THE PARROTS
கிளிகள்
பலவகை உயிரினங்கள் இருந்தாலும் சில எப்போதும் மனதிற்கு உற்சாகமும் ஆர்வமும் நிறைவும் தரவல்லன. உதாரணம் குட்டி யானைகள், பசுவின் கன்றுகள், அணில்கள் , கிளிகள் மற்றும் நாய் குட்டிகள். இவற்றில் யானை , நாய் மற்றும் அணில் வகைகள் மனிதரோடு ஒட்டி உறவாடும் இயல்பு கொண்டவை.. எப்படியோ நான்கு வகை உயிரினங்களுக்கு 'பிள்ளை' என்ற அடை மொழி பயன் படுகிறது அவை -தென்னம்பிள்ளை, அணில்பிள்ளை கிளிப்பிள்ளை மற்றும் கீரிப்பிள்ளை. அதாவது மக்கள் அவற்றை வேற்றினமாகப் பார்ப்பதில்லை. . எனவே அவைகளை பிள்ளை என்றே குறிப்பிடக்காணலாம்.
கீரிப்பிள்ளை யின் மகத்துவம் யாதெனில் எவ்வளவு பெரிய / வீரிய நச்சு கொண்ட பாம்பினம் ஆயினும் அசராமல் சரிநிகர் சமானமாய் வம்பு இழுத்து, பாம்புடன் தீவிர மோதலில் ஈடு பட்டு எப்படியாவது பாம்பின் தலையில் பலத்தகாயத்தை ஏற்படுத்தி , ஒரு நிலையில் ஐயோ போதும் ஆளை விடுங்கப்பா என்ற ரீதியில் பாம்பு தப்பி ஓடி பிழைக்கப்பார்க்கும். அதுதான் தருணமென்று கீரிப்பிள்ளை பாம்பை கடித்து தலையைக்குதறி கொன்று விடும். அதனால் கீரிப்பிள்ளைகளை மனிதனின் தோழனாகப்பார்க்கும் மன நிலை உண்டு.
பெரும்பாலும் கீரிப்பிள்ளைகள் பாம்பிடம் கடி பாடாமலே வளைந்து
நெளிந்து வெகு விரைவாக பாம்பை சோர்வடையச்செய்து
கவிழ்த்து விடும். மேலும்பாம்பு கீரியின் உடலை
கவ்விப்பற்ற நினைத்தால் , கீரி உடல் சிலிர்த்து , புஸ் என்று சாமரம் போல் விரிவடைய பாம்பின்
வாய்க்கு கீரியின் உடல் முடி மட்டுமே சிக்கும். அரிதாக கடி பட நேர்ந்தால் கீரி
மரணிக்கும் ஏன் எனில் பாம்பின் நச்சு
கீரியின் உடலில் செலுத்தப்பட்டு அதன் மூலம் மரணம் ஏற்படும். ஆனால் பொதுவாக பாம்பு
தான் கீரி யிடம் அவதியுறும்
இவை இவ்வாறிருக்க கிளிப்பிள்ளை
முற்றிலும் மாறுபட்ட செயல் உடையது. பழகியவர்களுடன்
பேசும் அது கோபம் கொள்ளும் , அன்பு
பாராட்டும் , சண்டையிடும் , எதையும் கேட்டுப்பெறும் .எனவே ஒரு சிறு குழந்தை போல வீடுகளில் சுதந்திரமாக உலவும் வளர்ப்பவர் மீது ஏறி அமரும் , காதில் பேசும் . இப்படி
செயல் படும் கிளி ஒன்றின் வீடியோ
இணைப்புகள் கீழே உள்ளன . பார்த்து மகிழுங்கள்
.இவையும் நமக்கு புத்துணர்ச்சி தரும் அனுபவங்களே
https://www.youtube.com/watch?v=X9UK4eRqYRk BONUS PARROT REACTION
https://www.youtube.com/watch?v=bLJ2W3ai_OM parrot speaks
The
Ultimate Mongoose Fights King Cobra in the Wild #shorts #blackcobra MONGOOSE Vs COBRA
🦦 Mongoose vs Cobra: How a Tiny Mongoose Kills a Deadly
Cobra 💀🐍
நன்றி அன்பன் ம
வ
No comments:
Post a Comment