Saturday, November 21, 2026

ECHO OF EXPERIENCE -7

 ECHO OF EXPERIENCE -7

The route to success for a teacher -3

DRAWING SUSTAINED ATTENTION

கவனத்தை ஈர்த்து தக்கவைத்தல்

மாணவர்கள் ஆசிரியரை அடியொற்றி வரவேண்டும் எனில் சில அடிப்படை  உத்திகள் தேவை.

1 ஆசிரியர் சொல்வது நன்கு புரிகிறது  எனவே கவனமாக கேட்டால் பாடங்களில் சிக்கல் தோன்றாது என்று பயில்வோர்  ஏற்றுக்கொள்ள வேண்டும்.

அதற்கு கருத்துகள் முறையான வரிசையில் தெளிவான மொழியில் முதலில்  வெகு விரைவாக பேசினால் ஐயோ புரியவில்லையே என்று சற்று கலக்கம் தோன்றும்;  குழம்பிய முகத்துடன் சோகப்பார்வை பார்ப்பர். அந்த சூழலில் இரண்டாம் முறை நல்ல நிதானமாக சொல்லிவிட்டு , இதையே தான் முதலில் சொன்னேன், எங்கோ பார்த்துக்கொண்டிருந்தால்  எப்படி புரியும் ? என்று கண்டிப்பு தொனியில் பேசினால் , இனி இவரின் சொற்களை நன்கு ஊன்றி பின் தொடரவேண்டும் என்ற நிலைப்பாடு பயில்வோர் மனதில் எழும். இப்படி ஒரு ஆசிரியரின் அணுகுமுறைக்கு பழகிவிட்டபின் எப்போதும் கவனச்சிதறல் இன்றி பின் தொடர்வர். அப்படியும் சிலர் ஏனோ தானோ பார்வை கொண்டிருப்பின் அவனை/ அவளை நிற்க வைத்து எங்கே நான் சொன்னதை திரும்ப சொல்லுங்கள் என்று கேட்டால் அனைவரும் இவர் ஆபத்தானவர் நம்மை நன்கு கவனிக்கிறார் என்று வெகுவாக உணர்வர். நான் முன்னம் சொன்ன mogoose /கீரி ப்பார்வை அவர்களுக்குள் ஒரு எச்சரிக்கை உணர்வை மீண்டும்  தோற்றுவிக்கும். இதுதான் எளிய அதிர்ச்சி வைத்தியம். மாறாக பயில்வோரிடம் அன்பு பாராட்டுவதாக ஹி ஹி ஹி என்று அசடு வழிந்தால் காலப்போக்கில் வகுப்பு அரட்டை அரங்கம் ஆகும். பலரும் அதை விரும்பினாலும் ஆசிரியர் என்ற கம்பீரத்தை இழந்து முறையாக கற்பிக்க இயலாமல் பயில்வோர் உங்களை கிள்ளுக்கீரையாக கையாள்வதுடன் அவருக்கு கற்பிக்கத்தெரியாது என்று முத்திரைகுத்தி   அதை ஊரெங்கும் [பிற கல்லூரி அன்பர்களிடமும்] சிறப்பாக பரப்புவர். இவைதவிர ஏராளமான புனைப்பெயர்கள் கேலிச்சித்திரங்கள் இவற்றில் மைய நாயகன் அது போன்ற ஆசிரியர்களே என்பது நெடுங்கால வரலாறு.

ஒவ்வொரு பாடப்பகுதியிலும் உலகத்தரம் வாய்ந்த நூல்களை ஊன்றிப்படித்து வகுப்பில் போதிக்கும் போது இந்த கருத்துகள் எந்த புத்தகத்தில் இருக்கிறது என்று மாணவர்கள் வியப்பும் மதிப்பும் கொள்வர். அவ்வகை நூல்களில் கருத்துகள் பிழையின்றி ஆணித்தரமாக இருப்பதால் போதிப்பவர்க்கு மிகுந்த ஆர்வமும் தன்னம்பிக்கையும் தோன்றும். தரக்குறைவான பதிப்புகளில் ஆழ்ந்த விளக்கமோ வலுவான மேற்கோள்களோ இருக்காது. மாறாக பூசி மெழுகி எழுதியிருப்பார்கள். அதை நம்பி உயர்வகுப்பில் போதிப்பது சரியாகுமா ? அது சமூகக்குற்றம் . எனவே நல்ல நூல்களை தேடி ஆழ்ந்து கற்றல் என்பதே சரியான அணுகுமுறை.

