Saturday, June 13, 2026

MADURAI -14

 MADURAI -14                           

மதுரை -14

KOODAL ALAGAR TEMPLE [ADDITIONAL INFO]

கூடல் அழகர் மேலும் சில விவரங்கள்

மதுரையின் முக்கிய கோயில் களைப்பற்றிய நமது தொகுப்பில் இன்று இடம் கொள்வது மதுரையின் நகர் மையப்பகுதியில் அமைந்த கூடல் அழகர் கோயில் என்ற திவ்யதேச ஸ்தலம். இதுவும் ஒரு பழமையான கோயில்.

மூலவர் திரு வியூக சுந்தரராஜப்பெருமாள், தாயார் மதுரவல்லி , பிரத்தியேக சன்னதிகள். தாயார் மதுரவல்லி மதுரை பக்தர்களின் அன்புக்கு பாத்திரமானவர், வரப்பிரசாதி. தாயாரின் சேவை [ஸ்வரூபம்] பக்தருக்கு நிறைவையும் அமைதியையும் தரும்   , இடையில் ஸ்ரீ சுதர்சனர் [சக்கரத்தாழ்வார் ] சன்னதி, வடபகுதியில் ஆண்டாள் நாச்சியாருக்கு தனி சன்னதி

இவை நீங்கலாக பொதுவாக வைணவ கோயில்களில் இல்லாத ஒரு வேறுபாடு இக்கோயிலில் நவக்கிரஹ சன்னதி உண்டு.  அதற்கு ஒரு விளக்கம் சொல்வர். இவை தவிர இக்கோயிலின் கருவறைக்கு மேல் அமைந்த அஷ்டாங்க விமானம் பிரசித்தி பெற்றது. விமானம் 3 அடுக்கு அமைப்பில் ஒவ்வொரு அடுக்கிலும் பெருமாள் எழுந்தருளி சேவை சாதிக்கிறார். இவற்றையும் கோயிலின் கருவறை என்றே வருணிக்கிறார்கள்

.[இது போன்ற அஷ்டாங்க விமானம் திருக்கோஷ்டியூர் சௌமியநாராயணப்பெருமாள் கோயிலிலும் உண்டு அங்கும் இதே போல் 3 நிலைகளிலும் பெருமாள் சேவை சாதிப்பதாக தகவல்]

பெருமாள் தாயார் சன்னதிகளுக்கு இடையில் அமைந்த நீண்ட விஸ்தாரமான ப்ரதக்ஷிண பிராகாரம் [நடை] உண்டு.

இப்பிராகாரத்தில் ப்ரதிக்ஷணம் செய்தபடியே அஷ்டாங்க விமான தரிசனம் செய்வோர் பலர். இக்கோயிலில் தான் 'பெரியாழ்வாரின் 'பல்லாண்டு பல்லாண்டு' முதலில் இசைக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. அதே போல் வெவ்வேறு ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்விக்கப்பட்ட பெருமை இத்திருக்கோயிலுக்கு உண்டு.. இவை பூர்வ புராண பெருமைகள்.

இவை தவிர மதுரை வாழ் பக்தர்களின் நியாயமான கோரிக்கைகளை கூடல் அழகர் தட்டாமல் நிறைவேற்றி த் தருவார் என்ற   ஒரு பெரும் நம்பிக்கை இன்றும் உள்ளது.

அதற்காக கோரிக்கை உள்ளவர்கள் செய்ய வேண்டிய பிரார்த்தனை ஒரு மண்டல காலம் [48 நாட்கள்] ஒரு நாள் தவறாமல் இக்கோயிலின் அஷ்டாங்க விமானத்தை[பெருமாள் சன்னதிக்கு வெளியே] சுற்றியுள்ள  பிராகாரத்தில்] ஒவ்வொரு நாளும் 12 ப்ரதக்ஷிணம் காலையோ, மாலையோ தவறாமல் நிறைவேற்ற வேண்டும். அதில் ஒரு நாள் கூட தடை விழாமல் நிகழவேண்டுமே என்ற உள்ளூர கவலையுடன் பலர் இந்த பிரார்த்தனை நிறைவேற்றுவதைப் பார்க்கலாம்.

இது போன்ற தடையை எதிர்கொள்ள ஒரு வழி இருக்கிறது. அதாவது இந்த வேண்டுதலுக்காக ப்ரதக்ஷிணக்  கிரமத்தை ஒரு நல்ல நாளில் . 2 பேராக துவங்குவார்கள் [கணவன், மனைவி, அண்ணன், தங்கை, அக்கா தங்கை . இரு நண்பர்கள் என்பதாக ] அடுத்தநாள் முதல் இருவரில் யாருக்கு பிரார்த்தனை முக்கியமோ அவர் நாள் ஒன்றுக்கு 12 ப்ரதிக்ஷணத்தை நிறைவேற்றுவார்

அவருக்கு ஏதேனும் இடையூறு நிகழ்ந்தால் முதல் நாளில் யார் இரண்டாம் நபராக ப்ரதக்ஷிணத்தில் பங்கு கொண்டாரோ அவர் ப்ரதக்ஷிண பிரார்த்தனையை நிறைவேற்றுவார்.  இவ்வாறு 48 நாள் பூர்த்தியானதும் பெருமாளுக்கு அர்ச்சனை செய்து வேண்டுகோளை நிறைவேற்ற ப்ரார்த்தித்துக் கொள்வர்.. 

இது போல் செயல் பட்டால் , கல்வி திருமணம் , நோய் தீர்வு, சொத்துப்பிரசனை, கடன் போன்ற பல உளைச்சல்களில் இருந்து கௌரவமாக மீண்டு வரலாம். இதை நான் அனுபவபூர்வமாக அறிந்தவன். காலை/மாலைகளில் இது போன்ற பிரார்த்தனை ப்ரதக்ஷிணம் செய்பவர்கள் சாரி சாரியாக காலை 5.00 முதல் 12 வரை, மாலை 4.30 முதல் இரவு 9.30 வரை  .உலாவருவாதைக்காணலாம். மொத்தத்தில் அமைதியான மன நிறைவு தரும் கோயில்.இதற்கான வீடியோ இணைப்பு இதோ. நன்கு ரசியுங்கள்

https://www.youtube.com/watch?v=lfA1pQY6zHM  Madurai KOODAL ALAGAR KOIL

நன்றியுடன்,   அன்பன்

---------------------------------------------------------------------------------------------------------------------------

2 comments:

  1. 12 பிரதட்சணம் செய்து நினைத்த காரியங்களை நிறைவேற்றிக்கொண்டவர் பலர்

    ReplyDelete
  2. பிரம்மாண்டமான கட்டிட வேலைப்பாடு. அற்புதமான சிற்பங்கள். அழகான வர்ண ஓவியங்கள். மிகச்சிறந்த காணொளி. இதுவரை அறிந்திராத பல செய்திகள். மிக்க நன்றி.

    ReplyDelete

LIMONIA ACIDISSIMA

LIMONIA ACIDISSIMA = [ FERONIA COREA /FERONIA ELEPHANTUM]                                           [Wood Apple]   Tamil: Vilkaankai,  ...