MADURAI-19
மதுரை- 19
நூபுர கங்கை
பழமுதிர்ச்சோலை பகுதியில் இருந்து சற்று
மேலேறிச்சென்றால் [சுமார்
400 மீட்டர் தொலைவில் ] அமைந்துள்ள புண்ணிய தீர்த்தம்
நூபுர கங்கை என்றழைக்கப்படுகிறது. இந்த நீர் பிரவாகம் எங்கிருந்து
துவங்குகிறது என கண்டு பிடிக்க இயலவில்லை
என்பது இதன் விசேஷத்திற்கு மேலும் ஒரு சான்று.. இப்புனித
நீர் ஊற்று வாமன அவதாரத்தோடு தொடர்புடையதாக
சொல்லப்படுகிறது. மஹாவிஷ்ணு
இரண்டாவது அடியை அளக்க உயர்த்திய கால்
சத்திய லோகம் வரை செல்ல, ப்ரம்மா இந்தப்பாதம் விஷ்ணுவின் திருவடி
என்றுணர்ந்து அப்பாதத்தை ஆராதிக்க தனது கமண்டலத்தில் இருந்து நீரை புரோக்ஷிக்க எண்ணற்ற நீர்த்திவலைகள் பூமியின் பல இடங்களில் வந்து சேர, அவற்றில் விஷ்ணுவின் கால் சிலம்பில் பட்டு தெறித்த நீர்
பூமியில் நூபுர கங்கையாக வடிவம் கொண்டதாக சொல்லப்படுகிறது. [நூபுர =சிலம்பு]
அதனால் அழகர் மலையில் உள்ள இந்த நீர் ஓடை சிலம்பாறு என்ற பெயரால் வழங்குகிறது.இப்படி ஓர் இறைத்தொடர்புடைய
நீரோடையை மக்கள் பெரும் ஆர்வமுடன் ஸ்பரிசித்து
நீராட விரும்புவது இயல்பான ஒன்று
தான். எண்ணற்ற தாவரங்களும் மூலிகைகளும் நிறைந்த அழகர்
மலையில் பாயும் நீர் விசேஷ மருத்துவ குணங்கள் கொண்டது. இந்நீர்
இரும்பு மற்றும் தாமிரத்தாதுகள் கொண்டிருப்பதாக சொல்லப்படுகிறது.
மட்டுமல்ல இந்நீ
ரோடை பகுதியில் . அமைந்த அம்மன் ராக்காயி அம்மன், இம்மலையின் காவல்
தெய்வம் 18 படி கருப்பசாமியின் இளைய சகோதரி என்று சொல்லப்படுகிறது..
அனைத்திற்கும் மேலாக
இப்புனித நீர் கொண்டுதான் அழகர் பெருமானுக்கு திருமஞ்சனம் [அபிஷேகம்] செய்யப்படுகிறது.
இந்நீர் அன்றி வேறு நீர் உபயோகித்தால், ஸ்வாமியின் [உற்சவர்] திருமேனி
நிறம் மங்கி விடுமாம். சுற்றுலா பயணிகள் நூபுர
கங்கையில் நீராட [அதாவது ப்ரோக்ஷணம் செய்துகொள்ளவாவது
] முண்டியடிக்கக்காணலாம் . எனவே இங்கு காவல் ஏற்பாடுகள் உடை மாற்றும் அறைகள்
எல்லாம் செய்யப்பட்டுள்ளன.
நாள் முழுவதும் கூட்டம் தான்.
இதற்கான 2 வீடியோ
இணைப்புகள் இதோ
https://www.youtube.com/watch?v=Sixi5uyL3-E holy spring noopura gangai
https://www.youtube.com/watch?v=r7BafvYRlAcv
fine details about Noopura gangai
நன்றி
அன்பன் ம வ
நூபுர கங்கை ராக்காயி அம்மன் பற்றிய இந்த கட்டுரை அருமை. அந்த வீடியோ கிளிப் பார்த்தது மனதிற்கு ஒரு மகிழ்ச்சியை அளிப்பதாக இருக்கிறது. அதுவும் காலை வேளையில் பார்த்தது அதில் குளித்துவிட்டு வந்தது போல் இருக்கிறது.
ReplyDeleteநன்றி நமஸ்காரம் 😊🙏
You have to climbe 80 steps from Pazhamuthircholai to Nuburagangai
ReplyDeleteசத்திய லோகம் - பிரம்மா - கமண்டல தீர்த்தம் - விளக்கம் அருமை.
ReplyDeleteராக்காயி அம்மன் ஆலயம் -புதிய செய்தி.