A UNIQUE SONG of Truth and Hilarity
பாடலில் எழுந்த
விந்தை
புத்தி சிகாமணி பெற்ற பிள்ளை
[இருவர் உள்ளம் 1963] கவியரசு , கே
வி எம் , எல் ராகவன் எல் ஆர் ஈஸ்வரி
பொதுவாக நான் மெல்லிசை மன்னரைத்தாண்டி
, பிற இசை அமைப்பாளர்களை மையப்படுத்தி எழுதுவது கிடையாது. இதில்
வீண் பிடிவாதம் எதுவுமில்லை. எம் எஸ் வி யின் படைப்புகளை அறிந்துள்ளதைப்போல் பிற ஆக்கங்களை அறிந்தேன் இல்லை.
மேலும் ராகம் ஸ்வரம் போன்ற அடிப்படையே தெரியாமல் திரு கே வி மகாதேவனின் ஆக்கங்களை பேசுவது
தவறு. இதை நான் நன்கறிவேன்.
இன்றைய பாடல் இருவர் உள்ளம் படத்தில் கண்ணதாசன் வழங்கிய
நகைச்சுவை பாடல் திரு கே வி எம் இசையில் எல்
ஆர் ஈஸ்வரி ஏ எல் ராகவன் குரல்களில் அந்நாளில் முழங்கிய
பாடல்
நகைச்சுவையை எவ்வளவு கோர்வையாக கருத்து
பூர்வமாக பேசியுள்ளார் கவிஞர்.
அசராமல் பிள்ளை பெற்ற அசட்டு ஜோடி
கவிஞரின் கிண்டல் மற்றும் யதார்த்த
உரையாடல் பாடலின் சிறப்பு "-
"வருசம்
ஒரு பிள்ள பெத்தெடுத்தேன்
இப்போ வயசு 26 ஆச்சு’ [என்று
பெண் பேசுகிறாள் ]
அதே போல்
‘ஆறு பிறந்தது போதும் என்று நான் ஆறு குளம் எல்லாம் மூழ்கி வந்தேன்’
"காசி
ராமேஸ்வரம் சென்று வந்தேன் பாழும் காதலினால் திரும்பி வந்தேன்" என்று
ஆண் பாட
அவள் "போகாது ஐயா போகாது ,எங்கு போனாலும் ஆசை
போகாது " என்று
பலவீனத்தை சுட்டும் கவிதை
"நாம
ஆசையுடன் பேசி நாளாச்சு " - பெண்
"ஐயோ
ஆபத்து அங்கே தான் உருவாச்சு"- ஆண்
.இது போன்ற பாடல் கூட இனி வருமா என்ற கேள்வி விடையின்றி தத்தளிக்கின்றது.
பாடகர்களின் குரலில் தான் எவ்வளவு பாவம்? திரையில் எம்
ஆர் ராதா-முத்துலட்சுமி ஜோடியின் முக பாவங்கள் அவ்வளவு
நேர்த்தி.
இரு இணைப்புகள் உள்ளன. ஒன்று இசைத்தட்டு இரண்டாவது திரைக்காட்சியின் பதிவுடன்
ரசிக்க முடிந்தவர்கள் மனமிருந்தால் ரசியுங்கள்
இணைப்புகள் இதோ
https://www.youtube.com/watch?v=4mOyDLk17lY&t=134s BUDDHI SIGAAMANI PETHTHA LRECORD AL R LR E
https://www.youtube.com/watch?v=1eGXqrMGJGw MOVIE SONG KD KV M LRE, AL
R
BONUS
மனங்கவரும் கவியரசு
கண்ணதாசனின் யாதர்த்தமான பேச்சு
https://www.youtube.com/watch?v=QyIKBEbnMU4
நன்றி அன்பன் ம வ
போகாதையா போகாது பெண்ஆசை மனிதனைவிட்டுப்போகாது
ReplyDeleteInteresting to.note your a little diversion to KVM lane while travelling on MSV highway ! KVM too is a great MD.coexisted in.MSV era and gave a good number of good numbers..
ReplyDeleteNice choice of KVM song. Enjoyed. THX
ஆசிரியரின் முன்னொரு நகைச்சுவை பாடல் பதிவு -
ReplyDelete" நான் மன்னனுமில்லே, மந்திரியுமில்லே"
நான் மேலும் நினைவுகூர்வது:
"பலே பாண்டியா"வில் ராதா- சிவாஜி
போட்டிப் பாடல்
" நானே எனக்கு நிகரானவன்"
Please read as:
ReplyDelete" நீயே உனக்கு என்றும் நிகரானவன்"