Wednesday, July 15, 2026

CHANGING TIMES

 CHANGING TIMES 

கால மாற்றம்

 கால மாற்றம் என்ற ஒற்றைச்சொல் பல தருணங்களில் பேசப்படுவது. அது இயற்கையில் நிகழும் மழை வெய்யில் , பனி போன்ற நிகழ்வுகளுக்கும் பொருந்துவது. முன்பிருந்த ஏதோ ஒரு நடைமுறை அறவே மாறிப்போய் ஏற்படுத்தும் புதிய மாறுதல்களையும் கால மாற்றம் என்றே குறிப்பிடுகிறோம். ஆனால் இன்று நாம் பார்க்கஇருப்பது ஒலி /ஓசை/ இசை என்ற செவிப்புலனோடு தொடர்புடைய 'பாடல்' களம் பற்றியது.

இன்றைய தலை முறையினருக்கு சில விவரங்கள் வியப்பை, வெறுப்பை ஏன் கோபத்தைக்கூட கிளறும். ஒரு காலத்தில் நம் வீடுகளில் எலக்ட்ரிசிடி   எனும் மின்சார வசதி இருந்ததே இல்லை, இன்றோ சலவை செய்யும் வாஷிங் மெஷின் இல்லாத வீடுகள் சுமார் 3% தேறுமா என்பதே சந்தேகம்

அன்றைய அமைப்பில் வீடுகளில் மனிதர்கள் தான் அதிகம். கட்டில் மெத்தை  பேன் எல்லாம் பெரும் ஐஸ்வர்ய அடையாளங்கள். அதிலும் பேன் வைத்துக்கொள்ள மின் இணைப்பு வேண்டுமே. பேன் ரயில் நிலையம் திரையரங்கம் போன்ற பொது இடங்களில் உண்டு. கல்யாண மண்டபம் என்ற அமைப்புகளே சமீபத்திய வரவுகள் தான்

இந்நிலையில் பாட்டு என்ற பொழுது போக்கு ஏற்பாட்டிற்கு எலெக்ட்ரிசிடி வந்த பின் அரிதாக சில வீடுகளில் ரேடியோ வைத்திருந்தனர். அவர்களிடம் போய் ரேடியோ போடுங்கள் என்று கேட்கமுடியாது. இந்நிலைலயில் ரேடியோவில் எப்படி பாடல் வரும் என்றால் ஓன்று நேரடியாக பாடுவார்கள்/ பதிவுசெய்த பாடலை ஒலி பரப்புவர்  அல்லது சினிமாப்பாடல் எனில் இசைத்தட்டு மூலம் ஒலிபரப்புவர்.

இசைத்தட்டு என்பது சிறிய வட்ட வடிவ கரிய தகடு போன்றது இருபுறமும் பாடல் இருக்கும். அதை ஒலிக்க வைக்க இருந்த ஒரு கருவிதான் கிராமபோன் என்ற கருவி. அது ஸ்ப்ரிங் [spring ]. மூலம் இயங்குவது. அவ்வப்போது சாவி கொடுத்து ஸ்பிரிங்கை முறுக்கேற்றி இசைத்தட்டை சுழலவிட்டு அதன் மீது கூறிய ஊசி கொண்ட சவுண்ட் பாக்ஸ் அமரவைத்து பாடல் ஒலிபெருக்கி வழியே கேட்கும்

பின்னாளில் திருமண நிகழ்வுகளில் இவ்வகை பாடல் கருவிகள் பலருக்கு வாழ்வாதாரமாய் இருந்தன என்பதை குறிப்பிட்டே ஆகவேண்டும்.. ஆனால் ஒன்று --எந்த  எலெக்ட்ரானிக் கருவியையும்விட கிராமபோன் தரும் ஒலி அவ்வளவு துல்லியமும் தெளிவும் நேர்த்தியும் கொண்டது

அப்படி பாடல் பதிவு செய்து சினிமாவில் பெயர் பெற்ற ஜாம்பவான்கள் . -ரெங்கசாமி, சிஈ  பிக்ஸ் , சிவராம்  வேதமூர்த்தி ஜோ அலோஷியஸ் , சம்பத்  என நீண்ட வரிசை உண்டு.

