MADURAI-10
மதுரை
-10
முக்கியத தெருக்கள் தமிழ்
மாதங்களின்
பெயரால்
வழங்குவது
ஏன்
எனில்
கோயில்
தொடர்பான
சுவாமி
புறப்பாடு
அந்தந்த
மாதங்களில்
அந்தந்த
பெயர்கொண்ட
வீதிகளில்
நடை
பெறும்.
. ஒரு
விதி
விலக்கு சித்திரை திருவிழா
மாசி
வீதிகளில்
நடப்பது
தான்.
இதற்கொரு
வரலாறு
உண்டு.
சித்திரை திருவிழா என்ற பெயரே பின்னாளில் உருவானதாக புரிந்துகொள்ளலாம். இந்த விழா அழகர் வைகை ஆற்றில் இறங்கி அங்கிருந்து மீனாக்ஷி கல்யாண வைபவத்திற்கு எழுந்தருளுவது புராதன வரலாறு..ஆனால் இந்தநிகழ்வு மதுரை அருகே உள்ள சோழவந்தான் பகுதியில்" மாசி "மாதத்தில் நிகழ்ந்து வந்ததாக பதிவுகள் உண்டு.
அப்போது
அழகரை
வரவேற்க
சோழவந்தான்
பகுதி
பெருமாள்
ஸ்ரீ
ஜனகநாராயணன்
எதிர்கொண்டு
அழைப்பது
என்பது
வரலாறு.
விழா
சிறப்பான
ஒன்று
என்றாலும்
கிராமப்பகுதியில் நடந்ததால் மக்கள் கூட்டம் மிகக்குறைவாகவே அமைந்த 'மாசித்திருவிழா ' என்ற நிகழ்வு.
அந்த
விழாவை
க்கண்ட
மதுரையின்
நிர்வாகி
திருமலை
நாயக்கர்
, இந்த
நிகழ்வு
ஏன்
பெரும்
ஆரவாரமின்றி
மக்களே
பங்கேற்காமல்
இருக்கிறது
என்று
ஆய்ந்ததில்
விழா
'மாசி”'யில் நடப்பதே காரணம். ஏன் மாசி மாதம் விவசாயப்பணிகள்
தீவிரமாக
இருக்கும்.
கிராமமக்கள்
வெளியூர்
போவதை
தவிர்ப்பார்கள். எனவே என்ன முயன்றாலும் மக்கள் திரளாக பங்கேற்க இயலாது என்று உணர்ந்தார். எனவே இவ்விழாவை மதுரைப்பகுதியில் அதே வைகை ஆற்றில் நடத்தலாம் என்று பெரும் ஆவல் கொண்டு அவ்வாறே உத்தரவிட்டார். ஆனால் சிக்கல் எழுந்தது . கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர் .அழகர் எங்கள் ஊருக்கு வரமாட்டார் எங்கள் ஊர் பெருமாளும் அழகருக்கு வரவேற்பு தரும் நிகழ்வை நாங்கள் விட்டுக்கொடுக்க முடியாது என்று கடுமையாக எதிர்த்தனர். திருமலை நாயக்கர் மதுரையின்
நிர்வாகி அல்லவா. அவர் ஒரு ஏற்பாடு செய்தார். உங்கள் பெருமாளுடன் நீங்களும் மதுரைக்கு வாருங்கள்,உங்கள் பெருமாளை மதுரையில் திரளான மக்கள் வரவேற்கட்டும்.
மதுரையில் அழகருக்கு நாம் அனைவரும் வரவேற்பு தருவோம். இதை செய்ய ஏதுவாக இவ்விழாவை சித்திரை
மாத
பௌர்ணமியில்
வைத்துக்கொண்டால் விவசாய வேலைகளுக்கு இடையூறின்றி சித்திரைத்திருவிழாவாக
நடத்துவோம் என்று ஏற்பாடு செய்ய அவ்வாறே, சித்திரைத்திருவிழா 10 நாள் உற்சவமாக நடக்கிறது. அந்நாளில் இவ்விழா 'மாசி' மாதத்தில் நடந்ததால், புறப்பாடு, வீதி உலா , தேர் , திக் விஜயம், போன்ற அனைத்தும் இன்றும் மாசி வீதிகளிலேயே நடை பெறுகின்றன.
