Sunday, June 14, 2026

Good to know

 

Good  to know                           MMK 

அன்பர்களே ,

நாம் பெருமிதம் கொள்ளும் பல முன்னேற்ற நிகழ்வுகள் உண்டென்றாலும் அவ்வப்போது தலை தூக்கும் குழப்பங்களும் அவற்றை நெய்யூற்றி வளர்க்கும் அமைப்புகளும் முற்றாக முடிவுக்கு வந்தபாடில்லை. அதனால் எப்போதும் முழு கவனமும் , துரித நடவடிக்கைகளும், எதிர்வினை ஆற்றக்கூடிய உளவு செயல்பாடுகளும் தொடர்ந்து செம்மைப்படுத்தப்பட்டுக்கொண்டே இருக்கிறது. எனினும் சிறு சிறு குடைச்சல்களும் ஏளனப்பேச்சுகளும் நிகழ்வதைப்பார்க்கலாம். இவை ஒருபுறம் இருக்க 'ஆக்கிரமிப்பு' பகுதி என்று அறியப்பட்ட காஷ்மீர் பள்ளத்தாக்கிலேபோதுமக்களும் -பாக் படைகளும் மோதலில் ஈடுபடுவதும் தாக்குதல் நடப்பதுமாக இருப்பது பல கேள்விகளை முன்னெடுக்கக்காணலாம். அங்கு நடப்பது என்ன என்பது குறித்தது மேஜர் திரு   மதன்குமார் விரிவாக்க கருத்து தெரிவித்து வீடியோ வழங்கியுள்ளார். கவனமாக பார்த்து உள்வசங்கிக்கொள்ளுங்கள்  இணைப்பு இதோ https://www.youtube.com/watch?v=LWOrdHCyhr4

ANOTHER CROWN

மற்றுமோர் மகுடம்

ஆம் இந்திய திருநாட்டில் மேக் இன் இந்தியா [MAKE IN INDIA ] திட்டத்தின் கீழ் முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட சி-295 ரக விமானம் வெற்றிகரமாக செயல் படுத்தப்பட்டு கடந்த 1O-06-26 அன்று பலாநாட்டவரையும் வியப்பிற்குள்ளாக்கியுள்ளது

து முற்றிலும் ராணுவ தளவாடங்களை கையாளும் ராணுவ விமானம். 2021 ல் இந்தியாவில் தயாரிப்பதற்கான ஒப்பந்தம் ஏற்பட்டது. இந்தியாவின் டாட்டா நிறுவனமும், ஏர் பஸ் நிறுவனமும் இணைந்த கூட்டு முயற்சி . சுமார் 40 விமானங்கள் இவ்வகையில் உருவாக்கப்படும். நிச்சயம் பெரும் பொருட்செலவு குறைக்கப்பட்டிருக்கும், இவ்வகை தொழில் நுட்பத்தில் இந்திய என்ஜினீயர்கள், இளம் விஞ்ஞானிகள், வடிவமைப்பு நிபுணத்துவம் என பல முன்னேற்றங்கள் உள்நாட்டு மக்களுக்கு வேலையும் இத்தொழில்நுட்பத்தில் ஆளுமை பெறவும் வழி வகுத்தள்ளது .வருங்காலத்தில் உதிரி பாக தயாரிப்பிலும் வெளிநாட்டு சந்தைகளில் நமது தயாரிப்புகளுக்கு மதிப்பும் தேவையும் பெருகிட இது உதவும். இந்த சோதனைப்பயணம் வடோதரா [Baroda ] பகுதியில் நடந்தேறியுள்ளது .

சி 295 ரக விமானம் ஏர்பஸ் நிறுவனத்தின் ஐரோப்பிய தயாரிப்பு [ஸ்பானிஷ் ]. இது பெரும் திறமைகளை உள் ளடக்கியது, உளவு தகவல், ரேடார் தொழில்நுட்ப பிரமிப்புகள் , வெகு விரைவாக தளவாடங்களை சுமந்து செல்லுதல் , கடலோரக்கண்காணிப்பு, மருத்துவ தேவைக்கு போர்வீரர்களை அப்புறப்படுத்தி உயிர்காத்தல் போன்ற பல்நோக்கு திறன் கொண்ட வடிவமைப்பு. தேவைக்கேற்ப வெகு விரைவாக விமானத்தில் பாகங்களை மாற்றிக்கொள்ளும் எளிய வசதி என பல வியத்தகு சிறப்புகள் கொண்ட சி-295.

இது போர் சூழல்களுக்கு என வடிவமைக்கப்பட்டிருப்பதால் பெரிய ஓடு பாதை, விமான நிலையங்கள் தேவை இல்லை. குறுகிய நிலப்பரப்பில் இருந்து விருட்டென்று பறந்து இலக்கைநோக்கிப்பாயும் 

இதன்  தயாரிப்பினை எப்படியோ இந்தியா உள்நாட்டில் தயாரிக்கும் உரிமம் பெற்று செயல் படுத்தியும் விட்டது.முக்கிய அம்சம் யாதெனில் இது இந்தியாவின் ஆத்மநிர்பர் திட்டத்தில்   பல தனியார் உதவியுடன் வடிவம் பெற்றுள்ளது.

சிறிய வீடியோ தான் எனினும் தகவல் பெரிது . கண்டு இன்புறுவீர்.

India’s first C-295 AATHMANIRBAR https://www.youtube.com/watch?v=GkvhoaTsmIk AS ON 10-06-26

நன்றி

அன்பன்

2 comments:

  1. The present POK is going to be a
    part of India or a separate state/nation?
    They may like independency. India will have a friendly neighbor ,which is a very need of the hour.
    If it comes out of Pakistan, India will be more stronger and safer as some strategic areas are situated there..
    C 295 aircraft is another feather in India's defence capabilities.

    ReplyDelete

CENTELLA ASIATICA

  CENTELLA ASIATICA    [Asian penywort / Indian penny wort] Tamil : Vallaarai, Hindi: Manduka parni, Tel: Saraswathiaaku Mal: Kodangal Kan...