ECHO OF EXPERIENCE
அனுபவத்தின் எதிரொலி
ஒரு வேண்டுகோள்
கல்வி குறித்த இத்தொடர்
வாசகர்
கோரிக்கை
மற்றும்
வரவேற்பு
என்ற
அடிப்படையில்
பதிவிடப்படுகிறது.
அதே
தருணத்தில்
இது
போன்ற
கல்வி
சார்ந்த
நடைமுறைக்குறிப்புகளை
தேடிப்பிடிப்பது
எளிதல்ல.
ஏனெனில்
கல்வியை
பொருளீட்டும்
துறையாக
மாற்றி
சுமார்
40 ஆண்டுகள்
ஆயிற்று.
எனவே
அதுதான்
நடைமுறை
என்றே
பெற்றோரும்
எண்ண
தலைப்படுவது
-ஒரு
கவலை
தரும்
போக்கு.
குழந்தைகள்
நாட்டம்
கொண்டு
பயில்வதற்கு
ஆவன செய்வது சமுதாயக்கடமை. ஆனால் கல்வி
என்பது
அட்மிஷன்
வாங்கி
ட்யூஷன்
அமைப்பது
என்ற
ஒன்றே
கடமை
என்று
கட்டமைத்துவிட்டனர்.
ட்யூஷன் படிப்பது
கேவலம்
என்ற
நிலை
மாறி
அதுவே
கௌரவம்
அந்தஸ்து
என்று
நம்பி
அலையும்
மாந்தர்
கூட்டம்
, டிவி
க்கு
ஒதுக்கும்
நேரத்தை
குழந்தையுடன்
அமர்ந்து
சிறுக
சிறுக
சொல்லித்தர
உங்கள்
வீட்டில்
கல்வியும்
அமைதியும்
எளிதில்
குடியேறும்
. எனவே
இயன்ற
வரை
வீட்டில்
அமர்ந்து
படிப்பது
,வீட்டுப்பாடங்களை
அன்றாடம்
முடிப்பது
எனத்தொடங்கினால்
விளையாட்டு
என்ற
ஒரு
உடல்
மன
ஆரோக்கிய
கட்டமைப்பு
வலுப்பெறும்.
குழந்தைக்கு
விளையாட
நேரம்
எங்கே
இருக்கிறது
. ட்யூஷன்
குறைந்தால்
தேவையற்ற
நட்புகள்
தவிர்க்கப்படும்.
நீ யாரைய்யா எங்களுக்கு
சொல்ல
? என்போர்
உங்களுக்கு
ஏதேனும்
தெரிந்தால்
அதையாவது
செயல்
படுத்துங்கள்.
ட்யூஷன் என்பது
அரிதிலும்
அரிதாக
இருக்க
வேண்டிய
ஒன்று.
எனவே
இவ்வாண்டு
விஜய
தசமி
முதல்
மெல்ல
மெல்ல
குழந்தைக்கு
உங்களது
கல்வியின்
பங்களிப்பை
அதிகப்படுத்துங்கள்.
நல்லது
நடக்கும்.
.
ECHO
OF EXPERIENCE
அனுபவத்தின் எதிரொலி
எனது ஆசிரியப்பணியின் அனுபவம் குறித்து அறிந்துகொள்ள திரு ராகவன் சம்பத் விடுத்த கோரிக்கையை வாசகர்கள் முன் வைத்து கருத்துக்கேட்க முனைந்ததை நீங்கள் அறிவீர்கள்.
பதிவிட்ட 1 சில நிமிடங்களிலேயே அதிகம் எதிர்பார்ப்பு இருப்பதாக 8 வாட்சப் செய்திகள் வந்தன. எனவே 'அனுபவத்தின் குரல் ' எனும் தலைப்பில் எழுதலாம் என்று தோன்றுகிறது. இதனை வெளியிடும் போது அவ்வப்போது மாணவர்களின் கருத்தையும் பதிவிட நேர்ந்தால் அதன் பரிமாணம் சற்று விரிவடையும். போகப்போகப்பார்ப்போம்.
எனினும் இதில் நாம் பெரிதும் உணர வேண்டியது 1 கல்வி ஏன் கசக்கிறது?
2 ஆசிரியர் ஏன் கேலிப்பொருளாகிறார்? 3 மனித வளமும் மேம்பாடும் 'மார்க்' என்ற எண்ணிக்கையில்
அடங்கிவிடக்கூடிய ஒரு சிறிய திறன் அளவுகோலா?
அடைய வேண்டியதை நோக்கி பயணிக்காமல் ;மார்க்' தான் வாழ்வு என்ற வஞ்சக போதகம் வேரூன்றியது ஏன்/எப்படி?
இவற்றை ஆய்வு செய்தால் திசை மாறி பயணித்து புரிதலையும் திறமையையும் அடகு வைத்துவிட்டு முன்னேற துடிக்கிறோம்
என்பது விளங்கும். இவ்வனைத்திற்கும்
அடிப்படை, தனிமனித திறன்களை முடக்கிவிட்டு பலரும் என்ஜினியரிங் /மெடிஸின் என்றுஅலைந்ததே
காரணம் . இவ்வாறு அலைவதால் பயனில்லை என்றுணர 40 ஆண்டுகளைத்தொலைத்த
சமுதாயம்
நமது.
மடமையை கசக்கி காசாக்கிய கல்வித்தந்தைகள் எண்ணற்றோர். தமிழகத்தில் கல்வி என்பது பண முதலைகளுக்கும்
அரசியல்
கோமாளிகளுக்கும் பணமுதலீட்டிற்கும், கொழுத்த லாபம் ஈட்டவும் வாய்த்த ஒரு ATM ஆனது
இப்போது பிழைப்பில் மண் விழுந்ததால்
தேவையற்ற வாதங்கள் நடக்கக்காண்கிறோம்.
