Monday, June 1, 2026

ORCHESTRATION

 ORCHESTRATION [ MSV BRAND]  

ஆர்கெஸ்ட்ரேஷன்  [ =ஒலிகளின் கட்டமைப்பு ]

      [மெல்லிசை மன்னரின் பாணி  ]

ஐயோ இது என்ன புதிய தலைவலி என்று சிலர் முணுமுணுப்பது இமயம் வரை கேட்கிறதே.கவலை வேண்டாம் இந்த சொல் [orchestration] அன்றாடம் ஒலித்தாலும், அதன் பூரணத்துவம் பற்றி அறிந்து கொள்ள பாடல்களை ஊன்றி கவனித்து ஆழ்ந்து அமிழ்ந்து ட்யூன் மற்றும் அதைத் தாங்கிவரும் இசைக்கருவிகளின் ரம்மியமான பயணம் குறித்து நமது பார்வை நிலைப்பட வேண்டும். அதை விடுத்து அந்த நடிகை ஆடுகிறார் இந்த நடிகர் ஓடுகிறார் என்று நீர்யானை போல் வாய் பிளந்து டிவி யில் தேன்  கிண்ண, தயிர்க்கிண்ணம் என்று காட்சியை முன்னிலைப்படுத்தும் எவருக்கும் orchestration என்பதை புரிந்துகொள்ள சில ஜென்மங்கள் தேவைப்படலாம். இந்த சூழலை சாதமாக்கிக்கொள்ள சிலர் orchestration ஏதோ முந்தாநாள் மாலையில் சுமார் 6.42க்கு சுபஜனனம் என்பது போல் பேசுவது இவர்கள் 21ம் நூற்றாண்டில் இரண்டாவது  தசாப்த்தத்தில் . தோன்றியவர்கள் என்பது தெளிவு. போகட்டும் சூரியனைமுதன்முதலில்  இன்றுதான் கண்ட பூனைக்குட்டி , சூரியனை நான் தான் கண்டுபிடித்தேன் என்று அகமகிழ்- வதற்கொப்பானது முந்தாநாள் மாலையில் சுமார் 6.42க்கு orchestration  சுபஜனனம் என்பது.  இவற்றை   சரியாகப்  புரிந்துகொள்ள 1962 முதல் வந்த தமிழ் சினிமாப்பாடல்களில் அமைந்த வகைகளை பட்டியலிடுங்கள் நிச்சயம் தலை சுற்றும். அவை ஒவ்வொன்றும் பிரத்தியேக சூழலுக்கான வடிவமைப்புடன் உருவாக்கப்பட்டவை. அவற்றின் சொற்கள், ட்யூன், நடை, தாள அமைப்பு, இடை இசை முன்னிசை , பின்னிசை என அனைத்தும் நேரடி மீட்டலில் உருவாகி ஒற்றை பாதை                      ஒலி ப்பதிவில்  மிக நளினமாக பதிவிடப்பட்டது , திரைப்பாடல் ஒரு அசுரக்கூட்டத்தின் மகோன்னத ஆக்கம் என்பதை இன்றைய கம்பியூட்டர் தலைமுறையினருக்கு தெரிந்திருக்க நியாயமில்லை.அவ்வளவு ஏன் நமது தலைமுறைக்கே  தெரியவில்லையே பலர் இன்றும் நீர்யானை அண்ட் சன்ஸ் பிரிவினரே.   

