SCIENCE – V A C C I N E -4
அறிவியல் – வாக்ஸின் -4
வாக்ஸின்களின் அடிப்படை த்தேவைகள் :
எந்த வாக்ஸின் ஆயினும் குறிப்பிட்ட காலவரை வரையிலும் அது
செயல்திறன் கொண்டு [உயிரோட்டமாக] இருத்தல் வேண்டும் . இதை shelf life என்று குறிப்பிடுவர். அதைக்கடந்தால் EXPIRY
DATE துவங்கும்..இருப்பினும் உயிரோட்டம்
மிக்க SHELF
LIFE காலத்திலும்
கூட வாக்ஸின் அதற்கென்று அறிவிக்கப்பட்டுள்ள குறிப்பிட்ட குளிர் நிலையில்
வைக்கப்பட வேண்டும். இல்லையேல் செயலிழப்பு + மோசமான பக்கவிளைவுகளை
வாக்ஸின் தோற்றுவிக்கக்கூடும். இது போன்ற செயல் தேவைகளை [FUNCTIONAL
REQUIREMENTS] கருத்தில் கொண்டு, ஒவ்வொரு வாக்ஸினும் பிரத்தியேகமாக
வடிவமைக்கப்படுகிறது.
வாக்ஸின்களில் உள்ள முக்கிய பொருட்கள்
1 ஆன்டிஜென் [ANTIGEN] மிக முக்கிய பொருள் இது தான். அதன் திறன் குன்றாமல்
காக்கப்பட்டு தேவையான கால வரையறை முடியும் வரையில் செயல் பட வேண்டும் .
2 SURFACTANTS
எனும் புறச்செயலிகள் . வாக்ஸினில் உள்ள பொருட்கள் ஒன்றுடன் ஒன்று எதிர்வினை புரியாமல் [avoiding interaction between components in the
vaccine ] தடுக்கும் வேலையை செய்வன .
3
PRESERVATIVES [செயல் நிலை காக்கும் வேதிப்பொருட்கள் [கெமிக்கல்ஸ்] ] பெரும்பாலும் இவை
ஆல்கஹால் வகையின . வாக்ஸினின் செயல்பாடு குன்றாமல் காப்பவை [2-phenoxy ethanol]. ஆனால் ஒருவருக்கு மட்டும் பயன்படும் ஒற்றை டோஸ் குப்பிகளில் [vials] preservative சேர்ப்பதில்லை.
4 நிலைப்படுத்திகள் [stabilizers]
அதாவது வாக்ஸினில் உள்ள பொருட்கள் சிதையாமல்/ அழியாமல் நிலைப்படுத்துவன.
இவை பல வேறுபட்ட sugars
/அமினோஅமிலங்கள் /
விசேஷ ப்ரோடீன்கள்
5 பிற உதிரிகள் [Residuals] மிக நுண் அளவுகளில் ப்ரோடீன், ஈஸ்ட் அல்லது அன்டிபயா ட்டிக்ஸ் மிகமிக நுண் [ppm
/ ppb எனும்] அளவில்
6
இணைப்புகள் [adjuvant
] இவை பெரும்பாலும் உப்பு வகையின -அலுமினியம் பாஸ்பேட் /சல்பேட் /ஹைட்ராக்சைடு
அல்லது அலுமினியம் /பொட்டாசியம்
சல்பே ட், இவற்றில் ஏதேனும் சேர்ப்பர் . இந்த இணைப்புகள் நமது உடலில் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும்
immune
system செயல்களை தூண்டிவிடும் .
7 நீர்க்க செய்ய diluent
: வாக்ஸின் எந்த அடர்த்தியில் உடலில் செலுத்த வேண்டுமோ அந்த அடர்த்திநிலைக்கு கொண்டு வர மிக சுத்தமான distilled
water , diluent ஆக உபயோகிக்கப்படுகிறது .
இவ்வாறு துல்லியமாக கலந்து உருவாக்கப்படும் பல் பொருள் கலவையே வாக்ஸின் என்னும் வடிவம் பெறுகிறது.
ANTIBODY எனும் தற்காப்பு ப்ரோடீன்கள் குறிப்பிட்ட ஆன்டிஜென் களை அழித்தொழிக்க வல்லன .எனவே வாக்ஸின்கள் அந்தந்த நோய்களை எதிர்க்கும் ; ஆகவே பல வித வாக்ஸின்கள் மனித வாழ்விற்கு அவசியம்.
வாக்ஸின் உருவாக்கத்தில், செயலிழக்கச்செய்யப்பட்ட [ATTENUATED] அல்லது சிதைக்கப்பட்ட வைரஸ் பாகங்கள் பயன் படுத்தப்படுகின்றன . இவை VIRAL
PLATFORM டெக்னாலஜி என்றழைக்கப்படுகின்றன .அடினோ வைரஸ் என்னும் ஒருவகை வைரஸ்கள் 1953
முதலே வாக்ஸின் தயாரிப்பில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அடினோ வைரஸ் இனத்தவை மனிதரில் சுவாச நோய் , இருமல் போன்ற இடர்ப்பாடுகளை தோற்றுவிப்பன .
அவை மனிதர்களின் வாழ்வில் நோய்களை விளைவிப்பதால் பலவகை மனிதர்கள் இந்த அடினோ வைரஸ் வகைகளை உடல் ரீதியாக எதிர்கொண்டுள்ளதால் இவை வைரல் PLATFORM
கருவிகளாகப்பயன் படுகின்றன.
மேலும் வளரும்
அன்பன் ராமன்
No comments:
Post a Comment