Tuesday, July 14, 2026

Getting paid back

 Getting paid back

தன்  வினை தன்னைச்சுடும்

இது ஒரு எளிய வாசகம் போல் தோன்றும் ஆனால் இவ்வாசனம் மிகவும் ஆழ்ந்த கருத்துச்செறிவு கொண்டது. ஆம் உலகில் பல தருணங்களில் 'வளர்த்த கடா மார்பில் பாய்ந்தது ' என்ற ஒரு அனுபவ வசனமும் பேசப்படுகிறது. ஒரு கட்டத்தில் வேண்டாதவரைப்பழிவாங்க , அரசு இயந்திரங்கள் ஏதோ சூட்சுமமாக செய்து விட்டதாக எண்ணிக்கொண்டு வேண்டாத அமைப்புகளை உருவாக்கி அவற்றை இயக்கி எவருக்கோ இடைஞ்சலும் குடைச்சலும் தோன்றும் வண்ணம் சதித்திட்டம் தீட்டி அதன்மூலம் வெற்றிகொண்டுவிட்டதாக எண்ணி தொடர்ந்து ஈன செயல்களை அரங்கேற்றி ஜனநாயக அமைப்புகளுக்கு தலைவலி தோற்றுவித்து பெரும் ஐவகை கொண்டு திளைத்தனர். இது போன்ற பல்வேறு அமைப்புகள் காலப்போக்கில் பெரும் அவதாரம் எடுத்து அமைதியையும் வளர்ச்சியையும் முடக்குவர். இவர்கள் பெரும் அதிகார பீடங்களாக மாறி அரசுகளை அகற்றிவிடும் அளவிற்கு வல்லமை பெறுவார்.பொதுமக்களையும் தமது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு அரசு இயந்திரத்தை ஸ்தம்பிக்க வைக்கும் வன்மை பெற்று நாட்டின் இறையாண்மைக்கு ஊறு விளைவிக்க தயங்காத அமைப்பினர். . இது போன்ற குழுக்கள் பன்னாட்டு தொடர்புகளுடன் போதைப்பொருள் விற்பனை மற்றும் கலாச்சார சீரழிவிற்கான பெரும் முன்னெடுப்பகளை அரங்கேற்றி அதன் மூலம் பன்னாட்டு அரங்கில் முக்கிய அடையாளம் பெற்று அதன் மூலம் வெளிநாட்டு நிதிகளைப்பெற்று அவர்களின் தேவைகளுக்கேற்ப மத மற்றும் சமூக நிலைப்பாடுகளை விமரிசித்து பெரும் ஹீரோக்கள் போல உலவுகின்றனர். ஒரு நிலையில் இவர்களின் கட்டமைப்பு சர்வதேச பரிமாணம் பெற்று நிதி மற்றும் பன்னாட்டு ஆதரவு மூலம் இளைய தலை முறையினரை தடம் மாற்றி, அரசினர்க்கே சவால் விடும் அளவு பலம் பெற்று ஜனநாயக அமைப்புகளை வலுவிழக்கச்செய்வர்.

ஒரு நிலையில் அரசு , போலீஸ் எவர்க்கும் சவால் விட்டு பெரும் ராணுவம் போல வியாபித்து அரசுக்கு தொல்லை தர தொடங்கி ராணுவத்தை எதிர்க்கவும் தயங்காமல் செயல் படுவர். இப்படி குழுக்களை வேரூன்ற  வைத்ததே அந்நாட்டு அரசு துறையினரே தான் . இது போல் வளர்க்கப்பட்ட ஆப்கனிஸ்தான் குழுக்கள் இப்போது பாக் ராணுவத்தினரை திணறடித்துக்கொண்டு இருப்பதால் செய்வதறியா கையறு நிலைக்கு போய்விட்டது பாக் அரசு. இதுபோன்ற அங்கீகாரம் பெறாத குழுவினர் ராணுவத்தையே  சிதறி ஓட வைத்துக்கொண்டிருக்கின்றனர். இதன் பலனாய் பாக் ராணுவ அமைப்புகள் பெருமளவு தாக்கப்பட்டு அழிக்க படுவதாக தகவல் வந்து கொண்டே இருப்பதை அறிவோம். வினை விதைத்தவன் வினை அறுப்பதை வீடியோக்கள் வாயிலாக அறிய  நல் வாய்ப்பு..  பல முக்கிய தகவல்களை [10-07-26 நிகழ்வுகளை ] மேஜர் மதன் குமார் விளக்குகிறார். இணைப்பு இதோ

https://www.youtube.com/watch?v=_w85lYA4Ago BALOCH AMBUSH PAK ARMY ON HIGH WAY 10-07-26 THAN VINAI THANNAI SUDUM

நன்றி     அன்பன் 

No comments:

Post a Comment

Getting paid back

  Getting paid back தன்   வினை தன்னைச்சுடும் இது ஒரு எளிய வாசகம் போல் தோன்றும் ஆனால் இவ்வாசனம் மிகவும் ஆழ்ந்த கருத்துச்செறிவ...