Sunday, August 9, 2026

OUR NATIVE BREEDS [COW]

 OUR NATIVE BREEDS [COW]       

நமது ஆவினச்செல்வம்

இந்திய திருநாட்டில்  பசுக்களை தெய்வமென போற்றி வணங்குதல் பாரம்பரிய மரபு எனில் தவறல்ல. இடையில் சிலகாலம் வேற்றின பசுக்கள் நிறைய பால் தரும் என்று அவற்றை இங்கே வரவழைத்து பல வித கலப்பின வகைகள் தோன்றி விட்டன. ஆனால் அவற்றை பராமரிப்பதும் பாதுகாப்பதும் பெரும் செலவு தரும்; மேலும் அவை நமது வெப்பசூழலில் பெரும் சிரமத்திற்கு ஆளாவதாக கிராம மக்கள் சொல்வதை நாம் அறிவோம்.

இப்படி கலப்பினங்கள் உருவானதன் விளைவாக நமது நாட்டின் இயற்கை செல்வ பசு வகைகள் குறைந்து வருகின்றன, எனவே பசுவினங்கள் குறித்து தெளிவும் நாட்டமும் கொண்ட பலர் நாட்டு வகை பசுக்களை மீட்டெடுக்க பெரும் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

அவர்கள் ஒவ்வொரு வகை இனத்தையும் தேடிப்பிடித்து அவற்றை தொடர்ந்து BREEDING என்னும் இனப்பெருக்க முறையில் மெல்ல மெல்ல காப்பாற்றி வருகின்றனர், அதற்கான அவர்களது ஆக்க பூர்வமான முன்னெடுப்புகள் பெரும் மரியாதைக்குரியவை.

அப்படி ஒரு அமைப்பினை இளம் பெண்மணி ஒருவர் நடத்தி வருகிறார். அவர் பேச்சில் எவ்வளவு தெளிவு மற்றும் எவ்வளவு ஆழ்ந்த நம்பிக்கை.. அப்படி இருக்கும் பல இனங்களில் புங்கனூர் குட்டை என்பது அந்நாளைய நவராத்திரி கிருஷ்ண விக்கிரகத்துடன்  குலவும் சிறு கன்றுகள் போல பெரும் பசுக்கள் இருப்பது கண் கொள்ளா காட்சி .

இவற்றிற்கான வீடியோக்கள் இணைத்துள்ளேன். பார்த்து புரிந்து கொள்ளுங்கள் கேள்விகள் கிடையாது. வராத விடைக்கு கேள்விகேட்பது தேவையற்ற முயற்சி. எனவே வீடியோபதிவுடன் எனது பணி  நிறைவுஅடைகிறது .

https://www.youtube.com/watch?v=G6WI1-LzatQ kumaragiri gosaala for native breeds

https://www.youtube.com/watch?v=2k4wCq3oij0  Nadipathy   goshaala

https://www.youtube.com/watch?v=MXSgRFFZNRs  Mini coes welcome SriSankaracharya

https://www.youtube.com/watch?v=vHTKX7_dewM NADIPATHY BREED

https://www.youtube.com/watch?v=bceIFThSn5c MINI MARVEL COWS

நன்றி

அன்பன்

No comments:

Post a Comment

OUR NATIVE BREEDS [COW]

  OUR NATIVE BREEDS [COW]         நமது ஆவினச்செல்வம் இந்திய திருநாட்டில்   பசுக்களை தெய்வமென போற்றி வணங்குதல் பாரம்பரிய மரபு என...