SCIENCE – V A C C I N E -3
அறிவியல் – வாக்ஸின் -3
எனது முந்தைய பதிவில் B
-LYMPHOCYTES, antibody களை
விரைந்து உருவாக்கும் நினைவாற்றல் கொண்டவை எனவே memory செல்கள் என்று
அழைக்கப்படுகின்றன என தெரிவித்திருந்தேன்.
இதன் மேல்
விளக்கமாக பேராசிரியர் Dr .கே.வெங்கட்ராமன் சில தகவல்களை அளித்துள்ளார். B வகை மட்டுமல்லாது, [T cells exposed to antigens] antigen களை எதிர்கொண்ட T வகை செல்களும் antibody களை உருவாக்கும் திறன் கொண்டவை . எனவே நோய் எதிர்ப்பு
என்பது இருவகையில் தோன்றுவதாக அறியப்பட்டுள்ளது அவை முறையே B செல்-mediated
மற்றும் T செல் –mediated immune ரெஸ்பான்ஸ் [
B cell வழி உருவாகும் / T செல் வழி உருவாகும் நோய்
எதிர்ப்பு] என்று அறியப்படுகின்றன என்று விளக்கியுள்ளார். அன்பருக்கு அனைவர்
சார்பிலும் நன்றி.
தொடர்ந்து அவரின் [ Dr .கே.வெங்கட்ராமன்] பங்களிப்பு கிடைக்குமானால் மேலும் நமது அறிதல் வலுப்படும் .மீண்டும் ஒரு முறை Dr . கே..வி அவர்களுக்கு நன்றி பாராட்டுகிறேன் ..
இந்த அடிப்படைத்தகவல் களுடன் வாக்ஸின் தயாரிப்பு
குறித்த மேலும் தகவல்களை பார்ப்போம் .
வாக்ஸின் தயாரிப்புக்கூடங்கள் உலகத்தரத்தில் அமைந்த பாதுகாப்பு மற்றும் தூய்மை நிறைந்த கலன்கள் , பணியாளர்கள், தானியங்கி கருவிகள், மிகத்துல்லியமாக அளவிடும் கருவிகள் போன்ற அனைத்து கட்டமைப்பு வசதிகளுடன், தொடர்ந்து கண்காணிக்கும் உயிரின ஆராய்ச்சி பகுதிகள், விவாத அரங்குகள் மற்றும் Sterile area எனப்படும் நிரந்தர நுழைவுத்தடை கொண்ட பல் அடுக்கு பாதுகாப்பு அரண்களுடன் அமைக்கப்படுவன .
வெளி மனிதர்களுக்கு பார்வை அரங்குகள் பாக்டரியிலிருந்து வெகு தொலைவில் அமைத்த்திருப்பர் . இதனால் தூய்மைப்பராமரிப்புக்கென பெரும் செலவு ஏற்படும், எனவே தயாரிப்பு செலவு மிக அதிகம் அதில் சமரசம் செய்துகொள்ள முடியாது / கூடாது. உயிர் காக்கும் வாக்ஸின் தயாரிப்பில் பல்வேறு உத்திகள் [STRATEGIES] கையாளப்படுகின்றன . சுருக்கமாக அவற்றை விளக்க முயலுவோம் .
2020 ம் ஆண்டில் உலக சுகாதார நிறுவனம் [WHO ] சுமார் 200 வாக்ஸின் தயாரிப்பு முயற்சிகள் உலகெங்கணும் நடந்து வருவதாக தெரிவித்திருந்தது. எனவே பல நிறுவனங்களும் , நிர்வாகங்களும் சோர்வுற்று செய்வதறியாமல் திகைத்தன . ஏனெனில் பொதுவாக வாக்ஸின் தயாரித்து பல சோதனைகளைக்கடந்து பயன்பாட்டுக்கு வர சுமார் 7 முதல் 10 ஆண்டுகள் கால அவகாசம் ஆகும் என்று உலகே அறியும்.
சரியான மருத்துவ பாதுகாப்பை உறுதி செய்யாமல் 7 ஆண்டுகள் காத்திருந்து ஆய்வு செய்து கொண்டிருக்க கூடிய வகை நோயா கொரோனா? கொரோனா போன்ற நோயை வேறு எவ்வகையிலும் எதிர்கொள்ள இயலாது. . மிகவும் இக்கட்டான தருணம் அது . அந்த சூழலில் இந்தியா இயங்கிய விதம் மகோன்னதமானது. ஏனெனில் நமது பொருளாதாரம், பொது சுகாதாரம் மருத்துவக்கட்டமைப்புகள் , LITERACY என்னும் கல்வி நிலை அனைத்தையும் ஏளனப்பார்வை பார்த்தே வளர்ந்து விட்ட நாடுகள் தான் உண்மையில் வளரவில்லை என்பதை கொரோனா வைரஸ் ஐயந்திரிபற பட்டவர்த்தனமாக்கியது.