ஆசிரியப்பணி என்பதுதான் என்ன?
இதுவே அனைத்து கல்வி சார்ந்த இயக்கங்களுக்கும் மையப்புள்ளி. மேலும் அதுவே
துவக்கப்புள்ளியும் என்பதே உண்மை.
ஒரு ஆசிரியன் என்பவன் பிறரால் வடிவமைக்கபடும் 'பொம்மை' அல்ல. ஒவ்வொரு ஆசிரியனும் தன்னைத்தானே கட்டமைக்க வேண்டும் என்பதே ஆசிரியப்பணியின் 'அரிச்சுவடி' என்பதே நான் உணர்ந்த முதல் பாடம். இதை எனக்கு உணர்த்திய பெருமைக்கு உரியவர்கள்
எனது பேராசிரிய பெருமக்கள். அவர்களது செயல் திறன், வாதத்திறமை, முறையான அணுகுமுறை இம்மூன்றும் கொண்டே ஒரு ஆசான் தன்னை வடிவமைத்துக்கொள்கிறார். என நான் புரிந்து கொண்டேன்
செயல் திறனில் பாடத்திட்டம் குறித்த அவரது ஆழ்ந்த புரிதலும், updating எனப்படும் புதுக்கருத்துகளும் தீர்க்கமான தர்க்கவாதங்களும் அடங்கும். வாதத்திறமை என்பதில் கோர்வையான
கருத்துகளும், அவற்றை முன் வைக்கும் சொல்லாடலும் அடங்கும்.
முறையான அணுகுமுறை என்பதில் எளிய அடிப்படையில் துவங்கி படிப்படியாக உருவாக்கப்படும் கருத்தியலும் இடம் பெறும் [முன்னுக்குப்பின் குழப்பம் இல்லாமல் சீறாகப்பேசும் திறனும் பொறுக்கி எடுத்த சொல் வரிசை அமைப்பும் ஆசிரியனுக்கு அடிப்படை அணிகலன்கள்].
எனவே தான் ஆசிரியன் பிறரின் தயாரிப்பு அல்ல. நல்லாசிரியர்கள் ஒருவனை ஈர்த்து முன்னேறவைக்கும் பெரும் சமுதாயப்பொறுப்பாளிகள். ஒருவன் அவர்களிடமிருந்து கற்றுக்கொண்டு பின்னர் தன்னைத்தானே கட்டமைத்து வடிவமைக்கிறான். இதற்கு ஆதாரம் வேண்டும் எனில் இந்த உதாரணத்தை ஆழ்ந்து கவனியுங்கள்.
உங்களது மாணவ காலத்தில் பல்வேறு பாடங்களை வெவ்வேறு ஆசான்கள் வழியே கற்றிருப்பீர்கள். ஒவ்வொன்றிலும் சிறப்பாக பயிற்றுவிக்கும் ஆசிரியர்கள் உள்ளனர். அவர்கள் உங்கள் பயிலும் நாட்களில் உங்களுக்கும் கற்பித்திருப்பார்கள். அவர்களை ஒப்பிட்டால் எந்த இரண்டு ஆசிரியர்களின் அணுகுமுறையும் ஒரே மாதிரி இருப்பதில்லை. இருவரும் போதிப்பதில் திறன் படைத்தவர்கள். வெவ்வேறு முறைகளில் வெகு சிறப்பாக விளங்க வைப்பார்கள். இதிலிருந்தே புரிந்துகொள்ளலாம் ஒவ்வொரு ஆசிரியரும் தனக்கென்றே பாதை வகுத்து அதில் முத்திரை பதிப்பவர் என்று.
இதைப்புரிந்துகொள்ளாமல் ஏனோ தானோ வகை முயற்சியின் விளைவே ஆசிரியர் கேலிப்பொருள் ஆவதன் பின்னணி. அவற்றை விளக்கும் போது மேலும் பல தகவல்கள் தலை தூக்கும்
ஆசிரியப்பணியின் சிறப்பு மாணவர் தரும் அன்பும் மரியாதையும் பாராட்டும். ஆசிரியருக்கு 'உரிய' பாராட்டு கிடைக்கும் மாணவர்களிடம் . அவ்வகையில் ஒரு மாணவர் கருத்து கீழே பதிவிட்டுள்ளேன் அவர் பெங்களூருவில் தனியார் நிறுவனத்தில் பணி புரிந்து ஓய்வு பெற்று பெங்களூரு நகரில் இருக்கிறார். இன்றும் எங்கள் தொடர்பு நீடிக்கிறது.
Attributes of Prof.
Raman.-as I Perceived
|
|
Received on 04-10 -26
The
writer is Mr. Leslie Antony an old student of The Madura college Madurai .He
was a student of BSc –Physics[1974-77] ;
he was interested in learning Photography and joined the Photo club that was
being run by me . He has tendered his views . It helps me to perceive what they
felt of me .
What stands out most to me was his genuine commitment to helping students develop practical skills. In my case, he went beyond simply offering guidance. He personally spent his own money to support my learning and development in radio assembly. His willingness to invest in my skill development showed how deeply he believed in encouraging students and helping them discover and build their abilities.
Prof. Raman was also a person who valued discipline very highly. He was particular about regular attendance and expected students to be punctual, committed, and consistent in their work. His approach taught us that developing any skill requires not only interest and talent, but also discipline, dedication, and regular practice.
My sincere thanks and pranams to Prof. Raman.
Regards,
LeslieAnthony,
BSc. (Physics)1974- 1977. The Madura
College, Madurai.
தொடரும்
அன்பன் மவ
No comments:
Post a Comment