I perceived the song
பாடலை உணர்ந்தேன்
ஏற்கனவே 'பாடலை உணர்வோம்' என்ற வகை விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தாகி விட்டது .
எனவே பாடலை உணர்ந்தேன் என்ற தலைப்பில் எனது கருத்துகள்.. பாடலை நான் உணர்ந்த விதம் பற்றி பேச உள்ளேன். உங்களில் எவரையும் பாடலை உணரச்சொல்லி நான் சொல்லவோ/கேட்கவோ/ வலியுறுத்தவோ /விடை சொல்லவோ கேட்பதாக இல்லை.
எனவே மனம் இருப்போர் 'வேண்டுமானால்' இணைப்பை க்கேளுங்கள். இன்றைய தேர்வு வெகு சிறப்பானது. ஆம் எடுத்த எடுப்பிலேயே உச்சம் தொட்டு தமிழகத்தை திரும்பிப்பார்க்க வைத்த இசையும், குரலும். கூடி வந்த பாடல்.
ஒரு வெற்றிப்பாடலுக்கான சர்வ அம்சங்களும் தேவ தச்சனால் செதுக்கப்பட்டது போன்ற பிசிறில்லாத துல்லியம், ஓசை நயம் , இசையின் நளினம் , குரலின் வசீகரம் -இவற்றை வெகு நேர்த்தியாக கட்டமைத்துள்ளார் மெல்லிசை மன்னர் எம் எஸ் விஸ்வநாதன் . ஆம் முதல் இரண்டு பாடல்களிலேயே இந்தித்திரையில் உச்சம் தொட்ட வாணிஜெயராம் தமிழில் பாடிய முதல் பாடல் 'மல்லிகை -என் மன்னன் மயங்கும்' என்ற வாலியின் கவிதை -தீர்க்க சுமங்கலி [1974] படத்திற்காக..
இப்பாடல்
காற்றில்
மிதந்தது
முதன்
முதலில்
1973 செப்டம்பர்
மாதம்
ஒரு ஞாயிறு மாலை
4.00 மணி
சென்னை
வானொலியில்.
கேட்ட
உடனேயே
இந்தப்படம்
எப்போது
வரும்
என்று
கேட்காத
யாருமே
இல்லை.
அப்படி
ஒரு
வசீகரம்.
திரு எம்
எஸ்
வி
ஒரு
புதிய
குரலுக்கு
வாய்ப்பு
தருவதானால்
வெகு
கவனமாக
அதுவரை
நாம்
கேட்டிராத
புத்தம்
புதுவகை
பாதையில்
பயணிக்கும்
ட்யூன்
ஒன்றை
கையில்
எடுப்பார்.
அதற்கு
முன்னர்,
கேட்பவர்
முற்றாக
காது
கொடுத்து
லயிக்கும்
வகையில்
ஒரு
துவக்க
இசையை
மாறுபட்ட
கருவிகள்/
ஹம்மிங்
அல்லது
அடுத்தடுத்து
பின்னிச்செல்லும்
இசைக்கூறுகளை
நெருக்கமாக
தொகுப்பார்.
இப்பாடலின்
துவக்க
இசை
வித்தியாசமாக
ஒலிப்பதை
நன்கு
உணரலாம்
[நான்
உணர்ந்தேன்].
இசை க்கருவிகள் அடங்கும் தருவாயில் குரல் துவங்கி பாடலுக்குள் நாம் நுழைய ஒரு விநோத அனுபவம் . ஆம் மல்லிகை என்ற சொல் எவ்வளவு விஸ்தாரமாக நீட்டி எடுத்துச்செல்லப்பட்டுள்ளது . ஆழ்ந்து கேட்டால் விளங்கும். அது மட்டுமல்ல பாடல் துவங்கியதிலிருந்து [கண் சிமிட்டும் நேர அளவிற்கு கூட] இடைவெளியே இல்லாமல் கருவியோ /குரலோ, இரண்டும் ஒன்றை ஒன்று தழுவிய வண்ணம் பாம்புகள் போல் பிணைந்து முன்னேறுவது திரு எம் எஸ் வி அவர்களின் அடையாள முத்திரை.
பாடலில்
ஒருவித
விறுவிறுப்பை
குழைக்க
புல்லாங்குழல்,
கிட்டார்
இரண்டும்
பின்னிப்படர
ஒரு
வித்தியாச
ஒலிக்கலவை
தோன்றி
மறைய
மீண்டும்
குரல்
ஊஞ்சலில்
ஆடுவது
போல்
ஒலிக்க
-ஐயோ
நம்மையும்
மிதக்கச்செய்வதை
உணரலாம்
[நான்
இன்றும்
உணருகிறேன்]
பாடலில் அடிப்படை தாளம் தபலா வில் அரங்கேற , ஆங்காங்கே நடை மாறுவதையும் சரணம் ஒருபாதி முடிந்ததும் அதிவேக வாசிப்பும் அரங்கேற, சரணத்தின் பிற பகுதியில் முதல் வரி நிறைவுறும்போது திடீரென்று ட்ரம் சரசரத்து [கி ஜு கிஜு என்று அதிர பாடலின் வசீகரம் உயரம் தொடுகிறது.
இது
போன்ற
2 இடங்களின்
ட்ரம்
துடிக்க
[என்
மன்னன்
துஞ்சத்தான் மற்றும் பின்னர் நம்
இல்லம்
சொர்க்கம்
தான் இரு
இடங்களிலும்
ட்ரம்
மின்னல்
பாய்ச்சல்
காட்டி
மறைகிறது].
பாடல்
முழுவதிலும்
உயர்
ரக
கவிதை
நயம்
ஆதிக்கம்
தொடர்ந்து
பயணிப்பது
பாடலுக்கு
மற்றுமோர்
பெருமை.
எப்போது கேட்டாலும்
பாடல்
மெருகு
குலையாமல்
ஜொலிக்கிறது.
ஆக்கிய
கலைஞர்கள்
95% விண்ணுலகில்
ஐக்கியம்
ஆனால்
பாடல்
இன்றும்
புதுப்பொலிவு
குன்றாமல்
தவழ்கிறது.
முடிந்தால்
கேளுங்கள்
உணர
முடிந்தவர்கள்
உணரலாம்
பாடலுக்கு இணைப்பு
இதோ
https://www.youtube.com/watch?v=DIZe54592PU
MALLIGAI VAANI JEYARAM
DHEERGA SUMANGALI, VAALI
MSV 1974
நான் சொல்ல
எதுவுமில்லை
-வெற்றிப்
பாடலைக்கேளுங்கள்
https://www.youtube.com/watch?v=YQ-DkPoMZ4M
1978
நன்றி அன்பன் ம
வ
No comments:
Post a Comment