ஆம் கொத்துக்கொத்தாக செத்து மடிந்த கூட்டங்கள் அமெரிக்கா /ஐரோப்பா / அதிலும் பிரிட்டன் , இத்தாலி , ஜெர்மனி நாடுகளில் மிக
மிக அதிகம். தேவையான அளவு சவப்பெட்டிகளை வடிவமைக்கக்கூட அவகாசமின்றி
தோண்டப்பட்ட MASS GRAVE என்னும் ஒட்டு மொத்தப்புதைகுழிகள் ஏராளம். இது ஒரு புறம் நடந்து
கொண்டிருக்க இந்தியா தனது வாக்ஸின் வடிவமைப்பு செயல் பாடுகளை பன் மடங்கு
உயர்த்தியது , லாக் டவுன் என்னும் விசேஷ பாதுகாப்பை மிகவும் அக்கறையுடன்
பின்பற்றி உயிரிழப்புகளை வெகுவாக தவிர்த்து விட்டது. நமது பொது சூழல்கள் அடிப்படையில் பார்த்தால் கொரோனா உயிரிழப்பு சொற்பமே .
நமது நாட்டிலும் கூட பலர் இன்னும் கூட இந்தியா வை குறை
கூறுவதையும் , யாரையோ எதிர்ப்பதாக நினைத்துக்கொண்டு , நமது கல்வித்திட்டங்களை
கிண்டல் செய்வதும் தொடர்கிறது. இன்றைய கட்டுரைக்கு தேவை இல்லாத விலகல் எனினும் நமது
மேன்மைகள் யாவை என்பதை பிறிதொரு கட்டத்தில் வாதிட நினைக்கிறன் . இப்போதைக்கு இந்த விலகலை
மன்னித்தருள்வீர்..
வாக்ஸின் தயாரிப்பின் அடிப்படை , குறிப்பிட்ட நோய் தோன்ற காரணமாக இருக்கும் ஆன்டிஜென்களை அடையாளம் கண்டு அதே வகை ஆன்டிஜென் அமைப்புள்ள நோய் தாக்கும் திறனற்ற ஆன்டிஜென்களை நமது உடலில் ஊசி வாயிலாக செலுத்தி , எதிர்ப்பு சக்தியை [பொருத்தமான ஆன்டிபாடிகளை] தோற்றுவிக்கும் [நோய் எதிர்க்கும்] திறனை மேம்படுத்தும் உத்தி தான் வாக்சினேஷன் என்று எனப்புரிந்துகொள்ளலாம்.
ஆகவே, நோய் கிருமியை முறையாக ஆய்வுக்கு உட்படுத்தி , அக்கிருமியின் எந்த உடல்
பகுதிகள் ஆன்டிஜென்களாக பயன் படுத்தலாம் என்று கண்டறிவர். அல்லது அந்த உயிரினவகை அமைப்பை
செயல் இழக்க வைத்து [attenuated ] வைரஸ்/ பாக்டீரியா [எது காரணியோ] அதை வாக்ஸின் தயாரிப்பில் பயன்படுத்துவர்.. அதன் நோய் தாக்கும் திறனற்ற
புறஅமைப்பு ப்ரோடீன்கள் [shell
proteins] வாக்ஸினில் இடம் பெறும் ANTIGENகள். ஒரு
வாக்ஸினில் உள்ள பொருட்கள் யாவை ? ஏன்
என அறிவோம்.
தொடரும் அன்பன் ம வ
இந்த Antigen/antibody செயல்களே
ReplyDelete1. Hypersensitivity to drugs
2. Allergy to allergens
3. Autoimmune Disorder
இவைகளுக்ககும் காரணமாக இருக்கின்றனவா?
Necessarily anti-body formation is triggered by antigens. So long as drugs keep triggering antibody elaboration, drug allergy can be understood. as a sensitive reaction. Allergy is a reaction to allergens. Allergens are proteins and if they trigger reactions proteins named Antibodies are generated. In all systems of allergic reactions Antibodies arise to fight Antigens.
ReplyDeleteOf late many life saving drugs, antibiotics, develop resistance or hypersensitivity.
ReplyDeleteWhat could be the reason?
Though I am not authentic of what I say, I can draw a parallel . Ayurvedic drugs are slow to act while allopathic preparations are quick due to purity of the 'active principle'. With enhanced purity, chances of hypersensitivity also increase. Wholesome natural plant extracts are tolerated better by patients. My perception tries to connect hypersensitivity to purity and vice-versa. I may be wrong.
ReplyDeleteThank you, Professor.
ReplyDelete