போய்யா -இப்படி எல்லாம் மேலும் மேலும் படித்து சொல்லித்தரவேண்டுமா? என்று சிலர் கோபம் கொள்ளக்கூடும்.               நான் சொல்வது ஆசிரியப்பணியில் தன்னிகரில்லா தனித்திறன் எட்ட விழைவோருக்கானது.

அவை எல்லாம் வேண்டாம் எனக்கு சுந்தரேசன் கையேடும் சுப்பிரமணியனின்   'நோட்ஸ்' ம் இருக்கிறது என்று நினைப்பவர்களுக்கு நான் ஏதும் சொல்வதிற்கில்லை. எனது அனுபவம் உணர்த்திய தகவல்களில் மிக முக்கியமானது ஆகச்சிறந்த விளக்க புத்தகங்கள், ஆய்வுத்தொகுப்புகள் இவற்றை தேடி கற்பிக்க முயன்றால் உங்கள் மாணவர்கள் மேலும் உயர்ந்த கல்விநிலையங்களுக்குள் இடம் பெற்று உயர மிகப்பெரும் உதவியாக அமையும். அப்படி சில கல்வி நிலையங்களில், மூத்த பேராசிரியர்களால் எனது முயற்சிகள் விவாதிக்கப்பட்டதாக  நான்      கேள்வி ப்பட்டதுண்டு.

அவை ஒரு ஆசிரியனின் முயற்சிக்கு உயர் கல்விநிலையங்கள் வழங்கும் உன்னத அங்கீகாரம் என்பதில் இருக்கும் பெருமை அலாதியானது

இதனால்  உனக்கென்ன- கிரீடம் வைத்துவிட்டார்களா?  என்று சிலர் /பலர் கேட்கலாம். உண்மை தான்.

 ஆனால், “படுபாவி வகுப்பில் சரியாக சொல்லித்தராமல் ஏமாற்றி விட்டான்” என்று என் செயல் குறித்து [வகுப்பிலும் / சோதனைக்கூடங்களிலும்] யாரும் ஒரு விநாடிப்பொழுது கூட அங்கலாய்த்ததில்லை. எந்த அரங்கி லும்   மேடை ஏறி துறை சார்ந்த கருத்துகளை விளக்கமாக பேச ஒரு ஆசிரியனால் முடியும் என்று கம்பீரமாக சொல்ல முடியும் என்பதே ஆசிரியப்பணியின் முறையான அணுகுமுறை தரும் வெகுமதி என்பதில் எள்ளளவும் ஐயம் இல்லை அடியேனுக்கு

……………………….

ஒவ்வொரு மாணவருக்கும் ஏற்படும் உணர்வுகள்  மாறுபட்டவை. இன்றைய மாணவர் பதிவில் திரு கிளாடிஸ் லாலி அவர்களின் அனுபவம் அவர் சொற்களிலேயே வழங்கப்படுகிறது. நீண்ட அனுபவம் 5 ஆண்டுகளும் [    ] மதுரைக்கல்லூரியிலியே தவழ்ந்து வளர்ந்து நடந்து உயன்றவர். எனவே கல்லூரியின் மீது நீங்காத பற்றுகொண்டவர்  நல்ல உயரங்களை தொட்டவர், . பண்பாளர். அவரது எண்ண ஓட்டம் இதோ

Mr. GLADIS LALI, J

# MADURA COLLEGE – A TREASURE OF MEMORIES

### My unforgettable journey since 1985

 

In 1985, I joined **The Madura College, Madurai**, coming all the way from Theni to pursue my undergraduate studies in **B.Sc. Botany**, with Zoology and Chemistry as my ancillary subjects.

