Thursday, August 13, 2026

INDIA’S NOVEL DESIGN

 INDIA’S NOVEL DESIGN

இந்தியாவின் நவீன முயற்சி.

தொழில் நுட்பத்துறையில் [குறிப்பாக ராணுவ கருவிகள் வடிவமைப்பில்] நாம் எஞ்சின் தயாரிப்பில் பிறரை சார்ந்திருந்த மையால் நமது தளவாடங்களின் உற்பத்தி வேகம் மந்த கதியில் இருந்தது. இப்படித்தான் நமது பல மேம்பட்ட தயாரிப்புகள் கூட வெளிநாட்டு அனுமதி/ உதிரி பாகங்கள் / நிதானமான சப் ளை போன்ற குதர்க்க வியாபார உத்திகளால் மிகவும் பிறர் சார்பு நிலையிலேயே தத்தளித்து வந்தது

 எழுந்தது பார் யுகப்புரட்சி என்பது போல் திடீரென்று இந்திய நிறுவனங்களும் பாதுகாப்பு கருவிகள் தயாரிப்பில் ஈடுபட முயற்சிகள் துவங்கியதும் எண்ணற்ற ஏவுகணை வடிவமைப்புகள், துல்லியம், குறைந்த பொருட்செலவில் வியக்கவைக்கும் செயல் திறன் என்று புலிப்பாய்ச்சல் எடுத்து ஏவுகணைகள் பீரங்கிகள் ராடார்கள் , ரயிலில் இருந்து செலுத்தக்கூடிய ஏவுகணைகள் என வென்று உலகச்சந்தையில் புருவங்களை உயர வைத்ததை கடந்த 4 ஆண்டுகளில் நாம் பார்த்தோம். அது மட்டுமல்ல சுமார் 2 வாரங்களுக்கு ஒரு முறை ஏதேனும் ஒரு புதிய திறன்கூட்டல் [efficiency enhancement ] குறித்து செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. அப்படி ஓர் செய்தி சென்ற வாரத்தில் பளிச்சிட்டது . அது என்னவெனில் முற்றிலும் புதிய அணுகுமுறையில் வான் ஊர்திகளுக்கான எஞ்சின் வடிவமைப்பு.

இன்றளவும் பெரிதும் பயன் பாட்டில்  உள்ள எஞ்சின்கள் ராம்ஜெட்/ஸ்க்ராம் ஜெட்  என்ற காற்று எரிபொருள் இரண்டையும் அழுத்தமாக உந்துவதன்  மூலம் எஞ்சினை முன்னோக்கி செலுத்தும் உத்தி.  இந்திய விஞ்ஞானிகள் [RDE நிறுவனம் ஹைதராபாத் ] குறுகிய விட்டம் கொண்ட குழல் போன்ற அமைப்பில் காற்றை நேரடியாக அழுத்தாமல் மெல்ல ஒரு வட்டப்பாதையில் சுழன்று முன்னேறிச்செல்லவைக்கும் போது அது எரிபொருளை முற்றாக பயன்படுத்தி  எரிபொருள் திறன் அதிகரிப்பதை நேரடி செயல் விளக்கம் மூலம் நிரூபித்துள்ளனர். இதனால் மேம்படும் செயல் திறன் 15 முதல் 25 % வரை அதிகரிக்கும் என்று சோதனை மூலம் கண்கூடாக செய்து காட்டியுள்ளனர்.

இதனால் பல நன்மைகள் உருவாகும். சிறிய உருவம் கொண்ட எஞ்சின் என்றாலும் திறமையாக குறைந்த செலவில் இயங்கும் . தேவைக்கேற்ப பல உருவ வேறுபாடுகளில் எஞ்சின்களை அமைத்து ஏவுகணைகள் வெடிகுண்டுகள் , ராக்கெட்கள் என பலவற்றை தேவையான இலக்குதூரங்களை எட்ட முடியும் . மீண்டும் ஒரு முறை போங்கடா நீங்களும் உங்கள் டெக்னா லஜியும் என்று பிறரைப்பார்த்து சொல்லும் உச்சத்தை இந்த கண்டுபிடிப்பு ஏற்படுத்தியுள்ளது. நிச்சயம் இந்திய தொழில் நுட்பம் ஏறுமுகம் கண்டு  வீறு நடை போடுகிறது . இணைப்பு கீழே . சிறிய வீடியோ எனினும் பெரிய தகவல்.

https://www.youtube.com/watch?v=lk9L5cbnUX8 new Engine technology by India

https://www.youtube.com/watch?v=_xkzE7-r3hY stealth air defence

நன்றி                       அன்பன்  

No comments:

Post a Comment

VAISHNAVISM-2 [ DA JOSEPH]

  VAISHNAVISM-2 [ DA JOSEPH]    18-98-26 வைணவம் -2 [திரு DA ஜோசப்] வைணவக்கோட்பாடுகள் குறித்து    திரு ஜோசப் அவர்கள் வழங்கியுள்ள 2 ம் தொக...