VAISHNAVISM [ DA JOSEPH]
வைணவம் [திரு DA ஜோசப்]
வைணவம் குறித்து பலரும் பலவித முறைகளில் அறிந்துள்ளோம்.
ஆனால் நமக்கு இக்கருத்துகளை பிறரோடு பகிர்வது எளிதன்று.
இதுபோன்ற கருத்தாழம் மிக்க துறைகளில் கருத்து சொல்வதற்கு
நீண்ட பயிற்சியும், எண்ணற்ற மேற்கோள்களும் நூல்களின் தொடர்பும் பெரிதும் தேவை. இவ்வனைத்து
அமைப்புகளும் ஒருசேரப்பொருந்தி வந்தாலும் தங்கு
தடையின்றி பேசுதல் ஒரு திறமை. கேள்விகளை எதிர்கொண்டு அவற்றிற்கான வாதங்களை சான்றோர்
நூல்கள் கொண்டு விளக்குதல் கூடுதல் வலிமை.
இது போன்ற ஆளுமை மிக்க ஒருவர் தான் திரு DA ஜோசப் அவர்கள் கடலூர் பகுதியினர். கிறித்துவ மரபில் வந்தவர் எனினும் இந்து மதக்கோட்பாடுகளை முறையான அணுகுமுறைகள் கொண்டு விளங்குபவர். எளிமையும் வலிமையையும் அவரது பேச்சாற்றலின் இரு பெரும் அம்சங்கள். அவரது பேச்சில் நேர்மை தொனிப்பது, இறையருள் பெற்றவர் என்பதன் வெளிப்பாடு
அவர் வைணவ முறைகளை விளக்குகிறார் . சுமார் 8 பகுதிகள்
உள்ளன, அவற்றை செவ்வாய் கிழமைகளில் வெளியிட முயல்கிறேன். நம்மில் பலருக்கு
அவரை விடவும் புலமை இருக்கலாம். ஆயினும் மாற்று மதத்தவரின் நேர்மையை பாராட்டுவது நமது
பண்பாட்டின் அடையாளம் தொடர்ந்து வீடியோக்களை பார்த்து பலன் பெறுவோம்.
Part 1 Vaishnavism for real life (Part-1) da joseph
நன்றி
அன்பன் ம வ
மிகவும் நீளமான பதிவு. பாதி பகுதியையே கேட்டுள்ளேன். மீத பகுதியை நாளை கேட்டுவிடுவேன். இது வரை கேட்டதில், வைணவத்தின் தற்கால உண்மை நிலையை விவரிக்கிறார். திருமங்கை ஆழ்வாரைப் பற்றிய அறிய செய்திகளை அளித்திருக்கிறார். திரு. ஜோசப் அவர்களும் நாராயண நாமத்தின் மேன்மையைப் போற்றுவதன் மூலம் உயரிய தகுதியை அடைந்துள்ளார்
ReplyDelete