ECHO OF EXPERIENCE -6
The route to success for a teacher -2
ஆசிரியப்பணியில் வெற்றிக்கு திறவுகோல் -2
எந்த வெற்றிக்கும் திறவுகோல், முயற்சி தான் என்பது அசைக்கமுடியாத உண்மை.
முயற்சி என்பது அரைகுறை அணுகுமுறை அல்ல. மாறாக படிப்படியாக தன்னை கட்டமைத்துக்கொள்வது ஒன்றே சரியான அணுகுமுறை,
ஆசி ரியப்பணியை பலரும் எளிதாக எண்ணுகிறார்கள். அது ஏன் எனில் கல்வி முடித்தாயிற்று எல்லா பட்டமும் வாங்கியாயிற்று , போய் வகுப்பில் சொல்லித்தரவேண்டியது தானே? இதிலென்ன கஷ்டம் என்பது சராசரி மாந்தரின் ஐயம் / கேள்வி / வியப்பு மற்றும் பார்வை. மேலோட்டமாகப்பார்த்தால் சராசரி வெகுஜன அபிப்ராயம் நியாயமானதாகவே தோன்றும், ஆனால் கள நிலவரம் வேறு நீங்கள் நினைக்கும் "இருக்கவே இருக்கு வாத்யார் வேலை" என்ற வாசகம் ஏட்டுச்சுரைக்காயை விட மோசம். "இருக்கவே இருக்கு வாத்யார் வேலை" என்று சொல்பவர் எவரும் ஆசிரியப்பணியின் சீரிய செயல் தேவைகளை புரிந்துகொள்ள வில்லை என்பது தான் பொருள்.. அப்படி 'இருக்கவே இருக்கு' என்று ஆசிரியப்பணியில் இறங்கியவருக்கு -இருக்கு இருக்கு செம்மையா இருக்கு நல்லா வாங்கப்போற என்பதே உண்மை.
நான் சொல்லும் இந்த சூழலை மனக்கண்ணில் நிறுத்துங்கள் . இன்று அல்லது நாளை ஒரு கல்வி நிலையத்தில் நீங்கள் பட்டம் பெற்ற துறையில் 10ம் வகுப்போ அதற்கு மே லோ XII அல்லது பட்டவகுப்பில் 40-45 பேர் உள்ள இடத்தில் 1 மணி நேரம் [55 நிமிட ] வகுப்பை உங்களால் அழகாக போதித்துவிட்டு கௌரவமாக வெளியில் வர இயலுமா? "இருக்கவே இருக்கு வாத்யார் வேலை" என்ற நிலைப்பாடு எவ்வளவு அபத்த க்களஞ்சியம் என்பது நீங்கள் போதிக்கத்துவங்கிய 2 நிமிடத்தில் விளங்கும். ஏன்? ஆசிரியரை கேலிப்பொருள் ஆக்கி அவரை முடக்கி மடக்க மாணவர்கள் எப்போதும் ஆயத்தமாக இருப்பது பொதுவான நிலை. அவர்களை திக்குமுக்காட வைக்கும் கலை அறிந்தாலன்றி 'இருக்கவே இருக்கு' என்று கிளம்பியவருக்கு நிச்சயம் இருக்கு “விசேஷ பூஜை” என்பது தான் உயர்கல்வியில் எதிர்நோக்க வேண்டிய சூழல்.
புதிய ஆசிரியர் என்பவர் அனுபவம் குறைந்தவர் எனவே இவரை எதிர்கொள்வது எளிது என்பது மாணவர்களின் பொதுவான நிலைப்பாடு. எனவே ஆசிரியரை முந்திக்கொண்டு பேசி தங்களின் ஆதிக்கம் நிலைபெற முயல்வார்கள். அவர்களை வாய்ச்சொல் மிரட்டலால் அடக்க நினைப்பது பலன் தராது. பாடப்பகுதியில் உங்களின் ஆழ்ந்த புரிதல் வெளிப்பட்டால் மட்டுமே -ஐயோ இவன் second year படிப்பவன் போல் இருக்கிறான் ஆனால் தயக்கம் இன்றி பேசி புலிப்பாய்ச்சல் காட்டுகிறான், இவனிடம் சிக்கினால் நம்மை கொத்துபரோட்டா போட்டுவிடுவான் போலிருக்கிறதே என்று மிரட்சியுடன் அமைதி கொள்வான்/ கொள்வார்கள்.
