Sunday, July 12, 2026

MADURAI -18

 MADURAI -18

மதுரை -18

SOLAI MURUGAN TEMPLE [PAZHAMUDHIRCHOLAI]  [ALAGAR HILLS] murugan-valli deivaanai

பழமுதிர் சோலை /சோலைமுருகன்

மதுரையை சுற்றி அமைந்துள்ள சிவஸ்தலங்களில் ஒன்று என்பதை விட இது அறு படைவீடுகளில் ஆறாவது. இது அழகர்கோயில் எனப்படும் அழகர் மலையில் அமைந்துள்ளது. .

இவ்விடம் வீற்றிருக்கும் முருகனை சோலை முருகன் என்றழைக்கின்றனர். மிகவும் பழைமையான இடம் என்று சொல்லப்படுகிறது. இத்தலத்தின் சிறப்பு இங்கு முருகன் வள்ளி -தெய்வானையுடன் அருள் பாலிப்பது . இயற்கையான சூழலில் இருப்பதால் சோலைமுருகன் என்றும் பழமுதிர் சோலை என்றும் புகழ் கொண்ட இடம். இவ்விடத்தில் அவ்வைப்பிராட்டி இளைப்பாறியபொழுது முருகன் திருவிளையாடல் நிகழ்ந்ததாக சொல்லப்படுகிறது.

அவ்வையை "பாட்டி சுட்ட பழம் வேண்டுமா சுடாத பழம் வேண்டுமா? எனக்கேட்டு முருகன் திகைக்க வைத்த தலம் இதுவே. இன்னமும் அந்த நாவல் மரம்   இங்கு இருப்பதாக சொல்லப்படுகிறது. பிற நாவல் மரங்கள் எப்படியோ ஆனால் இங்குள்ள ஒரு நாவல் மரம் கந்தசஷ்டி தருவாயில் கனிகளை தருவதாக பெரும் புகழ் கொண்டுள்ளது. இம்மலை முருகனுக்கு வரும் பக்தர்கள் ஏராளம் அதுவும் விடுமுறை தினங்களில் கூட்டம் பெரிதும் வரும்.

இத்தலத்தின் பகுதியில் இருந்து சற்று முன்னேறிச்சென்றால் அழகர் மலையின் புண்ணிய தீர்த்தம் வழங்கும் நூபுர கங்கை அனவரதமும் பிரவாகித்து வர பக்தர்கள் புனித நீரில் நீராடி செல்வது அன்றாட நிகழ்வு.

இங்கே உடை மாற்றும் அறைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள், நல்ல சாலை வசதி செய்யப்பட்டுள்ளதால் பக்தர்கள்  கூ ட்டங்கூட்டமாக  வந்த வண்ணம் இருப்பதைக்காணலாம். மக்கள் நடமாட்டம் இருப்பதால் தின்பண்ட விற்பனை, பழக்கடைகள், பூமாலை அர்ச்சனைப்பொருட்கள் என வியாபாரமும் நிகழ்வதால், குரங்குகளுக்கும் பஞ்சமில்லை.

அழகர் மலைக்குரங்குகள் சிறிதும் அச்சம் கொள்வதில்லை. மாறாக பெண்கள் குழந்தைகள் மீது பாய்ந்து கையில் இருப்பதை பிடுங்கி உண்ணும் தைரியம் கொண்டவை அவை சற்று அடங்கிப்போவது கையில் குச்சி போன்ற நீண்ட கருவிகளுக்கு மட்டுமே. அதனால் பலர் கையில் குச்சியுடன் இருப்பதைக்காணலாம்.

இத்துணை அம்சங்கள் நிறைந்த இத்திருக்கோயிலி ல் சமீபத்தில் கும்பாபி\ஷேகம் நடந்தேறியுள்ளது. இவ்விழாவிற்கு ஒன்றரை டன் மலர்கள் கொண்டு அலங்காரம் நிகழ்ந்ததாக அறிகிறோம்.  இக்கோயிலின் பல விவரங்களை விளக்கும் 5 வீடியோக்களை இணைத்துள்ளேன். கண்டு களியுங்கள். இணைப்புகள் இதோ

https://www.youtube.com/watch?v=EGoM5y7AEk8 History, related features

https://www.youtube.com/watch?v=vP1JMFTc494

https://www.youtube.com/watch?v=1QLdiNCPV98

https://www.youtube.com/watch?v=o4VheXXcVGE pazhamudhir solai

https://www.youtube.com/watch?v=H1LAqNU26WQ    kumbaabishekam

நன்றி

அன்பன் 

2 comments:

  1. ஆலய திருப்பணிகள், நேர்த்தியான புதிய கட்டமைப்புக்கள், பக்தர்களுக்கு தேவையான வசதிகள்,ஸ்தல புராணம்,முருகன்-அவ்வையார் திருவிளையாடல் மற்றும் ஆலய கும்பாபிஷேகம் ஆகிய காணொளிகள் மிக்க சிறப்பு..
    நிற்க
    அந்த நாள் ஞாபகம்:
    திருமாலிருஞ்சோலை அழகரை சேவித்து பின், வள்ளி தெய்வானை சமேத
    பழமுதிர்சோலை முருகனை தரிசித்துவிட்டு நூபுரகங்கையில் புனித ,மருத்துவ நீராடிவிட்டு ரம்மியமான சோலைமலையை ரசித்துக்கொண்டு வரும்போது ஒரு "ராமபக்தர்"என் கைப்பையை பறித்துக்கொண்டு மரத்துக்கு escape ஆக,அருகில் காத்திருந்த "சமூக சேவகர்" தயாராக வைத்திருந்த வாழைப்பழ பிரசாதத்தை ஆஞ்சநேயருக்கு சமர்ப்பித்துவிட்டு கைப்பையை பண்டமாற்றாக மீட்டு

    "பையை மீட்ட சுந்தரபாண்டியனாக" எங்களிடம் தஷிணை வாங்கிக்கொண்டபின் , திருப்பியளித்தது ஒரு பசுமையான நினைவு.

    ReplyDelete
  2. A nostalgic moment worth recalling .

    ReplyDelete

Andaal –Sridharan

  Andaal –Sridharan ஆண்டாள் - ஸ்ரீதரன் ஸ்ரீதரன் ஸ்ரீரங்கம் ஆண்டாள் யானையின் அன்பு பாகன் . அவரது அறிவும் கூர்மையும் இறை பக்தி...