Sunday, July 5, 2026

MADURAI-17

 MADURAI-17

மதுரை - 17

மதுரையின்  பல பெருமைகளில் ஒன்றென சொல்ல வேண்டுமாயின் அது இங்கு அமைந்துள்ள கோயில்கள் அதிலும் சைவ-வைணவ திருக்கோயில்கள் பாகுபாடின்றி பொதுமக்களின் ஆன்மிக தேடல்களுக்கு  உதவும் பங்கு /பாங்கு என்று சொல்லலாம். அவ்வகையில் நமது இன்றைய பதிவு திருவாதவூர் எனும் திருத்தலம் பற்றியதே .

இது ஒரு சிற்றூர் தான் எனினும் பெரும் புகழ் கொண்டது. சைவ சமயச்சுடர்களில்  ஒருவரான திரு மாணிக்கவாசகர் அவதரித்த தலம் திருவாசகம் படைத்தவர் . சிவனின் பாதச்சிலம்பின் ஒலி மாணிக்கவாசகருக்கு இத்திருத்தலத்தில் கேட்டதாக சொல்லப்படுகிறது. இது குறித்த அறிவிப்பு பலகை கோயில் பகுதியில் வைக்கப்பட்டுள்ளது.  திருவாதவூர் திருக்கோயிலுக்கு பல பெருமைகள் சொல்லப்படுகின்றன. அவற்றுள் முக்கியமானது இத்திருத்தலத்தின் ஏழு புண்ணியதீர்த்தங்கள் பற்றியது. தல விருட்சம் 'மகிழ மரம்'. அனுமன் இத்திருக்கோயிலில் வழி பட்டதாக சொல்லப்படுகிறது.

இங்கு சிவனும் , அன்னை மீனாக்ஷியுமே முக்கிய தெய்வங்களாக வீற்றிருப்பதாக அகத்திய முனிவர் விளக்கியிருப்பதாக சொல்லப்படுகிறது.

இவை நீங்கலாக இத்திருத்தலத்து வழிபாடு வாத நோய்க்கு தீர்வு தரும்  என்பதனாலேயே "திருவாதவூர்" என்றழைக்கப்படுவதாகவும் சொல்லப்படுகிறது.. இன்னும் எண்ணற்ற விவரங்களை வழங்க சில வீடியோ இணைப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன . அவற்றை ஆழ்ந்து கவனித்து அனைத்து விவரங்களையும் பெறுவீர் . 

https://www.youtube.com/watch?v=k4TMBkZsLsM&t=759s DETAILS –THIRUVAADHAVOOR

https://www.youtube.com/watch?v=LXKZGCcgZsg  thiruvaadhavor

https://www.youtube.com/watch?v=5FUKkdw4YpM THIRUVAADHAVOOR

https://www.youtube.com/watch?v=YLZIBiONIo0 thiruvaadhavor

நன்றி

அன்பன்

 

1 comment:

  1. திருவாதவூர் - நான் அதிகம் அறிந்திராத திருத்தலம்.ஆன்மீக சுற்றுலாவிற்கு நன்றி.

    ReplyDelete

Andaal –Sridharan

  Andaal –Sridharan ஆண்டாள் - ஸ்ரீதரன் ஸ்ரீதரன் ஸ்ரீரங்கம் ஆண்டாள் யானையின் அன்பு பாகன் . அவரது அறிவும் கூர்மையும் இறை பக்தி...