Monday, June 1, 2026

Unbreakable breakthrough

 Unbreakable breakthrough      

கேடில்லா கேடயம் 

இந்தியத்திருநாட்டில் எண்ணற்ற முன்னேற்றங்கள் நிகழ்ந்தவண்ணம் உள்ளன . ஆயினும் ஏதேனும் பொய்களைப்பரப்பிக்கொண்டு பொதுமக்களை குழப்பி அதன் மூலம் ஆதாயம் தேடும் நான்காம் தர குடிமக்களுக்கும் இத்திருநாட்டில் பஞ்சமோ பற்றா க்குறையோ இல்லை. இத்தகைய அறிவுக்குருடர்கள் தோற்றுவிக்கும் இன்னல்கள் ஏராளம். விரைவில் இதுபோன்ற தேசவிரோதிகளுக்கு சரியான பாடம் புகட்டப்படும். எந்த எதிரியையும் எதிர்கொள்வது எதிர்பார்த்து தற்காத்துக்கொள்வதில் தான் இருக்கிறது. ஆனால் உள்நாட்டு விரோதிகளை எதிர்பார்த்து முடக்குவது மிகுந்த இன்னல்கள் கொண்டது. மேலும் இவர்கள் மன நோயாளிகள் இவர்கள் இறையாண்மையை மதிக்காத மூடர்கள். ராஜாங்க மற்றும் ராணுவ ரீதியான முன்னேற்பாடுகள் எதிரிகளின் தாக்குதலுக்கு எதிர்வினை ஆற்றும். எனவே பல முனைகளில் வளர்ச்சி, விரிவாக்கம் ,பாதுகாப்பு முனைப்புகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.

இன்றைய சூழலில் மிகவும் குறைந்த செலவில் டிரோன் கள் அதிக அளவில் இயக்கப்பட்டு விலை உயர்ந்த போர்க்கருவிகளை க்கூட முடக்கவோ தகர்க்கவோ இயலும். இது பெரும் அச்சுறுத்தலாக வளர்ந்து வரும் நிலையில் ஒரு புதிய இந்திய கண்டுபிடிப்பு  உலக அரங்கில் பெரும் முக்கிய பேசுபொருளாக உருவெடுத்துள்ளது. ஆம் ஒரு புதிய கூட்டுப்பொருள் உலோக தகடுபோல் பயன் படுகிறது .இது எந்த சக்திவாய்ந்த அதிர்வையும் தாங்கும் திறன் கொண்டது [சுமார் 500 கிலோ வெடிபொருள் தரும் அதிர்வையும் தாங்கும் திறன் உடையது. ஆனால் இது எடை குறைவானது. எந்த இடியையும் தாங்கி நிலை குலையாமல் நிற்கும். ஐயோ எனக்கு உனக்கு என்று உலக நாடுகள் ஓடி வர , பேராசிரியர் பணத்திற்கு விலை போகாமல் குணக்குன்றாக நிறுள்ளார். அவரின் எளிமையும் தேசப்பற்றும் உயர்ந்த மனம் கொண்டோருக்கே கைவரும்.

இந்திய போர் டாங்குகள் [tanks] இந்த கவசத்தால் மூடப்பட்டால் சேதமில்லாமல் டாங்குகள் போர்க்களத்தில் வெற்றிகரமாக உலவி துவம்சம் செய்யும்.

இதை வடிவமைத்தவர் கோவை பொறியியல் கல்லூரி பேராசிரியர் டாக்டர் பௌமிக் [Baumik ]அவர்கள். ஏராளமாக விலைபேசிய எந்தநாட்டிற்கும் இந்த நுட்பத்தை வழங்காமல் அதை இந்தியாவிற்கே இலவசமாக அர்ப்பணித்து தேச பற்றின் மாண்புதனை நிறுவி பெருமைகொண்டுள்ளார் பேரா .பௌமிக் அவர்கள். அவரின் அருமை பெருமைகளை மேஜர் திரு மதன் குமார் அவர்கள் விளக்கி இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார். நன்கு  புரிந்துகொண்டு  பிறர்க்கும் தெளிவுபடுத்தி பெருமை கொள்வோம்.  . இணைப்பு இதோ

https://www.youtube.com/watch?v=IiNXXP7CLWE

OUR NEW Equipment  Maj. MADAN KUMAR

  நன்றி

அன்பன்

1 comment:

BAMBOO

  BAMBOO  [ BAMBUSA ARUNDINACEA =GIGANTICHOLA MAXIMA ] Bamboo is a grass known for its gregarious growth [90 cm a day =3 feet a day] It is...