மேலும்
, நீள
-அகல
பரிமாணங்களில்
, சித்திரை
வீதிகள்சிறியவை ஆனால் மாசி வீதிகள்
மிகப்பெரியவை. [ஏன் எனில் , அவை கோயிலு க்கு வெளியே மூன்றாவது சுற்றில் இருப்பவை]. எனவே தேரோட்டம், வீதி உலா மற்றும் எண்ணற்ற திரு உருவ ஊர்வலங்கள் எளிதில் நடத்தலாம், மக்கள் வெள்ளம் சிரமமின்றி கடந்து
செல்லவும் நடைபாதைகளில் ஒதுங்கி நிற்கவும் போதுமான இடம் உண்டு. எனவே முந்தைய மாசித்திருவிழா , சித்திரைத்திருவிழா ஆன போதிலும் ஊர்வல நிகழ்வுகள் மாசி வீதிகளிலேயே நடை பெ றுவது சரிதான் என்பது புரி கிறது.
இவ்விழாவை மாசி மாதத்திலிருந்து சித்திரை மாதத்திற்கு மாற்றி பெருவாரியான மக்கள் விழாவாக அமைத்ததுடன், திருக்கல்யாணம், தேரோட்டம் திக் விஜயம் போன்ற சிறப்பான கொண்டாட்டமாக மாற்றியதால் சித்ராபௌர்ணமிக்கு கூடும் கூட்டம் உண்மையிலேயே சில லட்சங்களை எட்டும். ஆற்றில் நிகழ்வதால் எவ்வளவு ஜனத்திரள் வந்தாலும் இடப்பிரச்சினை இன்றி நடந்தேறும் விழா. மற்றுமோர் சிறப்பு பல இடங்களிலும் அழகரை வரவேற்று உபசரிப்பது மதுரையின் பெருமை. புதூர் பகுதியில் பல அரசு அலுவலகங்கள், காவல் துறை உயர்மட்ட அலுவலகம், மின் துறை அலுவலகங்கள், நெடுஞ்சாலைத்துறை, பல்கலைக்கழகத்தின் நகர் கிளை ,5 நட்சத்திர ஓட்டல்கள், பலதரப்பட்ட சமூக கூடங்கள் ஒவ்வொன்றிலும்
அழகர்
மண்டகப்படி
நடக்கும்.
மக்கள்
வந்து
வந்து
அழகரை
சேவித்து
குதூகலமாக
இயங்குவது
கண்
கொள்ளா காட்சி.
அழகர்
வைகை
ஆற்றில்
இறங்கும்
நிகழ்வு
இவ்விழா
ஒரு
சமுதாய
விழாவாகவும்
வடிவம்
கொண்டுள்ளது.
அழகரை
குலதெய்வமாக
வணங்கும்
பல
பிரிவினர்
விசேஷ
வேடமிட்டு
சலங்கை
கட்டி
ஆடிப்பாடுவதும் , பெரும் தோல் பைகளில் வைகை நீரை நிரப்பி பக்த கோடிகள் மீது பீய்ச்சி அடிப்பதும் ஏன் அழகர் வரும் குதிரை உள்ளிட்ட வாகனம், உற்சவர் பட்டர் உள்ளிட்ட அனைவர் மீதும் பீய்ச்சி அடிப்பது இறைவனுக்கு வெய்யில் நேரத்தில் [சித்திரை வெய்யிலில்] நிறைவேற்றப்படும்
ஒருகைங்கரியமாக வே ஏற்றுக்கொள்ளப்படுகிறது. இவை தவிர அழகருக்கு நேர்த்திக்கடனாக முடி செலுத்துவதும் [மொட்டை போடுதல் ] இவ்விழாவின்
மற்றுமோர் சிறப்பு எனவே. இதை வடிவமைத்த மன்னர் திருமலை நாயக்கர் இன்றும் மதுரைமக்களின் ஏகோபித்த அன்புக்கு பாத்திரமானவர்.
மேலும்
தகவல்களை
வரும்
பதிவுகளில்
காணலாம்
மதுரை,
இப்போதைக்கு
உங்களை
விடப்போவதில்லை . எனவே மீண்டும் மதுரையா ஐயோ என்று யாரும் அலற வேண்டாம்.
https://www.youtube.com/watch?v=RcLdm-hUsPM CHITRA FESTIVAL MADURAI 2026 நன்றியுடன் அன்பன் ம வ.
No comments:
Post a Comment