Wednesday, September 16, 2026

MSV’s APPROACH TO SONG COMPOSITION

 MSV’s APPROACH  TO SONG COMPOSITION  

எம் எஸ் வி அவர்களின் இசை அணுகுமுறைகள்

ஒரு இசை அமைப்பாளரின் தொழில் அணுகுமுறை PROFESSION  APPROACH ] பற்றி அறிந்து கொள்ள

1 தொழில் ரீதியிலான / வர்த்தக முறையிலான தேவைகள் [இசை வகைகள், ஸ்வர ஞானம், ஸ்வர அடுக்குகள் வெளிப்படுத்தும் ராக லட்சணங்கள்] பற்றிய தெளிவு

2 சமகாலத்திய நடை முறை அணுகுமுறைகள் [ஒலி அமைப்பு, கருவிகள், தாள வகைகள் ]

3 அந்த குறிப்பிட்ட இசை அமைப்பாளரின் பிரத்தியேக விருப்புகள் [ எம் எஸ் வி அவர்களுக்கு பியானோ, போங்கோ, கோரஸ் , ஷெனாய், குழல் மற்றும் பாடுவதில் மாறுபாடு எனும் உத்தி]

4 அந்த இசை அமைப்பாளர் எப்படி ஒரு மந்திர வாதி போல மக்களின் ரசனையை மெல்ல மெல்ல மாற்றி தன் இசை அமைப்புக்கு தயார் படுத்துகிறார்.

[திரு எம் எஸ் வி அவர்கள்சுமார் 3 - 5 ஆண்டு கால இடை வெளியில் வெவ்வேறு இசைக்கோலங்களை அரங்கேற்றியமை அவரின் இசையை கீரிப்பிள்ளை போல் உற்று நோக்கி வந்தவர்களுக்கு விளங்கும்.           ஆனால்  ஏன் எதற்கு என்பதெல்லாம் இறைவனுக்கே வெளிச்சம்.

அவரின் வெற்றி இரண்டு குறியீடுகளால் சிகரம் தொட்டது  ] கடுமையான உழைப்பு ] நான் அப்படி செய்தேன் இப்படி செய்தேன் , இதற்கு முன் யாரும் செய்யாததை நான் தான் செய்தேன் என்று அவரது 60 ஆண்டு இசைப்பயணத்தில்  ஒரு முறைகூட சொன்னதில்லை. ஏதாவது கேட்டால் மேல் வானத்தை நோக்கி கையை காட்டிவிட்டு கடந்து போய் விடுவார்..

இவரை முறையாக அறிந்து கொள்ள எண்ணற்ற தகவல்களையும் நுணுக்கங்களையும் ஒரு சேர இணைத்துப்பார்க்கும் இசைத்திறன் வேண்டும்.

இவை கைவரப்பெற்ற திரு முரளி அவர்களும் இசை கலைஞர் திருமதி பிரியா பார்த்தசாரதி அவர்களும் [எவரும் தொடவே பயப்படும்]  'கலைக்கோயில் ' / 'கர்ணன் ' பட  பாடல்களை அலசுகிறார்கள் .

நம்மில் பலர் இவ்விரு ஆய்வாளர்களைக்காட்டிலும் ஆழ்ந்த விற்பன்னர்கள். எனவே அவர்களுக்கு இதெல்லாம் ஒரு பொருட்டே அல்ல. 3, 4 நாட்கள் ஆனாலும் இவற்றை [ஏறெடுத்துப்பார்க்க] போகிற போக்கை பார்த்தால்  G-pay / paytm செய்யச்சொல்வார்கள்.போல் தோன்றுகிறது.  அவ்வளவுக்கெல்லாம் வழியில்லை - அது குருடனை ராஜ விழி விழிக்க சொல்வதற்கு ஒப்பானது. ஏற்கனவே விழிபிதுங்க விழித்துக்கொண்டிருக்கிறேன் .

விருப்பமுள்ளோர் பின் வரும் இணைப்பை உபயோகியுங்கள்

https://www.youtube.com/watch?v=xVq2aBQLt6U   MURALI –PRIYA ON KALAIKOIL KARNAN SONGS     

நன்றி  அன்பன்

No comments:

Post a Comment

MSV’s APPROACH TO SONG COMPOSITION

  MSV’s APPROACH   TO SONG COMPOSITION    எம் எஸ் வி அவர்களின் இசை அணுகுமுறைகள் ஒரு இசை அமைப்பாளரின் தொழில் அணுகுமுறை PROFESSI...