இதையே தொழிலாக செய்த நிறுவனங்கள் HMV, COLUMBIA ODEON.  இவை உபயோகித்த பதிவு முறைகள் RCA அல்லது WESTREX SOUND SYSTEM என்பன. எப்படியோ இசைத்தட்டுப்பாடல்களை அந்நாளில் RECORD என்பர். அது போன்ற தகவல்களை ஒரு ரேடியோ அமைப்பு தொழில் செய்த வரின் பதிவு களை இணைத்துள்ளேன்

அத்துடன் 4 பாடல்களையும் இணைத்துள்ளேன். ஒலியின் தெளிவை கேட்டுப்பாருங்கள். கேட்டுவிட்டு கருத்து சொல்லுங்கள். நீங்கள் சொல்ல மாட்டீர்கள் ஆனாலும் கருத்து கேட்பது எனது கடமை. பதில் சொல்ல எவரும் தயாரில்லை ஆயினும் கேட்டு விடுவதால் என்ன நிகழும் ? கேட்டு தான் பார்ப்போமே. இதில் வேறு நபர்களின் கருத்துக்கு இடம் இல்லை. வீடியோவும் இல்லை

எனவே ஐம்புலன்களில்    செவிக்கு மட்டுமே வேலை சரோஜா தேவி யைப்பார் அந்த கணேசனைப்பார் போன்ற தேடல்களுக்கு வாய்ப்பே இல்லை. இப்போது பார்ப்போம் எப்படி பாடல் கேட்கிறீர்கள் என்பதை. நிச்சயம் கேள்விகள் வரும் -விடைகள் வராது  விடையாவது வடையாவது என்று அமைதிகொள்வர் நமது பார்வையாளர்கள்.

இணைப்புகள் இதோ

https://www.youtube.com/watch?v=ZumZO-YUokc about gramophone

https://www.youtube.com/watch?v=8lHIyzjfSBs  INIYAVALE RECORD hear  clear percussion

https://www.youtube.com/watch?v=TdtTuRM7OHQ oru pennaippaarththu  grand percussion

https://www.youtube.com/watch?v=ecADfl1Dncw&list=RD8lHIyzjfSBs&index=6  kattodu kuzhalaada

https://www.youtube.com/watch?v=sRoabWMdXCc  CHITHIRAPPOOVIZHI PS LRE VR

நன்றி

அன்பன்    

4 comments:

  1. We were having a American brand Radio and our neighbour's use to visit to hear songs sung by MKT and PU Chinnappa

    ReplyDelete
  2. About Gramophone by Vishnu Prasath- ஒரு முத்தான பதிவு மற்றும் "முத்துக்கு முத்தான" பாடல்கள்
    மின்சார வசதி இல்லாமல் கிராமபோன் இயக்கம்--This news is new to me.
    ஒரு மாற்றுக் கருத்து:
    ஒரு பாடலின் மேன்மை திறமையான இசையமைப்பில் மேலும் வலுப்பெறும்.
    Gramaphone >Radio>TV>Casette>Compact Disc >Pendrive.....
    ஒன்றின் ஒன்றாக மாறிவிட்டன.
    அனுமானம்:
    "மாற்றம் ஒன்றே மாறாதது"
    கிராமபோனில் பதிவுகள் தெளிவு மற்றும் துல்லியம்.
    அனுமானம்:
    "Old is Gold"
    அந்த (வசந்த ) கால நினைவுகள்:
    இலங்கை வானொலி வர்த்தக ஒலிபரப்பு-மயில்வாஹனின் குரல் வளம்
    Bianca Geeth Mala
    Cricket Commentary
    Jukebox ல் துட்டு போட்டு பாட்டு
    Dubbing serial ல் ஜுனூன் தமிழ்
    வெள்ளிக்கிழமை ஒலியும் ஒளியும் தெரு "வெறிச்".
    ரொம்ப நாளாக ஒரு சந்தேகம்,
    HMV logo நாய் ஆணா அல்லது பெண்ணா?

    ReplyDelete
  3. இது ஒரு பூர்வ புராணக்கேள்வி ஆயிற்றே உங்களுக்குமா சந்தேகம்? அல்லது ஆழம் பார்க்கும் வேலையா? எப்படி ஆயினும் இதற்கு விடை கேள்வியிலேயே புதைந்துள்ளது. ஆம் அந்த இசைத்தட்டு கம்பெனி யின் பெயரே
    "HIS MASTER 'S VOICE . அதாவது அந்த நாய் தனது எஜமானின் குரலை கேட்பது போல் அமர்ந்துகொண்டு கேட்கிறது, HIS என்பது நாயைக்குறிக்கிறது எனவே அது ஆண் [DOG] தான் BITCH அல்ல.. ஆனாலும் இந்தப்பெயர் நீங்கா பெருமைகொண்டது.

    ReplyDelete
  4. தகவலுக்கு நன்றி. என் ஜன்மம் சாபல்யமடைந்தது.

    ReplyDelete

Andaal –Sridharan

  Andaal –Sridharan ஆண்டாள் - ஸ்ரீதரன் ஸ்ரீதரன் ஸ்ரீரங்கம் ஆண்டாள் யானையின் அன்பு பாகன் . அவரது அறிவும் கூர்மையும் இறை பக்தி...