https://www.youtube.com/watch?v=vABaUfvkzcY

சரி விஷயத்துக்கு வருவோம்

ஆர்கெஸ்ட்ரேஷன் என்பது பாடலின் உணர்வுக்கும் மூட்[mood ] எனும் மன நிலையை உணர்த்தும் வகையிலும் இருக்க வேண்டும். சும்மா ஏனோ தானோ என்று ஒலி எழுப்பி நேரத்தை நிரப்புவதல்ல. பெரும்பாலும் எந்த கருவிக்கும் 20 செகண்ட் என்ற கால அளவிலேயே அவகாசம் தரப்படும். அபூர்வமாக சில தருணங்களில் நீண்ட நெடிய ஆலாபனை போல ஷெனாய் /குழல் இடம் பெறுவதும் உண்டு. ஆனால் சிறு சிறு பிட் [bit] கொண்டே இசைக்கோர்வைகள் உருவாக்கப்படுகின்றன  . அதுதான் இசை அமைப்பாளரின் கற்பனைக்கு விடப்படும் நிரந்தர சவால். ஏன் என்றால் படத்துக்குப்படம், பாடலுக்குப்பாடல், காட்சிக்குக்காட்சி இந்த பின்னிசை இருந்து கொண்டே இருப்பதுடன் ஒவ்வொன்றும் புதிய அமைப்பில் உருவாக்கப்பட வேண்டும். பாடல்களில் இது இடை இசை , காட்சிகளில் பின்னிசை , படம் முழுமைக்கும் செய்யப்படும் ஒலி இணைப்பு, ரீ -ரெக்கார்டிங் எனப்படுவது. இதை நிறைவு செய்யாமல் படம் திரைக்கு வராது. இந்த நேரங்களில் தீபாவளி, பொங்கல் புத்தாண்டு என 4 ,5 படங்களுக்கு ரீ -ரெக்கார்டிங் செய்து தர இசை அமைப்பாளர்களும் உதவியாளர்களும் பம்பரம் போல சுழலுவர். நீங்கள் சற்று மூச்சு விட்டுக்கொள்ளுங்கள் தொடர்கிறேன்

இந்த நுணுக்கத்தைப்புரிந்து கொள்ள ஒரு பாடலை தேர்வு செய்துள்ளேன். பாடல் காட்சியை காணுங்கள் பாடல் சும்மா கும்மாளம் போடுகிறது. காட்சிநெடுகிலும் உயிரோட்ட இசை. சரி பாடலை கேட்டு விட்டு வாருங்கள் 

 https://www.youtube.com/watch?v=-bmRL16lOTQ ovu happy

என்ன புரிந்தது ?  பாடல் நன்றாக இருந்தது அது தானே பதில் . இப்படித்தான் காட்சியில் லயித்து இசையின் கூறுகளை பிடிக்கவொண்ணாமல் திணறுகிறோம்

இதிலிருந்து விலகி இசையின் /கருவிகளின் பங்களிப்பை தாள வகைகளை அறிய மேடை நிகழ்வு அல்லது QFR பதிவுகளைப்பாருங்கள். தாளத்திற்கு எத்துணை கருவிகள் பலவகை  ஒலிகளை எப்படி இணைத்துள்ளனர் அவை சங்கமிக்கும் போது பாடலின் தரம் உயர்வது இவற்றை உணரலாம் . அவ்வகை சிறப்பினை அறிய QFR குழுவினரின் "ஹாப்பி ஹாப்பி" பாடலை பாருங்கள் அப்போது புரியும் அவர் ஏன் மெல்லிசை மன்னர் என்று

பாடல் காட்சிகளில் நாம் கருவிகளை காணாமலே கடந்து விடுகிறோம். இதுபோன்ற பதிவுகள்  பல நாதங்கள் தோன்றும் விந்தையை ஓரளவிற்கேனும் தருகின்றன . அப்போதும் பாடலை முணுமுணுத்து விட்டு கடந்து போனால் இசையின் பரிமாணம் ஒரு சிலருக்கே சித்திக்கும் மற்றும் தித்திக்கும் ஏனையோர் நீர் யானை வகையினரே என்று சொல்வது பிழையன்று.

https://www.youtube.com/watch?v=siolIpvsjf0&list=RDsiolIpvsjf0&start_radio=1 qfr 801 orchestration

பலமுறை கேட்டு ரசியுங்கள் .அதான் எனக்கு தெரியுமே என்ற போக்கை விட்டொழியுங்கள். பாடல் கேட்பதும் ஒரு கலை , உணவை ருசிப்பதற்கு இணையானது. கேட்டு கேட்டு மனம் பண்பட இசையின் பரிமாணங்கள் நிச்சயம் விஸ்வரூபம் கொள்ளும்.

நன்றி

அன்பன்

1 comment:

  1. பழைய musical instruments காணாமல் போனதே

    ReplyDelete

BAMBOO

  BAMBOO  [ BAMBUSA ARUNDINACEA =GIGANTICHOLA MAXIMA ] Bamboo is a grass known for its gregarious growth [90 cm a day =3 feet a day] It is...