தன்மையை மதிக்கத்தெரியாதவர்கள் எதிர்பாராத இன்னல்களில் சிக்கி சிதைவது இயற்கையின் தீர்ப்பு. எனினும் ஒரு நாடு ஆயத்தப்படுத்திக்கொள்வதை புரிந்து கொள்ளவும் அறிவு தேவை. அவ்வகையில் பல தகவல்களை இன்றைய இணைப்பில் மேஜர் திரு மதன் குமார் அவர்கள் விளக்குகிறார். செய்திகளை எழுதுவதை தவிர்த்துள்ளேன் எனவே அவரவர் தனித்தனியே வீடியோ மூலம் அறிதல் நல்லது நன்கு கவனித்து புரிந்து கொள்ள /அறிய வாய்ப்பு. இணைப்பு இதோ
https://www.youtube.com/watch?v=pthaZ5eokIU Major Madhan Kumar [08-05-26 –info]
நன்றி அன்பன் ம வ
அக்னி ஏவுகணை அருகிலுள்ள அயல் நாடுகளை அச்சுறுத்தும் வகையில் அமையட்டும்
ReplyDeleteIt is heartening to note that India is making rapid strides in defence warfare. Also India is abreast or even overtaking many advanced countries. India has to keep on updating the technology in the competitive world. Thanks to the administration and the technologists.
ReplyDeleteSuch posts give us valuable important updated informations. Kudos to the Professor and the Major.
Unfortunately there is criticism/ opposition, leave alone appreciation,
ReplyDeletefrom a section of our own society.