 

Joining this reputed institution, with its glorious history of over a century, was one of the most memorable milestones in my life.

 

### My Academic Journey

 

The Madura College was academically strong, with experienced, dedicated and knowledgeable faculty members across various departments.

 

In the Botany Department, two teachers who made a lasting impression on us were **Mr. Raman and Mr. Sriganesan**.

 

Mr. Sriganesan was a remarkable taxonomist, widely admired for his intelligence and profound knowledge of plant taxonomy across India.

 

Mr. Raman's teaching was truly exceptional. We admired the way he taught Physiology, Anatomy, Ecology and Cell Biology. His dedication, subject knowledge and teaching methodology were outstanding. His English pronunciation, clarity of expression and communication skills were particularly impressive. Both teachers were sincere, punctual and deeply committed to their profession.

 

I also fondly remember our respected teachers from other departments:

 

- **Mr. Murthy** – Zoology

- **Mr. Balasubramaniam** – Organic Chemistry

- **Mr. Sowminarayanan** – Tamil

- **Mr. Narasimman** – English

 

Their contributions to our academic development were invaluable.

 

### My Postgraduate Journey

 

My association with Madura College continued even after my undergraduate studies. I pursued my **M.Sc. Botany at the same institution**, discontinuing my earlier association with American College.

During my postgraduate years, I had the opportunity to learn from some more wonderful teachers.

**Mr. G. Goplann** was a very simple and innocent person. **Mr. K.M.R. and Mr. Jeyaraman** were extremely friendly and approachable teachers. Their affection and encouragement made our college life even more memorable.

 

### Unforgettable Hostel Life – TVS Hostel

Beyond academics, my hostel life remains one of the sweetest memories of my college days.

I stayed at **TVS Hostel**, and the food served there was absolutely delicious. Even today, I cannot forget some of the signature dishes!

The unforgettable combination was:

- வெண் பொங்கல் (Ven Pongal)

- தக்காளி சாதம் (Tomato Rice)

- Chapathi with Kurma

These simple yet delicious meals bring back wonderful memories of hostel life. The food, friendship, companionship and everyday experiences made those days truly special.

### What Madura College Gave Us

மதுரைக் கல்லூரி எங்களை வளர்த்தது; மறக்க முடியாத இனிய அனுபவங்களைத் தந்தது.

The college shaped our academic foundation, broadened our knowledge and gave us experiences that remain precious throughout our lives.

The institution had a wonderful academic atmosphere, experienced faculty members and a rich educational tradition. I also fondly remember the gallery in the college playground, which remains part of my memories of the campus.

### A Small Regret

While we received excellent academic training, I sometimes feel that students could have benefited from better career guidance and exposure to future opportunities.

In particular, more awareness and guidance regarding competitive examinations such as GATE and other career opportunities would have helped students plan their futures more effectively.

This is only a constructive observation, because our gratitude and affection for the institution remain unchanged.

### Forever Grateful – Long Live Madura College!

When I look back, my years at Madura College were among the most beautiful and unforgettable chapters of my life.

The teachers, classrooms, laboratories, hostel food, friendships and countless little experiences have all become priceless memories.

**கல்லூரி வாழ்க்கை என்பது கல்வி மட்டுமல்ல; அது நம் வாழ்க்கையை உருவாக்கும் அழகான அனுபவம்.**

Madura College, you gave us knowledge, confidence, friendships and memories that will remain with us forever.

We may have moved on in our lives, but a part of our hearts will always remain on your campus.

**We never forget you, Madura College.**

**Long Live Madura College!**

With love, respect and everlasting gratitude.

Gladies lali. J

______________________________________________________________________________

No comments:

Post a Comment

HYPERSONIC MISSILE

 HYPERSONIC MISSILE  அதி விரைவு ஏவுகணை இது என்ன ? வேறொன்றுமில்லை ஏற்கனவே பல நாட்டவர்க்கும் புளியை   கரைத்துக்கொண்டிருக்கும் ப்ரம...