Sunday, June 28, 2026

MADURAI-16

 MADURAI-16       NARASINGAM

மதுரை-16

நரசிங்கம்

மதுரையின் புற நகர் பகுதியில் அமைந்த யா . ஒத்தக்கடை என்ற இனிஷியலுடன் அறியப்படும் இவ்வூர் ஒரு முக்கிய பகுதி. இது சிற்றூரே ஆயினும் இங்கே பல சிறப்புகள்  -அருகாமையில் வேளாண் கல்லூரி, எண்ணற்ற எவர்சில்வர் பாத்திரங்கள் உருவாக்கும் பட்டறைகள், ஆடைகள் விற்பனை என பன்முகம் கொண்டது யா . ஒத்தக்கடை.

யா என்பது யானைமலையின் சுருக்கம். இப்பகுதியில் அமைந்த மலையை தொலைவில் இருந்து பார்த்தால் ஒரு யானை படுத்திருப்பது போல் காட்சி தரும் எனவே இம்மலை யானைமலை என்று வழங்குகிறது இதன் அடிவாரம் போன்ற நீள் பகுதியில் உள்ள ஊர்         யா . ஒத்தக்கடை .

இரு பெரும்  வைணவத்தலங்கள் ஆக விளங்கும் திருமோகூர் மற்றும் நரசிங்கம் இரண்டுமே இவ்வூரை ஒட்டியே அமைந்துள்ளதால் இவ்வூர் பெரிதும் அறியப்பட்ட பகுதி என்றே சொல்லலாம்.

இன்றைய நமது பதிவு நரசிங்கம் என்ற சிற்றூர் பற்றியது. ஒத்தக்கடையில் இருந்து மேற்கு நோக்கி சுமார் 1 அல்லது 1 1/2 கி மி  பகுதியில் இருப்பது ஸ்ரீ யோகநரசிம்மஸ்வாமி திருக்கோயில். இக்கோயில் மேற்குநோக்கிய ராஜகோபுரம் மற்றும் நுழை வாயில் கொண்டது . கோயில் வளாகத்தினுள் நுழைந்ததும் நம்மை வரவேற்பதே இத்திருத்தலத்தின் தாயார் ஸ்ரீ நரசிங்கவல்லி என்ற திருநாமம் கொண்ட தெய்வம் தான். தெற்கு நோக்கி அமர்ந்த திருக்கோலத்தில் எப்போதும் நிறைவாக  காட்சி தரும் மனம் கவரும் ஸ்வரூபம்.. தாயார்  திருமேனி தெளிவாகக்காட்சி தந்து சேவை சாதிப்பது ஒரு சிறப்பு என்றே சொல்லலாம் . தாயார் சன்னதியில் மட்டுமே ப்ரதக்ஷிணம் என்ற வலம் வரும் நிகழ்வு சாத்தியம்.

இங்கிருந்து சற்று கிழக்கு திக்கில் மூலவர் திரு யோகநரசிம்மரின் சன்னதி அமைந்துள்ளது. இந்த சன்னதி யானைமலையின் கீழ், மேற்கு பகுதியில் குடைந்து வடிவமைக்கப்பட்டுள்ள குடைவரைக்கோயில் . யோகநரசிம்மர் மலையின் பரப்பிலேயே செதுக்கப்பட்டுள்ளமையால் ஸ்வாமியை வலம்  வந்து ப்ரதக்ஷிணம் செய்ய இயலாது.. மூர்த்தியின் எதிரில் நின்று தான் வழிபாடு செய்ய முடியும். . மிகவும் சக்திவாய்ந்த வரப்பிரசாதி எனவே எப்போதும் பக்தர்கள் குழாம் வந்த வண்ணம் இருப்பது  இயல்புதான். சன்னதிகள் நன்கு பராமரிக்கப்படுவதால் மன நிறைவு தரும் திருக்கோயில் என்றால் மிகை இல்லை. மதுரைப்பகுதிக்கு   செல்லும் வாய்ப்புடையோர் அவசியம் தரிசிக்க வேண்டிய திருக்கோயில் இது. இரண்டு வீடியோ இணைப்புகள் உள்ளன, பார்த்து பல்ன்  அடைவீர்,.


Sri Yoga Narasimha Perumal Temple Narasingam Madurai, Sri Yoga Narasinga Perumal Temple Othaikadai

NARASINGAM https://www.youtube.com/watch?v=bRL9Np5rEtA

https://www.youtube.com/watch?v=iTJEBNtwZ88


 

நன்றியுடன்      அன்பன்

                             ***************************************************************

4 comments:

  1. நேற்றுதான் நரசிங்க ம் திருமோஹூர் சென்று வந்தேன்
    வரும் வழியில் தல்லாகுளம் பெருமாளையும் தரிசித்தேன்

    ReplyDelete
  2. அன்புடையீர்
    நீவிர் சிரேஷ்ட வைஷ்ணவர் சுவாமி

    ReplyDelete
  3. யானைமலை அடிவாரத்தில் அமைந்துள்ள இத்திருத்தலம் ஓர் குடைவரைக் கோயில் என்றும் இக்கோயிலில் கொடிமரம் இல்லாததின் காரணம் பற்றியும் விளக்கியமைக்கு நன்றி.
    இக்கோவிலை நிர்மாணித்தவர்கள் பற்றிய குறிப்புகள் உள்ளனவா?

    மதுரை நகருக்கு அருகேயுள்ள புராதனமான இக்கோவில்களின் பெருமை மற்றும் சக்தியை,
    வலைதளங்கள்,ஊடகங்கள் வாயிலாக அறிந்த பக்தர்கள் பெருமளவில் தரிசனம் செய்கின்றனர்.

    ReplyDelete
  4. அடியேனின் முன்பதிவிற்கும் ஸ்தலபுராணம் பற்றியும் , மேலும் ஒரு காணொளி மூலம் விளக்கியமைக்கு நன்றி.
    பாண்டியர்களும் பல்லவர்களும் (மகாபலிபுரம்) தமிழ்நாட்டில் குடைவரைக் கோவிலகளை நிர்மாணித்துள்ளனர் . சமணர்களும் இத்தகைய நிர்மாணங்களில் சிறந்து விளங்கினர்.

    ReplyDelete

SPECIAL POST

                                                                 சிறப்பு பதிவு 03-08-26 இன்று ஆடி 18ம் நாள்   ஆடிப்பெ ருக்கு என்று தமிழ்நா...