இந்த இடத்தில் உங்களின் பாடப்புரிதலும், மொழியின் வளமும் நீங்கள் பிரயோகிக்கும் ஆயுதங்கள். திடீரென்று ஏதாவது கேள்வி கேட்டு ஆசிரியரை தடுமாற வைக்க முடியுமா என்ற முயற்சிகள் அவ்வப்போது தலை தூக்கும். கவலையே பாடாமல் “வகுப்பின் கடைசி 5 நிமிடம் ஒதுக்கித்தருகிறேன் அப்போது பேசுவோம்” என்று நீங்கள் தயார் நிலை ஆசாமி தான் என்று புலப்படுத்து வதோடு, இறுதி 5 நிமிடம் இருக்கும் போது "என்ன கேள்வி?" என்று கேட்டால் முறையான சந்தேகம் இருந்தால் கேள்வி வரும். இன்றேல் அமைதி நிலவும். இதை நீங்கள் ஆரம்ப நிலையிலேயே கைக்கொண்டால் இவன் ராவணன் என்று ஒதுங்கிப்போவார்கள். சரி இவற்றை கைக்கொள்ள என்ன தேவை?
அதை எதிர்கொள்வது எப்படி?
Mongoose என்ற கீரிப்பிள்ளை அணுகுமுறையே ஆசிரியப்பணியில் ஆரம்ப நிலையில் இருப்போருக்கு சரியான வழி காட்டி. . கீரி எப்போதும் தாக்க துடிக்கும் பாம்புகளை சந்திக்கும் ஒரு சிறிய ஆனால் லாவகமான சாதுர்யம் மிக்க பிராணி. அந்தக்கூட்டத்தில் ஆசிரியரும் சிறிய கீரி போன்றவர் தான்.ஆனால் சீறிய பாம்பைக்கண்டு ஓடாமல் கீரி எதிர்கொண்டு விரைந்து தாக்கும்.
ஆசிரியன் தாக்குவது கூடாது ஆனால் சொல்லாடல், விரைவு, மொழி வன்மை கொண்டு முழுவன்மையோடு பேச ஒரு போதும் தயங்கவே கூடாது. அதனால் நான் எப்போதும் சொல்வது ஆங்கிலத்தை / தமிழை வளமாக்க முயற்சிமேற்கொள்ளுங்கள். பயிலும் காலத்திலேயே இதுபோன்ற மொழி வன்மை நன்கு வயப்பட்ட வேண்டும். அவன் சொன்னன் இவன்சொன்னன் என்பதைக்கடந்து சிவன் சொன்னான் என்றாலும் உங்கள் மொழி அறிவு மேம்பட வேண்டும். இல்லையேல் போட்டித்தேர்வுகளை எதிர்கொள்ளுதல் எளிதன்று.
ஒட்டு அரசியல் செய்பவனின் பிதற்றல் பொதுமக்களுக்கு உதவாது எனவே நமது கல்வியின் தரம் ஒன்றே நம்மைக்காக்கும் கேடயம்.
சரி கீரிப்பிள்ளை அணுகுமுறை என்ன?
வகுப்பில் நுழைந்ததும் போர்ட் எனும் கரும்பலகை பக்கம் திரும்பிக்கொள்ளாதீர்கள். அது பயத்தின் அறிகுறி.
கீரி போல் தலையை உயர்த்தி வகுப்பை முழுவதும் நோட்டம் விடுங்கள். நீங்கள் நேருக்கு நேர் கண்களால் அலசுகிறீர்கள் என்றதும், எங்கே நம்மை அடையாளம் கண்டுவிடுவாரோ என்று இடையூறு செய்ய நினைப்பவர்கள் கண்டிப்பாக அடங்கிப்போவர்.
