Tuesday, September 15, 2026

PROJECT VISHNU

 PROJECT VISHNU

அதி வேக ஏவுகணை  [விஷ்ணு திட்டம்]

ப்ரஹ்மோஸ் என்ற ராட்சச ஏவுகணையினை தூக்கி சாப்பிட்டு ஏப்பம் விடும் பராக்ரமத்துடன் உருவாக்கப்பட்டு பலரையும் பீதிக்கு உள்ளாக்கும் வகை ஏவுகணை தயாரிக்கும் திட்டம் தான்  PROJECT VISHNU என்றழைக்கப்படுகிறது.

இதன் செயல் பராக்ரமங்கள் பலரையும் கதி கலங்க வைத்துள்ளது. ஏன் எனில் ப்ரம்மோஸ் ரஷ்ய -இந்திய கூட்டு முயற்சி. அதன் அத்தனை சிறப்புகளுடன் மேலும் மேம்பட்ட செயல் திறன் வேகம் வீச்சு என அனைத்திலும் ஏற்றம் கண்டுள்ளதால்  இது ஹைப்பர்சோனிக் வகை ஏவுகணை.

சூப்பர்சானிக் ஏவுகணைகள் ஒலி யின் வேகத்தை விட அதிக வேகத்தில் பாய்வன. சூப்பர்சானிக் ஏவுகணையை விஞ்சும் வேகம் கொண்டவை ஹைப்பர் சானிக் ஏவுகணைகள். இவ்வேகத்தின் குறியீடாக MAC /MACH என்ற சொல் பயன்படுத்துவர். MAC 2 எனில் ஒலி யின் வேகத்தை விட இரு மடங்கு வேகம் உடையது .ப்ரம்மோஸ் வகை MAC 3, 3.5 என்ற வேகம் உடையவை. இந்த வேகம் ராம்ஜெட் வகை எஞ்சின் மூலம் கிடைக்கிறது.

இதன் தகப்பன் போன்ற வேகம் கிடைக்க ஸ்க்ராம்ஜெட் வகை எஞ்சின் பயன் படுத்தப்படுகிறது . இருவகை என்ஜின்களும் காற்றை உள்ளிழுத்து இயங்குவன .அதிலும் ஸ்க்ராம்ஜெட்கள் காற்றை வெகு வேகமாக உறிஞ்சி உமிழ்வதால் ஏவுகணை பாயும் வேகம் பன்மடங்கு அதிகரிக்கிறது. 

இதனால் ப்ரம்மோஸ் சுமார் 800 கிலோமீட்டர் வரை உள்ள இலக்குகளை அழிக்கும், புதிய வகை [விஷ்ணு] ஏவுகணை 1500 கிலோமீட்டர் வரை சென்று தாக்கி பெரும் சேதம் விளைவிக்கும். இவற்றை எந்த ராடரும் கண்காணிக்க இயலாத அளவிற்கு ஆற்றலும் ஏமாற்றும் திறனும் கொண்டவை. இவற்றை வாங்கி தங்களை தற்காத்துக்கொள்ள பலநாடுகள் ஆர்வம் காட்டி வருகின்றன, இவற்றிற்கான இணைப்பு கீழே 

https://www.youtube.com/watch?v=HW-Po9m5ZkE&t=208s hypersonic style Brahmos -INDIGENOUS

நன்றி  

அன்பன் 

மற்றுமோர் எதிரி வீழ்த்தல்

இந்தியாவுக்கு எதிராக தொடர்ந்து தீவிரவாத நடவடிக்கை மூலம் அப்பாவி மக்களை கொல்லும் [மும்பை தாக்குதல், இந்திய பாராளுமன்ற தாக்குதல்,  முதல் காஷ்மீரில் வெவ்வேறு இடங்களில் உயிர்களை கொன்ற தீவிரவாதி சில மணி நேரத்திற்கு முன்பு கராச்சியில் கிழக்கு பகுதியில் மர்ம நபர்களால் பலியானான் என்பது செய்தி. இது குறித்து போலீஸ் மற்றும் அந்நாட்டு அரசு மௌனம் காத்துவருவது மற்றும் இது போன்ற நடவடிக்கைகள் மூலம் பயங்கரவாதிகள் முடிவை சந்திப்பதும் வெகு துல்லிய நடவடிக்கைக்கு சான்றாக பேசப்படுகிறது . பல விவரங்களை மேஜர் திரு மதன் குமார் விவரிக்கிறார் . இணைப்பு கீழே

https://www.youtube.com/watch?v=qHcxqcaMygk&t=314s MMK

நன்றி அன்பன் ம வ


1 comment:

MSV’s APPROACH TO SONG COMPOSITION

  MSV’s APPROACH   TO SONG COMPOSITION    எம் எஸ் வி அவர்களின் இசை அணுகுமுறைகள் ஒரு இசை அமைப்பாளரின் தொழில் அணுகுமுறை PROFESSI...