சிக்கிக்கொள்ளாமல் சிக்கல் ஏற்படுத்துவது தான் மாணவப்பருவத்தினரின் செயல் முறை. ஆனால் இதுபோன்ற குறுக்கீடுகள் தேவையில்லாத சஞ்சலம் மூலம் ஆசிரியரின் கவனத்தை சிதைக்கும். சிதைக்க நினைப்போரை சிதைப்பதே சிறந்த நெறி. அதுவே கீரிப்பிள்ளையின் அணுகுமுறையும் அதற்கான ALERTNESS என்னும் ஆயத்த நிலையும் . இவை ஆசிரியப்பணிக்கு மிகவும் தேவையான எச்சரிக்கை. இவற்றை நடைமுறைப்படுத்தக்கற்றுக்கொண்டால் ஐயோ வம்பே வேண்டாம் என்று சிதறி ஓடுவதுடன், அமைதி காத்து பாடம் கேட்கும் மனநிலைக்கு வருவார்கள். இவை மட்டுமே போதுமா? இல்லை இனிமேல் தான் ஆசிரியன் கடைபிடிக்கவேண்டிய அணுகுமுறைகள் குறித்து ஆய்வோம்.
Student response is from DR VEERA SUBBIAH who received critical inputs for facing NEET exams with ease and delight . Though he is from a humble background his thirst to be MEDICAL PROFESSIONAL was quite evident and proved the need to teach them in all depth .I am hapy that he is Doctor to-day and would achieve higher laurels in due course.
|
12:23 PM (29 minutes ago) |
|||
I am Dr.Veerasubbiah MBBS. When I was preparing for NEET-UG,
Raman Sir was my botany teacher, and honestly, my first impression wasn't
great. I felt his classes were way too heavy for what the exam actually needed,
and I thought he was pretty strict.
But as weeks went on, everything started making sense. I finally
understood why we needed that deep, thorough knowledge—it's the only way to
quickly crack those tricky, superficial questions. I also realized why he would
get upset when someone showed up 10 or 15 minutes late because Sir was always
right on time, down to the minute. A professor who takes his duties so seriously
naturally expects the same respect from his students.
Academically, he made a different orientation towards the
subject. He completely changed how I looked at evolution, a topic I used to
struggle with. After his classes, any topic in evolution became easy to
approach. The way he connected evolution to anatomy and physiology was
brilliant and has stayed with me ever since. Even though he taught us way more
than the standard entrance exam syllabus required, the biggest takeaway was
learning how to actually study and dig into a subject.
Back then, when we were complete beginners asking silly
questions, he would answer every single one clearly and off the top of his head
without looking at any notes. That showed just how experienced he truly is.
Raman Sir has been a huge inspiration for me in the way of being such dedicated
and to be well versed with knowledge.
ஒவ்வொருவருக்கும் தான் பயின்ற பள்ளி / கல்லூரி மீது உள்ளார்ந்த பற்றும் நேசமும் இருக்கும். அந்த உணர்வு அந்த கல்வி நிலையத்தை விட்டு அகன்று வெளியுலக வாழ்வில் எதிர்கொள்ளும் சூழல்களை எண்ணிப்பார்த்து எவ்வளவு ரம்மியமான சூழலை விட்டு வெளி வந்துவிட்டோம் என்ற உணர்வு தலைதூக்கும் போது மேலும் அதிகரிக்கும் . முன் போல் நினைத்த அறைக்குள் நுழைய முடியாது.பிறந்த வீட்டில் அந்நியன் ஆன நிலை தான் அது. அப்போது அந்தக்கல்வி நிலையத்தின் பால் உங்களின் ஈர்ப்பு மேம்படும் . அதன் வெளிப்பாடே சமீபத்தில் திருச்சி சீதாலட்சுமி ராமசுவாமி கல்லூரியில் திருமதி நிர்மலா சீதாராமன் [முன்னாள் இந்திய நிதி அமைச்சர்] அவர்களின் உரை தரும் தெளிவு. கல்லூரியை எவ்வளவு நேசிக்கிறார் பாருங்கள் .இணைப்பு இதோ
Nostalgia of ALMA MATER https://www.youtube.com/watch?v=m7Pq5075xOQ
Former FM Mrs NIRMALA
SITARAMAN
******************************************************************************
No comments:
Post a Comment